சிங்கப்பூர் பயணிகளை வரவேற்க ஆஸ்திரேலியா தயாராகிறது

அடுத்த சில வாரங்களில் சிங்­கப்­பூர் பய­ணி­கள், ஆஸ்­தி­ரே­லி­யாக்குச் செல்ல முடி­யும். அதற்­கான சிறப்புப் பயண ஏற்­பா­டு­களை சிங்­கப்­பூ­ரு­டன் ஆஸ்­தி­ரே­லியா செய்து வரு­கிறது.

இதனை உறு­திப்­ப­டுத்­தியுள்ள ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன், "நவம்­பர் 23ஆம் தேதி­யி­லி­ருந்து தடுப்­பூசி போட்ட அனைத்­துப் பய­ணி­களும் ஆஸ்­ தி­ ரே­லி­யா­வுக்­குள் நுழைய அனு­ம­திக்­கப்­படுவர்," என்­றார்.

ஆரம்­பத்­தில் மாண­வர்­களுக்கும் வர்த்­த­கர்­களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். டிசம்­ப­ரி­லி­ருந்து சுற்றுப் ப­ய­ணி­க­ளுக்­கும் அனு­மதி தரப்படும். இந்­தச் சிறப்புப் பயண ஏற்­பாட்­டில் பய­ணி­கள் தனி­மைப்­ ப­டுத்­தப்­பட மாட்­டார்­கள்.

"சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­து­ட­னான சிறப்­புப் பயண ஏற்­பாட்­டின் இறுதிக் கட்­டத்­தில் நாங்­கள் இருக்­கி­றோம். சில வாரங்­களில் அது இறுதி செய்யப்­ப­டும். அதன்­பி­றகு சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து விசா வைத்­தி­ருப்­ப­வர் ­க­ளுக்கு எல்­லை­கள் திறக்­கப்­படும்," என்று நேற்று பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூர் பய­ணி­களை அனு­ம­திக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் முடிவை சிங்கப்பூர் பிர­த­மர் லீ சியன் லூங் வர­வேற்­றுள்­ளார்.

சென்ற ஜூன் மாதம் பிரதமர் ஸ்காட் மோரி­சன் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தி­ருந்­த­போது அத்­த­கைய ஏற்­பாட்­டைச் செய்ய அவ­ரி­டம் கேட்டுக் கொண்­ட­தாக பிர­த­மர் லீ தமது ஃபேஸ்புக் பதி­வில் சுட்டிக்காட்டி இருந்தார். "சிங்­கப்­பூ­ரும் ஆஸ்­ திரே­லி­யா­வும் வலு­வான பொரு­ளி­யல், முத­லீட்டு இணைப்­பு­க­ளைக் கொண்­டுள்­ள நாடுகள். இரு நாட்டு மக்­க­ளி­டையே இத­ய­பூர்­வ­மான உறவு நீடிக்­கிறது. இரு நாடு­க­ளுக்கு இடை­யே நெருக்­க­மான தொடர்பு மீண்­டும் தொடங்குவதை ஆவ­லு­டன் எதிர்­பார்க்­கி­றேன்," என்­று திரு லீ குறிப்பிட்டார்.

போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரான எஸ். ஈஸ்­வ­ரன், இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லா­னப் பய­ணங்­களை படிப் ­ப­டி­யாக அதி­க­ரிக்க ஆஸ்­தி­ரே­லி­யா­வு­டன் சேர்ந்து செயல்­பட சிங்­கப்­பூர் தயா­ராக இருப்­ப­தாக தெரி வித்­துள்ளார்.

இதற்கிடையே ஆஸ்திரேலி யாவில் படிக்கும் சிங்கப்பூர் மாண வர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மருத்துவம் பயிலும் சாரா குவோக்குக்கு கொவிட்-19 கட்டுப் பாடுகளால் கடந்த ஆண்டு ஆஸ் திரேலியா திரும்ப முடியவில்லை.

காணொளி வழியாக நடத்தப் பட்ட பாடங்களை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆஸ்தி ரேலியா, எல்லைகளைத் திறப்பது அடிலெய்ட் பல்கலைக் கழகத்தின் 2வது ஆண்டு மாணவியான 21 வயது சாராவுக்கு மகிழ்ச்சி அளித்து உள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு பேட்டி அளித்த சாரா உட்பட பத்து மாணவர்கள் ஆஸ்திரேலியா திரும்ப ஆவலுடன் காத்திருப்பதாக தெரி வித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!