பேருந்து ஓட்டுநர்களுக்கு வாரந்தோறும் பரிசோதனை

பொதுப் பேருந்து ஓட்­டு­நர்­களும் பேருந்து நிலை­யங்­களில் சேவை­யாற்­றும் முகப்பு ஊழி­யர்­களும் இனி குறைந்­த­பட்­சம் வாரம் ஒருமுறை கிரு­மிப் பரி­சோ­த­னைக்கு உட்­­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் பொருட்டு கடு­மை­யாக்கப் பட்டுள்ள நட­வ­டிக்­கை­களில் இது­வும் ஒன்று. நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று இந்­தக் கடு­மை­யான விதி­களை அறி­வித்­தது.

அதன்­படி, நேருந்து நிலை­யங்­களில் சாப்­பி­டு­வ­தற்­கும் புதிய கட்­டுப்­பாடு கொண்டு வரப்­ப­டு­கிறது. சாப்­பி­டு

­வ­தற்­கான இடத்­தில் ஒரு நேரத்­தில் ஒரு பேருந்து ஊழி­யர் மட்­டுமே அமர்ந்து சாப்­பிட அனு­ம­திக்­கப்­படும்.

மேலும், பேருந்து நிலை­யங்­களில் உள்ள சிறு உண­வங்­களில் பொது­மக்­கள் அமர்ந்து சாப்­பிட இய­லாது.

ஆயி­னும் அவர்­கள் அங்கு உணவு வாங்­கிச் செல்­லாம். பேருந்து நிலை­யங்­களில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் சாப்­பி­டும் இட­மும் ஓய்­வெ­டுக்­கும் இட­மும் இனி தனித்­த­னி­யா­கப் பிரிக்­கப்­படும். முகக்­க­வ­சம் அணிந்து ஓய்­வெ­டுக்­கும் ஊழி­யர்­க­ளி­ட­மி­ருந்து சாப்­பி­டு­வோர் ஒன்­று­க­லக்­காது இருக்க இந்த ஏற்­பாடு.

பேருந்­துத் துறை­யைச் சேர்ந்த 11,000க்கும் மேற்­பட்ட முகப்­புப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் புதிய கட்­டுப்­பா­டு­கள் பொருந்­தும்.

புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி பேருந்து நிலை­யத் தொற்­றுக் குழு­மங்­க­ளின் எண்­ணிக்கை எட்­டாக அதி­க­ரித்து, அத­னால் 314 பேர் பாதிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து கட்­டுப்­பா­டு­களை ஆணை­யம் கடு­மை­யாக்கி உள்­ளது.

அடுத்த வாரம் முதல் எல்­லாப் பேருந்து நிலை­யங்­க­ளி­லும் காற்று சுத்­தி­க­ரிப்­புச் சாத­னங்­கள் நிறு­வ­ப்­படும்.

மேலும் ஒரு நட­வ­டிக்­கை­யாக புகைபி­டிப்­போர் ஒரு­வ­ரோடு ஒரு­வர் சேரா­மல் இருக்­க­வும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. ஒரு­வர் மட்­டும் நின்று புகைபி­டிக்­கும் வகை­யில் தனித்­தனி சிறு­கூ­டங்­கள் நிறு­வப்­ப­டு­கின்றன.

பேருந்து நிலைய ஊழி­யர்­கள் பகு­தி­களில் அதி­க­மா­னோர் தொடும் பகு­தி­கள் இனி மணிக்கு ஒரு தடவை சுத்­தம் செய்­யப்­படும்.

கட்­டுப்­பா­டு­களை நேற்று மாலை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் விளக்­கிய ஆணைய அதி­கா­ரி­கள், பேருந்து நிலைய தொற்­றுக் குழு­மங்­க­ளால் பேருந்து செயல்­பா­டு­களில் இப்போ­தைக்கு பெரி­ய­தொரு தாக்­கம் ஏற்­ப­ட­வில்லை என்­ற­னர்.

இருப்­பி­னும், தொற்­றுக் குழு­மங்­கள் மேலும் அதி­க­ரிக்­கும் பட்­சத்­தில் பேருந்து சேவை­க­ளுக்கு இடை­யி­லான நேரத்தை நீட்­டிக்­கும் தற்­கா­லிக யோச­னை­கள் பரி­சீ­லிக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறி­னர். பேருந்து சேவை ஆகக் குறை­வா­கத் தேவைப்­படும் வழித்­த­டங்­களில் இருந்து இந்­ந­ட­வ­டிக்கை தொடங்­கக்­கூ­டும்.

இவ்­வாறு செய்­யும்­போது பேருந்­துக்­காக பய­ணி­கள் காத்­தி­ருக்­கும் நேரம் அதி­க­மா­கும். ஜூரோங் ஈஸ்ட் பேருந்து நிலை­யத்­தில் ஏற்­கெ­னவே அப்­ப­டி­யொரு நிலை இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

அங்கு ஒன்று அல்­லது இரு பேருந்து சேவை­கள் ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

பேருந்து நிலைய தொற்­றுக் குழு­மங்­க­ளால் பாதிக்­கப்­பட்ட 314 பேரில் 284 பேர் பேருந்து நிலை­யங்­க­ளின் முகப்­புப் பணி­யா­ளர்­கள், பேருந்து ஓட்டுநர்­கள் மற்­றும் சேவைப் பணி­யா­ளர்­கள். எஞ்­சி­ய­வர்­கள் அவர்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­கள் மற்­றும் பொது­மக்­கள்.

இருப்­பி­னும் அவர்­களில் யாருக்­கும் கடு­மை­யான உடல்­ந­லக் கோளாறு ஏற்­ப­ட­வில்லை என்று ஆணை­யம் நேற்று கூறி­யது. பேருந்து நிலைய முகப்பு ஊழி­யர்­களில் 95 விழுக்­காட் டினர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்கொண்­டு­விட்­ட­தா­க­வும் அது தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!