தமிழ்ப் புழக்கத்தைக் கூட்ட பெருமுயற்சி

வகுப்­ப­றைக்கு அப்­பால் வீடு­களில் குறைந்து வரும் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்க கல்வி அமைச்­சும் இதர அமைப்­பு­களும் பற்­பல முயற்­சிகளில் ஈடு­பட்டு வரு­வ­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

2020ஆம் ஆண்டின் மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்­பின்­படி, வர்த்­தக, வீட்­டுச் சூழல்­களில் ஆங்­கில மொழி பர­வ­லாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­றும் குறைந்து வரும் தாய்­மொழி புழக்­கத்தைச் சுட்டிய அமைச்சர் இந்தச் சவாலை எதிர்­கொள்­வ­தற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­படவேண்­டும் என்­றார் திரு சான்.

"சமூ­கத்­து­டன் கல்வி அமைச்சு இணைந்து தமி­ழா­சி­ரி­யர்­க­ளின் கற்­பித்­தல் முயற்­சி­க­ளுக்கு ஆத­ரவு தந்து, மாண­வர்­க­ளுக்கு புதிய கற்­றல் வாய்ப்­பு­களை வழங்­கு­கிறது. அதில், 2006ஆம் ஆண்­டில் உரு­வான தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஓர் உதா­ர­ணம்.

"கடந்த சில ஆண்­டு­க­ளாக வளர்­த­மிழ் இயக்­கம், தமிழ் முரசு போன்ற பங்­கா­ளி­க­ளு­டன் இக்­குழு இணைந்து அர்த்­த­முள்ள நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்து வரு­கிறது.

"2017­லி­ருந்து 'அழகே தமிழே' போன்ற மாண­வர் நட­வ­டிக்கை நிகழ்ச்­சி­க­ளின் வழி அது தாய்­மொ­ழிக் கற்­றலை இன்­னும் சுவ­ரா­சி­ய­மாக ஆக்­கி­யுள்­ளது," என்­றார் அமைச்சர்.

"இவ்­வாண்டு தமிழ் முரசு இணை­யப் பக்கத்தில் மாண­வர் முரசு புதிர் அங்­கத் தொடரை அறி­மு­கம் செய்து, சிறா­ரி­டையே தமிழ் கலா­சா­ரக் கூறு­களைப் பாராட்­டும் வித­மாக அமைத்து, வீட்­டில் தமிழ் கற்­கும் சூழ­லை­யும் உரு­வாக்­கியுள் ளது.

தமிழாசி­ரி­யர்­க­ளின் நிபு­ணத்­துவ மேம்­பாட்­டுக்கு ஆத­ர­வாக, சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் இந்­தியா, மலே­சியா போன்ற நாடு­களில் வேலை பயிற்சித் திட்­டங்­களை வழங்கி, மெய்­நி­கர் பாணி­யில் அவர்­க­ளுக்கு முன்­னணி வெளி­நாட்டு கல்வி நிபு­ணர்­கள் நடத்­தும் பயி­ர­லங்­கு­களை ஏற்­பாடு செய்து வரு­கிறது.

"கல்வி அமைச்சு, தமிழ் மொழி விருப்­பப்­பா­டத் திட்­டத்தை அறி­

மு­கம் செய்து, தமிழ் இலக்­கி­யம் பற்­றிய வெளி­நாட்டுப் பய­ணங்­கள், உள்­ளூர் முகாம்­கள் உள்­ளிட்ட புத்­தாக்க முறை­க­ள் மூலம் கற்­கும் வாய்ப்­பு­களை வழங்­குகிறது," என்று திரு சான் கூறினார்.

தமிழ் முரசு நாளி­தழ், சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம், தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகி­யவை இணைந்து நடத்­திய 'நல்­லா­சி­ரி­யர் விருது 2020/2021' நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்று அமைச்சர் உரை நிகழ்த்­தி­னார்.

கடந்த ஆண்டு நடை­பெ­ற­வேண்­டிய இவ்­வி­ருது நிகழ்ச்சி கொவிட்-19 கார­ணத்­தால் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. நேற்­றைய நிகழ்ச்­சி­யில் மூன்று வாழ்­நாள் சாத­னை­யா­ளர்­கள் உட்­பட, மொத்­தம் 9 தமி­ழா­சி­ரி­யர்­கள் கெள­ர­விக்­கப்­பட்­ட­னர்.

"இந்­நி­கழ்வை நடத்­து­வதன் மூலம் தொடர்ந்து தமிழாசிரியர் களுக்கு ஊக்­கம் தரும் விரு­தின் நோக்­கத்தை பூர்த்தி செய்யமுடி­கிறது." என்றார் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வின் தலை­வர் திரு விக்­ரம் நாயர்.

"கொரோனா சூழ­லில் பணிச் சுமை, மனச்­சோர்வு ஆகி­ய­வற்றை அனு­ப­விக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு நல்­லா­சி­ரி­யர் விருது உற்­சா­கம் தரும் என சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தின் தலை­வர் திரு தன­பால் குமார் கூறி­னார்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சி இணையத்திலும் நேரலையாக இடம் பெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!