மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் ஆட்சி உறுதி

கோல்கத்தா: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாயின.

மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவெந்து அதிகாரியை விட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது என முன்னதாகக் கூறப்பட்டது. இருப்பினும் கடைசிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் அவர் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெற்றதாகக் கூறப்பட்டது.

இருப்பினும் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசும், அசாமில் பாஜகவும், கேரளாவில் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
இந்திய மாநிலத் தேர்தல்களில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக பலராலும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலாகக் கருதப்பட்டது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், மம்தா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 219 தொகுதிகளில் முன்னிலை பெற்று மூன்றாவது முறை ஆட்சியமைப்பதை உறுதிசெய்துள்ளது.

இதனையடுத்து அவருக்கு மமதா பானர்ஜிக்கு உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி 76 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்திலும் சிபிஐ ஓர் இடத்திலும் முன்னணி பெற்றுள்ளன. இரண்டு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் 8 கட்டங்களாக நடைபெற்றது.

முதலமைச்சர் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் அடங்கிய கூட்டணி என மும்முனைப் போட்டி இருந்தபோதிலும், திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவியது.

மேற்கு வங்கத்தை எப்பாடுபட்டாவது தங்கள் வசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருந்தது. அதற்காக டெல்லியில் இருந்து ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் மேற்கு வங்கத்தில் முற்றுகையிட்டு, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரது தேர்தல் பேச்சுகளுக்கும் தனி ஒருவராய் நின்று பதிலடி கொடுத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் மம்தா.

மம்தா கட்சியிலிருந்து அவருக்கு நெருக்கமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை தங்கள் பக்கம் இழுத்து அவரை பாஜக நிலைகுலைய வைத்தது.
ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விடுப்பதற்கு முன்னரே பாஜகவும் அதன் தலைவர்களும் மேற்கு வங்காளத்தில் அதிகக் கவனம் செலுத்தி தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர்.

முன்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலேயே மேற்கு வங்காளத்தில் மத்திய கட்சியான பாஜக 18 இடங்களைக் கைப்பற்றியது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ், 22 இடங்களை மட்டுமே வென்றது. அப்போதே மேற்கு வங்கத்தில் பாஜக இரண்டாவது பெரிய கட்சித் தகுதியைப் பெற்றது. அந்த நம்பிக்கையில், மேற்கு வங்க மக்களின் நன்மதிப்பைப் பெற்றுவிட வேண்டும் என அக்கட்சித் தலைவர்கள் மும்முரமாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுவந்தனர்.

அடுத்தடுத்து பிரதமர் மோடியை வைத்து பல தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தியது பாஜக.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கு வங்கத்தில்தான் பிரதமர் மோடி அதிகமான தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தினார். மேற்கு வங்கம் மீது மட்டும்தான் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் முழுக் கவனமும் இருந்தது.
ஆனால் மம்தா பானர்ஜியோ சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே இந்தத் தேர்தலில் வென்று இருக்கிறார்.

தேர்தல் பரப்புரையின்போது இவரை சில அடையாளம் தெரியாத சிலர் தாக்கி கீழே தள்ளிவிட்டனர். அதனால், மம்தாவுக்கு காலில் அடிபட்டு சக்கர நாற்காலியில் உட்காரும் நிலை ஏற்பட்டது.
இருந்தும், அவர் மனம் தளராமல், சக்கர நாற்காலியில் சென்றே மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்து வந்தார். 66 வயதாகும் மம்தா, உள்ளூர் அரசியல் மற்றும் கூட்டாட்சி என இரு கொள்கைகளுக்குத் தனது தேர்தல் பரப்புரையில் முன்னுரிமை கொடுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!