கட்டாயப் பரிசோதனைக்கு தயாராகும் உணவகங்கள்

அவ்­வப்­போது தங்­கள் ஊழி­யர்­கள் கட்­டாய கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­வதற்­கான ஏற்­பா­டு­களை உணவு, பான நிலை­யங்­கள் செய்து வரு­கின்­றன. பரி­சோ­தனை செய்­வது குறித்­துக் கற்­றுக்­கொள்ள ஒரு சில உண­வ­கங்­கள் தங்­கள் ஊழி­யர்­க­ளைப் பயிற்­சிக்கு அனுப்பி வரு­கின்­றன.

கட்­டா­யப் பரி­சோ­தனை நடை­மு­றை­யால் நடை­மு­றைச் செல­வு­கள் அதி­க­ரிக்­க­லாம் என்று உணவு, பானக் கடை­கள் எதிர்­பார்க்­கின்­றன. ஆயி­னும், விதி­மு­றைக்கு இணங்கி நடக்­கும் வகை­யில், பரி­சோ­த­னைக் கரு­வி­களை வாங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அவை மேற்கொண்டு வரு­கின்­றன.

இன்று முதல் உணவு, பானக் கடை­களில் அதி­க­பட்­சம் இரு­வர் அடங்­கிய குழுக்­க­ளாக அமர்ந்து உண்ண அனு­மதி வழங்கப்­பட்­டு இருக்கிறது.

உணவு, பானக் கடை­கள், உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­கள், உடற்­த­குதி நிலை­யங்­கள் போன்ற கொரோனா தொற்­றும் அபா­யம் அதி­க­முள்ள இடங்­களில் பணி­பு­ரி­வோர்க்கு அவ்­வப்­போது கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­தனை செய்­து­கொள்­வது அடுத்த மாதம் நடுப்­ப­கு­தி­யில் இருந்து கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வுள்­ளது.

சில பெரிய உணவு, பான நிலை­யங்­கள் முன்­கூட்­டியே அத­னைத் தொடங்­க­வுள்­ளன.

பரி­சோ­தனை குறித்த பயிற்­சிக்கு தங்­கள் ஊழி­யர்­கள் அனுப்­பப்­ப­டு­வர் என்­றும் அடுத்த வாரத்­தில் இருந்து பரி­சோ­த­னைக் கரு­வி­கள் வந்து சேரும் என்­றும் மெக்­டோ­னல்ட்ஸ் துரித உணவு நிலை­யக் குழு­மத்­தின் பேச்­சா­ளர் தெரிவித்தார். இம்­மா­தம் 28ஆம் தேதி­யி­லி­ருந்து கட்­டா­யப் பரி­சோ­த­னை­யைத் தொடங்க அக்­கு­ழு­மம் திட்­ட­மிட்­டுள்­ளது.

ஊழியர்கள் முறையாகப் பயிற்சி பெற்று, பரிசோதனைக் கருவிகள் கிடைக்கத் தொடங்கியதும் அவ்வப்போதைய கட்டாயப் பரிசோதனை நடைமுறைப்படுத்தப்படும் என்று டுங் லோக் உணவகக் குழுமத்தின் பேச்சாளர் கூறினார்.

சில உணவு, பான நிலை­யங்­கள் தங்­கள் ஊழி­யர்­க­ளைப் பயிற்­சிக்கு அனுப்பி வரு­வதா­க­வும் கட்­டா­யப் பரி­சோ­த­னையை நடை­மு­றைப்­ப­டுத்த அவை தயா­ராக இருப்­ப­தா­க­வும் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

தேக்­கா­வி­லும் ஈசூ­னி­லும் இன்று முதல் விரை­வுப் பரி­சோ­தனை நிலை­யங்­கள் செயல்­ப­டத் தொடங்­கும் என்­றும் அத்­த­கைய மேலும் பல நிலை­யங்­கள் படிப்­ப­டி­யா­கத் திறக்­கப்­படும் என்­றும் அமைச்சு கூறி­யது.

மேற்­பார்­வை­யு­டன் தாங்­க­ளா­கவே சுய­மாகப் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும் நட­வ­டிக்­கைக்கு ஏற்­பாடு செய்ய முடி­யாத சிறிய வணி­கங்­க­ளுக்கு அந்த விரைவுப் பரிசோதனை நிலை­யங்­கள் ஆத­ர­வ­ளிக்­கும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!