தனிமையில் உள்ள மாணவர்கள் தேசிய தேர்வுகளை எழுதலாம்; கடும் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் தடைகாப்பு மாணவருக்கு தேர்வு அனுமதி

கொவிட்-19 தொற்று வரா­மல் இருக்க தடை­காப்பு உத்­த­ர­வின்­கீழ் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்திக் கொண்டு இருந்­து­வ­ரும் மாண­வர்­கள், விரும்­பி­னால் தேசிய தேர்வு களை எழு­த­லாம்.

இருந்­தா­லும் அவர்­கள் சில குறிப்­பிட்ட கடு­மை­யான நிபந்­தனை­களை நிறை­வேற்ற வேண்டி இருக்­கும் என்று கல்வி அமைச்­சும் சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்­டுக் கழ­க­மும் அறிக்கையில் நேற்று தெரி­வித்­தன.

அத்­த­கைய மாண­வர்­கள் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற தொடங்­கும்­போது பிசி­ஆர் பரி­சோ­தனை மூலம் அவர்­க­ளுக்­குத் தொற்று இல்லை என்­பது உறுதி யாக வேண்­டும்.

வீட்­டில் ஏஆர்டி பரி­சோ­தனை மூல­மும் தொற்று இல்லை என்­பது உறு­தி­யாக வேண்­டும். ஒவ்­வொரு தேர்­வை­யும் எழுதுவதற்கு 24 மணி நேரம் முன்­ன­தாக தொற்று இல்லை என்­பது பரி­சோதனை மூலம் உறு­தி­யாக வேண்­டும்.

தேர்வு இடத்­துக்­கு தனி­யார் போக்­கு­வ­ரத்து மூலம் அல்­லது நடந்­து­தான் சென்­று­வர வேண்­டும். நடு­வில் எங்­கும் நிறுத்­தம் கூடாது.

தாங்­கள் எழுத விரும்­பும் தேர்­வு­களைப் பற்றி பள்­ளிக்­கூடங்­க­ளுக்கு அந்த மாண­வர்கள் தெரியப்­ப­டுத்த வேண்­டும்.

அதற்­கேற்ப தேர்வு எழு­தும் இடங்­கள் தயா­ரா­கும். இவற்­றோடு இதர பல ஏற்­பாடு­களும் இடம்­பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்­தத் தடை­காப்பு உத்­த­ரவை நிறை­வேற்­றும் மாண­வர்­கள் தனி தேர்வு அறை­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும். மாண­வர்­கள் 3 மீட்­டர் இடை­வெ­ளி­யில் அமர்ந்து தேர்வு எழுத வேண்­டும்.

அவர்­க­ளுக்­கென்று தனிப்­பட்ட உள், வெளி வழி­கள், கழி­வறை வச­தி­கள் இருக்­க­வேண்­டும்.

மற்­ற­வர்­க­ளுக்­குத் தேர்வு தொடங்­கும் நேரத்­தில் இருந்து 30 நிமி­டம் கழித்துதான் அவர்­களுக்­குத் தேர்வு தொடங்­கும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

இந்த மாற்­றங்­கள் தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்வு, வழக்க நிலை, சாதா­ரண நிலை, ஏ-நிலை ஆகிய தேர்­வு­களை எழுதுவோருக்­குப் பொருந்­தும்.

கொவிட்-19 தொற்று இருப்­பவர்­கள் அல்­லது வீட்­டி­லேயே தங்கி இருக்­க­வேண்­டும் என்ற உத்­த­ர­வின்­கீழ் இருப்­ப­வர்­கள் இந்த ஆண்டு தேர்வு எழுத அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள்.

தனி­மையில் இருக்­கும் தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்வு எழுதும் மாண­வரு­டன் சேர்ந்து அவ­ரு­டைய குடும்ப உறுப்­பி­னர் அல்­லது பரா­மரிப்­பா­ளர் பள்­ளிக்­கூ­டத்­திற்குச் செல்ல வேண்­டிய தேவை இருக்கு­மா­னால், அப்­படிச் செல்­வோ­ரும் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்றி வரும் பட்­சத்­தில், அவ­ரும் மாண­வர்களுக்­கு­ரிய அதே நிபந்­த­னை­களுக்கு உட்­பட வேண்­டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகா­தார அமைச்­சின் கட்­டாய பரி­சோ­தனை கார­ண­மாக அங்கீ­கரிக்­கப்­பட்ட விடுப்­பில் இருப்­போர் அல்­லது சுகா­தார ஆபத்து எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு இருப்­போர் தேர்வு எழு­த­லாம்.

என்­றா­லும் அவர்­க­ளுக்­கான விடுப்பு தொடங்­கும் தேதி­யில் எடுக்­கப்­படும் பிசி­ஆர் பரி சோதனை, அவர்­க­ளுக்­குக் கிருமித்தொற்று இல்லை என்­ப­தைக் காட்ட வேண்­டும்.

தொடர்ந்து மேற்­கொள்­ளப்­படும் ஏஆர்டி விரைவுப் பரிசோதனை­களும் தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்­டைப்­போ­லவே இந்த ஆண்­டும் தேர்வு எழுத முடியாத மாண­வர்­கள், செல்­லு­படி­யா­கக்­கூ­டிய கார­ணங்­களைத் தாக்­கல் செய்­தால் சிறப்பு பரி­சீலனைக்கு விண்­ணப்­பிக்­க­லாம் என்று அமைச்­சும் கழ­க­மும் தெரி­வித்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!