தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டத்தில் தடுப்பூசி போடாத சிறுவர்களும் சேர்ப்பு 12 வரை வயதுள்ள சிறாருக்கும் அனுமதி

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான வெளி­நாட்டுப் பய­ணத் திட்­டத்­தின்­கீழ், 12 வயது வரைப்­பட்ட, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத சிறார்­கள் பய­ணம் மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.

அந்­தச் சிறார்­கள் தனி­மை­யில் இருக்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று அறி­வித்­தது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட, நிபந்­த­னை­கள் அனைத்­தை­யும் நிறை­வேற்­று­கின்ற பயணி ஒரு­வரு­டன் சேர்ந்து சிறார்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பயண ஏற்­பாட்டுத் திட்­டத்­தின்­கீழ் பய­ணம் மேற்­கொள்ளலாம் என்று அறிக்கை ஒன்­றில் ஆணை­யம் தெரி­வித்­தது.

அந்­தச் சிறார்­கள், சிங்­கப்­பூருக்கு­ப் புறப்­ப­டு­வ­தற்கு முன் 48 மணி நேரத்­திற்­குள் ஒரு முறை­யும் இங்கு வந்து தரை­யி­றங்­கி­ய­தும் ஒரு முறை­யும் என மொத்தம் இரண்டு பிசி­ஆர் பரி­சோ­த­னை­களுக்கு உட்­பட வேண்­டும்.

இரண்டு, அதற்­கும் குறைந்த வய­துள்ள கைக்­கு­ழந்­தை­க­ளுக்கு இந்­தப் பரி­சோ­தனை தேவை­யில்லை.

தடுப்­பூசி போட்­டுக்கொண்டோ ருக்­கான பயண ஏற்­பாட்டுத் திட்­டம் அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட ஒன்­பது நாடு­க­ளுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக சனிக்­கி­ழமை அர­சாங்­கம் அறி­வித்­தது.

அத்திட்­டத்­தின்­கீழ் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத தங்­க­ளு­டைய பிள்ளை­கள் பய­ணம் செய்ய இயலாத நிலை பற்றி பெற்­றோர்­ பலர் கவலை தெரி­வித்­த­னர்.

இத­னி­டையே, விதி­களை அர­சாங்­கம் ஏன் தளர்த்­தி­யது என்று கேட்­ட­தற்குப் பதி­ல­ளித்த போக்கு­வரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், 12 வய­துக்கு குறைந்த தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத சிறார்­களை அனு­ம­திப்­பது அவர்­க­ளுக்கு மேலும் சில வாய்ப்­பு­க­ளைத் திறந்து­வி­டு­வ­தாக இருக்­கும் என்றார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத சிறார்­களை அந்­தப் பய­ணத் திட்­டத்­தில் சேர்ப்­ப­தில்லை என்று தொடக்­கத்­தில் முடிவு எடுக்­கப்­பட்­ட­தற்குக் கூடு­தல் எச்­ச­ரிக்­கை­யு­டன் கூடிய அணு­கு­மு­றையே கார­ணம் என்று ஒரு பேட்­டி­யில் அமைச்­சர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

பய­ணம் செய்ய விரும்­பி­னால் அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுத்­துக்­கொள்­ளும்­படி அமைச்­சர் குடும்­பங்­களை வலி­யு­றுத்­தி­னார்.

பல நாடு­க­ளி­லும் வெவ்­வே­றான நிபந்­த­னை­கள் நடப்­பில் இருப்­பதால் அவற்றை நன்­றா­கப் புரிந்து­கொள்­ளும்­ப­டி­யும் மக்களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் கனடா, டென்­மார்க், பிரான்ஸ், இத்­தாலி, நெதர்­லாந்து, ஸ்பெ­யின், பிரிட்­டன், அமெ­ரிக்கா நாடு­க­ளுக்கு அக்­டோ­பர் 19ஆம் தேதி முதல் பய­ணம் மேற்­கொள்ள முடி­யும். இந்­தத் திட்­டம் நவம்­பர் 15ஆம் தேதி தென்­கொ­ரி­யா­வுக்கு நீட்­டிக்­கப்­படும்.

