தமிழ்நாடு: இன்றுமுதல் இரவிலும் ஞாயிறு முழுவதும் ஊரடங்கு அமல்

தமிழ்­நாட்­டில் கொரோனா பர­வல் மீண்­டும் வேக­மெ­டுத்­தி­ருப்­பதை அடுத்து, இன்­று­மு­தல் அங்கு இரவு நேர ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. வரும் ஞாயிறன்று முழு ஊர­டங்கு நடப்­பிலிருக்­கும்.

அம்­மா­நி­லத்­தில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 2,731 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­படுத்­தப்­பட்­டது. அவர்­களில் 48 பேர் பிற மாநி­லங்­களில் இருந்­தும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்­தும் ஊர் திரும்­பி­ய­வர்­கள். குறிப்­பாக, சென்னை உள்­ளிட்ட ஐந்து மாவட்­டங்­களில் கிரு­மிப் பர­வல் அதி­க­மாக உள்­ளது.

இந்­நி­லை­யில், முதல்­வர் மு.க. ஸ்டா­லின், மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் சுப்­பி­ர­ம­ணி­யன், சுகா­தா­ரத்­து­றைச் செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் உள்­ளிட்­டோ­ரு­டன் நேற்று முன்­தி­னம் ஆலோ­சனை நடத்­தி­னார்.

அத­னைத் தொடர்ந்து, இன்று முதல் இரவு 10 மணி­யில் இருந்து அதி­காலை 5 மணி­வ­ரை­யி­லும் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு­வ­து­மா­க­வும் ஊர­டங்கு அமல்­படுத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஊர­டங்­கின்­போது வணிக நிறு­வனங்­கள், கடை­கள், உண­வ­கங்­கள் போன்­றவை செயல்­பட அனு­மதி இல்லை.

பேருந்து, புற­ந­கர் ரயில்­களில் 50% மட்­டும் பய­ணி­கள் அமர்ந்து பய­ணம் செய்­ய­லாம்.

பள்­ளி­களில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு நேரடி வகுப்­பு­கள் நடத்த தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. வரும் 20ஆம் தேதி­வரை கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இனி சனிக்­கி­ழ­மை­களில் மாபெ­ரும் தடுப்­பூசி முகாம் நடத்­தப்­படும். வழி­பாட்­டுத் தலங்­களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்­களில் பொது­மக்­க­ளுக்கு அனு­ம­தி­யில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!