தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவலைப் பகிர்ந்த இருவருக்கு எதிராக நடவடிக்கை

கொவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியதை அடுத்து இணையப் பொய்த்தகவல்கள் மற்றும் திரிபுகளுக்கு எதிரான சட்டத்தின்கீழ் இரண்டு ஆடவர்களுக்குத் திருத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் எழுத்தாளர் சியெட் கின் சுன்,  எதிர்க்கட்சித் தலைவர் கோ மெங் செங் ஆகிய இருவரும், தவறான தகவல்களைக் கொண்ட பதிவு ஒன்றைத் தங்கள் இணையத்தளங்களில் பகிர்ந்தனர். திருத்தம் செய்யக்கோரும் உத்தரவுகளை இவர்கள் தங்களது இணையத்தளங்களில் வெளியிடவேண்டும்.

“தற்போது மக்களுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கை மும்முரமாக நடந்துகொண்டிருக்கையில் இந்தப் பொய்த்தகவல்களைத் திருத்துவது மிகவும் முக்கியம்,” என்று கல்வியமைச்சு தெரிவித்தது.

அண்மைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆக ஆபத்தான தடுப்பூசி கொவிட்-19 என்று திரு சியா தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார். கடந்த பத்தாண்டுகளில் மற்ற தடுப்பூசிகளால் ஏற்பட்ட மரணங்களைவிட கொவிட்-19 தடுப்பூசிகளால் நிகழ்ந்த மரண எண்ணிக்கை அதிகம் என்றும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது..

இத்தகைய தகவல்கள் தவறு என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!