இந்­தப் பய­ணத் திட்­டத்­தின்­கீழ் ஜெர்­மனி, புருணை உள்­ளிட்ட மொத்­தம் 11 நாடு­க­ளுக்கு மக்­கள் பய­ணம் மேற்­கொள்ள முடி­யும்.

இருந்­தா­லும் இப்­போது உல்­லா­சப் பய­ணங்­களை மேற்­கொள்ள புருணை அனு­ம­திக்­க­வில்லை.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளாத சிறார்­க­ளை­யும் தடுப்­பூசி போட்டுக்­கொள்ள மருத்­துவ ரீதி­யில் தகுதி­பெ­றாத மக்­க­ளை­யும் தென் கொரியா இப்­போது அனு­ம­திப்­பதில்லை. இத­னி­டையே, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பயண ஏற்­பாட்டுத் திட்­டத்­தின்­கீழ், 2009ல் அல்­லது அதற்­குப் பிறகு பிறந்த சிறார்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வர­மு­டி­யும் என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

இந்­தப் பய­ணத் திட்­டங்­களை விரி­வு­ப­டுத்­து­வ­தால் சிங்­கப்­பூ­ரின் சுற்­றுலா தொழில்­து­றைக்­கும் விமா­னப் போக்­கு­வ­ரத்து மையம் என்ற நிலைக்­கும் எந்த அள­வுக்கு நன்மை­ ஏற்­படும் என்­பது பற்றி கருத்து கூறிய அமைச்­சர் ஈஸ்­வரன், இப்­போது இந்­தத் திட்­டத்­தின்­கீழ் பயணம் செய்ய அனு­மதிக்­கப்­படும் 11 நாடு­களும், தொற்றுக்கு முன்பு சாங்கி விமான நிலை­யத்­திற்கு வந்து சென்ற பயணி­களில் ஏறத்­தாழ 10 விழுக்­காட்­டி­ன­ருக்குப் பொறுப்பு வகித்தன என்­றார்.

"அந்த நாடு­கள் சிங்­கப்­பூ­ரின் முக்­கிய 20 வர்த்­தகப் பங்­காளி நாடு­களில் அடங்­கும்.

"சிங்­கப்­பூ­ரில் அவை கணி­சமான வர்த்­தகச் சமூ­கங்­க­ளை­யும் குடும்­பத்­தி­ன­ரை­யும் கொண்டு இருக்­கின்­றன. ஆகை­யால் அந்த நாடு­க­ளு­டன் மீண்­டும் தொடர்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது முக்­கி­ய­மா­னது," என்று அமைச்­சர் விளக்­கி­னார். புதிய பயண ஏற்பாட்டின்படி மொத்­த­மாக பார்க்­கை­யில் ஏறத்­தாழ 3,000 பய­ணி­கள் அன்றாடம் சிங்­கப்­பூ­ருக்கு வர இய­லும் என்­பதை அமைச்­சர் சுட்­டி­னார்.

இது கொவிட்-19க்கு முந்­தைய நில­வ­ரத்­து­டன் ஒப்­பி­டும்­போது மிக­வும் குறைவு என்­றா­லும் இப்­போ­தைய சூழ்­நி­லை­யு­டன் ஒப்­பிடும்­போது கணி­ச­மான அள­வுக்கு மேம்­பட்ட ஒன்­றாக இருக்­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

பக்­கத்து நாடு­க­ளு­டன் பய­ணத் திட்­டங்­களைத் தொடங்­கு­வது பற்றி கருத்­து­ரைத்த அமைச்­சர், அதன் தொடர்பில் பல வழி­க­ளை­யும் பற்றி தாங்­கள் தொடர்ந்து விவா­தித்து வரு­வ­தா­கக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!