சீரமைப்பினால் அமைச்சு, எஸ்பிஎச் உறவு கெடாது சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் புதிய லாபநோக்கற்ற நிறுவனம் பற்றி அமைச்சர்

சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் தன்­னு­டைய ஊட­கத் தொழில்­களை லாப­நோக்­கற்ற நிறு­வ­ன­மாக மாற்­று­கிறது. இந்த மாற்­றம் கார­ண­மாக அந்­தப் புதிய நிறு­வ­னம் அர­சாங்க நிதி­யு­த­வி­யைப் பெற­மு­டி­யும்.

என்­றா­லும் கூட அர­சாங்­கத்­திற்­கும் செய்தித் துறைக்கும் இடைப்­பட்ட உறவு பாதிக்­கப்­ப­டாது என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்து இருக்­கி­றார்.

எஸ்­பி­எச் மீடியா ஒரு புதிய உத்­த­ர­வாத நிறு­வ­ன­மாக மாற்­றப்­ப­டு­வ­தன் கார­ண­மாக எஸ்­பிஎச் செய்தி அறை­க­ளுக்­கும் தமது அமைச்­சும் இடைப்­பட்ட உறவு பாதிக்­கப்­படும் என்ற எண்­ண­மும் எதிர்­பார்ப்­பும் அர­சி­டம் இல்லை என்று அமைச்­சர் நிலை அறிக்கை ஒன்­றில் அமைச்­சர் தெரி­வித்­தார்.

உள்­ளூர் செய்தி ஊட­கம் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நம்­பிக்­கைக்­குப் பாத்­தி­ர­மான நம்­பத்­த­குந்த நிறு­வ­னங்­க­ளாக தொடர்ந்து இருந்து வர­வேண்­டும் என்­பதை அர­சாங்­கம் கவ­னத்­தில் கொண்டு இருக்­கிறது என்று அவர் கூறி­னார்.

எஸ்­பி­எச் மீடி­யா­வைச் சேர்ந்த செய்தி ஆசி­ரி­யர்­களும் செய்­தி­யா­ளர்­களும் செய்­தி­க­ளை­யும் பல­த­ரப்­பட்ட கருத்­து­க­ளை­யும் உள்­ளது உள்­ள­ப­டி­யும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கண்­ணோட்­டத்­தி­லும் தெரி­விக்க வேண்­டிய பொறுப்பு தொடர்ந்து இருந்து வரு­கிறது என்­றும் அவர் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

எஸ்­பி­எச் நிறு­வ­னம் தன்­னு­டைய ஊட­கத் தொழில்­­களை லாப­நோக்­கற்ற நிறு­வ­ன­மாக சீர­மைக்க தான் திட்­ட­மி­டு­வ­தாக சென்ற வியா­ழக்­கி­ழமை அறி­வித்­தது. அப்­படி அமைக்­கப்­படும் புதிய நிறு­வ­னம் பொதுமக்­க­ளி­டம் இருந்­தும் அர­சாங்­கத்­தி­டம் இருந்­தும் நிதி­யைப் பெற முடி­யும்.

பங்­கு­தா­ரர்­க­ளின் எதிர்­பார்ப்பு­களில் இருந்து விடு­பட்ட நிலை­யில், அந்­தப் புதிய நிறு­வ­னம் பெரி­தும் கட்­டிக்­காக்­கக்­கூ­டிய நிதி நிலை­யு­டன் இருந்­து­வர முடி­யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்­பி­எச் நிறு­வ­னத்­தின் இந்த அறி­விப்பை அடுத்து, சீர­மைப்­புக்­குப் பிறகு அர­சாங்க நிதி­யைப் பெறு­வ­தன் மூலம் எஸ்­பி­எச் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த செய்­தித்­தாட்­களில் இடம்­பெ­றும் செய்­தி­க­ளின் நேர்மைத் தன்மை பாதிக்­கப்­ப­டுமோ என்று கேள்­வி­கள் எழுப்­பப்­பட்டு உள்­ளன. கவலை தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இதற்­குப் பதி­ல­ளித்த திரு ஈஸ்­வ­ரன், செய்­தித்­தாள் மற்­றும் அச்­ச­கச் சட்ட ஏற்­பாட்­டின்கீழ் உள்­ளூர் ஊட­கங்­கள் அர­சாங்க தலை­யீடு இன்றி சுதந்­தி­ர­மா­கச் செயல்­ப­டு­கின்­றன என்றார்.

1974ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இந்­தச் சட்­டம், உள்­ளூர் செய்­தித்­தாள் நிறு­வ­னங்­க­ளின் உடைமை மற்­றும் கட்­டுப்­பா­டு­கள் தொடர்­பில் நிபந்­த­னை­களை விதிக்­கிறது. எஸ்­பி­எச் அமைக்­கும் புதிய லாப­நோக்­கற்ற நிறு­வனத்­திற்­கும் இந்­தச் சட்­டம் செல்­லு­ப­டி­யா­கும் என்றாரவர்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கா­கச் செய்தி­களை வெளி­யி­டு­கின்ற, சிங்­கப்­பூ­ரர்­க­ளைச் செய்­தி­யா­ளர்­க­ளா­கக் கொண்ட, உயர்­த­ர­மிக்க, நிபு­ணத்­து­வமிக்க, மரி­யா­தைக்­கு­ரிய ஊட­கம் நாட்­டின் அடிப்­படை அமைப்­பிற்கு முக்­கி­ய­மான ஒன்று என்று திரு ஈஸ்­வ­ரன் கூறினார்.

"சிங்­கப்­பூர் பல இன சமூ­கத்­தைக்கொண்ட சிறிய ஒரு நகர நாடு. வர்த்­த­க­த்தைச் சார்ந்­தி­ருக்­கக்­கூ­டிய பொரு­ளி­ய­லைக் கொண்ட நாடு. இவை சிங்­கப்­பூ­ருக்கே உரிய சூழ்­நி­லை­கள்.

"சிங்­கப்­பூர் ஊட­கங்கள் இவற்­றுக்கு ஏற்ப பொருத்­த­மா­கச் செயல்­பட்டு வரு­கின்­றன. உலக நிகழ்ச்­சி­களை சிங்­கப்­பூ­ரர்­களின் கண்­ணோட்­டம் வழி­யாக தெரி­யப்­ப­டுத்த அவை உத­வு­கின்­றன.

"உலக நிகழ்ச்­சி­கள் நம் வாழ்­வில் எத்­த­கைய விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்­பதை அவை பகுத்து ஆராய்­கின்­றன.

"பூகோள அர­சி­யல் ரீதி­யில் போட்­டா­போட்டி அதி­க­மா­கும் இந்த யுகத்­தில் இந்­தப் போக்கு மேலும் முக்­கி­ய­மா­ன­தாக ஆகிறது என்று திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!