வேறு ஒரு நாட்டில் தங்கி வரும் இந்தியப் பயணியால் தொற்று ஆபத்து குறைவு

இந்­தி­யா­வில் இருந்து வரும் பயணி­க­ளுக்குச் சிங்­கப்­பூர் தடை விதித்து இருக்­கிறது.

அந்த நாட்­டில் கொவிட்-19 தொற்று அதி­க­மாக இருப்­பதே இதற்­கான கார­ணம் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

ஒரு­வர் இந்­தி­யா­வில் இருந்து புறப்­பட்டு வேறு நாட்­டில் தங்­கி­யி­ருந்து பிறகு சிங்­கப்­பூர் வரு­கி­றார் என்­றால் அவ­ரால் தொற்று ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்து இந்­தி­யா­வில் இருந்து நேர­டி­யாக வரும் ஒரு­வ­ரால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­தை­விட குறை­வாக இருக்­கும் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர்-ஹாங்­காங் இரு­தரப்பு பயண தொடக்­கம் பற்றி அறி­வித்த செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது அமைச்­சர் இவ்­வாறு கூறி­னார்.

ஒரு­வர் ஓர் இடத்­தில் குறிப்­பிட்ட காலம் தங்கி இருக்­கி­றார் என்­றால் அந்த இடத்­தின் கொவிட்-19 நில­வ­ரம்­தான் கருத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­டுமே தவிர அவர் எந்த நாட்­டைச் சேர்ந்­த­வர் என்­பது கருத்­தில் கொள்­ளப்­ப­டாது என்றார் அவர்.

இந்­தி­யா­வுக்கு வெளியே குறைந்­த­பட்­சம் 14 நாட்­கள் தங்கி இருந்­தி­ருக்­கக்­கூ­டிய பய­ணி­களுக்கு மட்­டுமே அனு­மதி என்று சிங்­கப்­பூர் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!