வரலாறு படைத்த சிங்கப்பூரர்

சிங்­கப்­பூ­ர­ரான லோ கியன் இயூ, பூப்­பந்து (பேட்­மிண்­டன்) உல­கில் சிங்­கப்­பூர் வெற்­றிக்­கொ­டி­யைப் பறக்­க­விட்டு வர­லாற்­றில் இடம் பிடித்­துள்­ளார்.

'உலக பூப்­பந்து கூட்­ட­மைப்­பின் உலக வெற்­றி­வீ­ரர்' என்ற அவருடைய இந்த தங்­கப் பதக்­கச் சாதனை, பொது­வாக காற்­பந்து பிரி­யர்­க­ளான சிங்­கப்­பூர் ரசி­கர்­களில் பல­ரை­யும் பூப்­பந்து விளை யாட்டு பக்­கம் திருப்பி இருக்­கிறது.

உலக பூப்­பந்து வெற்றி வீரர்­கள் தர­வ­ரி­சை­யில் 22வது இடத்­தைப் பிடித்து இருந்த அவர், 14வது இடத்­தில் இருந்த இந்­தி­யா­வின் 29 வயது கிடாம்பி ஸ்ரீகாந்தை, 21-15, 22-20 எனும் செட் கணக்­கில் வென்று வர­லாற்­றுச் சாத­னை­ படைத்­தார்.

ஸ்பெ­யின் நாட்­டில் வெல்வா நக­ரில் ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த இறு­திச்சுற்­றுப் போட்­டி­யில் வெறும் 43 நிமி­டங்­கள், 2 ஆட்­டங்­கள், 78 புள்­ளி­க­ளு­டன் அவர் பூப்­பந்து விளை­யாட்டு உல­கையே பிர­மிக்­க­வைத்­தார்.

இந்த 24 வயது இளை­ஞர்­தான் உலக பூப்­பந்து வெற்­றி­வீ­ர­ராக மகு­டம் சூடி இருக்­கும் முதல் சிங்­கப்­பூ­ரர். வெள்­ளிக்­கி­ழமை (டிசம்­பர் 17) நடந்த காலி­று­திப் போட்­டி­யில் லோவின் வலது கணுக்­கா­லில் அடிப்­பட்­டது.

அரை­யி­றுதி ஆட்­டம் சனிக் கிழமை நடந்தது. அதில் கலந்து கொண்ட லோ சக்­க­ர­நாற்­கா­லி­யில் செல்ல வேண்­டி­யி­ருந்­தது.

காலில் காயம் இருந்­த­போ­தும் நேற்­றைய இறு­திச்­சுற்­றில் லோ நிதானத்­து­ட­னும் துணி­வு­ட­னும் விளை­யாடி சாதனை படைத்­தார்.

"கணுக்­கா­லில் வலி தாங்க முடி­ய­வில்லை. நடக்­கக்­கூட முடி­ய­வில்லை. இருந்­தா­லும் திட்­ட­வட்­ட­மான உறு­தி­யு­டன் இருந்­தேன்.

"வலியை எல்­லாம் தாங்­கிக் கொண்­டேன். கணுக்­கா­லில் சில சிகிச்­சை­க­ளை­யும் எடுத்­துக்­கொண்­டேன். போட்டி முடிவு பெரு மகிழ்ச்சி தந்­தது" என்று ஸ்ட்­ரெ­ய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளுக்கு அளித்த பேட்­டி­யில் திரு லோ தெரி­வித்தார்.

"எனது கனவு இப்­போது நன­வாகி இருக்­கிறது. இருந்­தா­லும் எனது இலக்கு நிறை­வேற நான் இன்­னும் நெடுந்­தூ­ரம் செல்ல வேண்டி இருக்­கிறது.

"சிங்­கப்­பூ­ருக்கு ஒலிம்­பிக் பதக்­கத்­தைப் பெற்­றுத் தர­வேண்­டும் என்ற எனது கனவு நிறை­வேற தொடர்ந்து பாடு­ப­டுவேன்," என்று திரு லோ கூறி உள்­ளார்.

இலக்கு, உறுதி, விடா­மு­யற்­சி­யு­டன் திரு லோ ஒலிம்பிக் சாதனை­யை­யும் நிகழ்த்­து­வார் என்ற நம்­பிக்கை இப்­போது அவர் பெற்­று உள்ள வெற்றி மூலம் வலுவடைந்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!