பல்கலைக்கழகங்களில் கூடுதல் இடங்கள்

கொவிட்-19 பரவலால் வெளிநாடு சென்று கற்க முடியாதோருக்கு ஆதரவு

வெளி­நாடுகளுக்குச் சென்று மேற்­கல்வி பயி­லத் திட்­டு­மிட்டு, கொவிட்-19 கிருமிப் பரவலால் அதை மேற்கொள்ள முடி­யாத மாண­வர்­களுக்­காக உள்­ளூர்ப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தொடர்ந்து கூடு­தல் இடங்­களை உரு­வாக்க அர­சாங்­கம் தயா­ராகி வரு­கிறது.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஓராண்­டில் சேரும் சிங்­கப்­பூ­ரர்­கள் விகி­தம் மீண்­டும் 40 விழுக்­காட்­டைத் தாண்­டி­னா­லும் அத­னைச் செய்­வோம் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்து இருக்­கி­றார்.

திட்­ட­மிட்­ட­படி வெளி­நாடு சென்று மேற்­கல்வி பயில இய­லாத மாண­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கும் வித­மாக, கடந்த ஈராண்­டு­க­ளி­லும் அவ்­வி­கி­தம் 40 விழுக்­காட்­டைத் தாண்­டி­ய­தாக அமைச்­சர் சான் குறிப்­பிட்­டார்.

இங்­குள்ள ஆறு பல்­க­லைக்­க­ழ­கங்­களும் ஒட்டுமொத்தத்தில் 2020ஆம் ஆண்­டில் 17,500 மாண­வர்­க­ளுக்­கும் 2021ல் 17,800 மாண­வர்­க­ளுக்­கும் இடமளித்­தன.

இவ்­விரு ஆண்­டு­க­ளி­லும் சேர்ந்த மாண­வர்­கள் விகி­தம் தலா 42 விழுக்­கா­டாக இருந்­தது.

கூடு­தல் மாண­வர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் அதே வேளை­யில், உயர்­த­ர­மான கல்­வியை உறு­தி­செய்­யும் வகை­யில் சேர்க்­கைத் தரங்­கள் பேணப்­படும் என்று அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

"ஓராண்­டில் சேரும் மாண­வர்­கள் விகி­தம் என்ற நிலை­யி­லி­ருந்து நாம் முன்­செல்ல வேண்­டி­யுள்­ளது. வாழ்­நாள் முழு­தும் தொடர்ந்து நாம் கற்க வேண்­டு­மா­னால், நாம் வாழ்­நாள் கல்­வி­யில் சேரு­வோர் விகி­தத்­தைக் கொண்­டி­ருக்க வேண்­டும். இதில் ஒரு­வர் பட்­டக் கல்வி பயில்­கி­றாரா, பட்­ட­யக் கல்வி அல்­லது நிபு­ணத்­து­வச் சான்­றி­தழ் பெறு­கிறாரா என்­பதோ, எந்த வய­தில் படிக்­கி­றார் என்­பதோ முக்­கி­ய­மல்ல," என்று திரு சான் சொன்­னார்.

"நம் மாண­வர்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் சரி­யான நேரத்­தில் ஆத­ர­வ­ளிக்­கும் ஒரு முறையை நாம் கட்­ட­மைக்க வேண்­டும். தேவைக்­கேற்ற, தேவைப்­ப­டு­வோ­ருக்­கான கற்­றல் முறை­யாக அது விளங்க வேண்­டும்," என்­றார் அவர்.

பட்­டம், பட்­ட­யம் என்­றில்­லா­மல், அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் பாடப்­பி­ரி­வு­க­ளைத் தேர்ந்து எடுப்­ப­தைத் தாம் காண்­ப­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"அவர்­கள் குறிப்­பான, வேலைச் சந்­தை­யில் தங்­க­ளுக்­குக் கூடு­தல் சாத­கம் தரும் பாடப்­பி­ரி­வு­களைத் தேர்­வு­செய்து பயில்­கின்­ற­னர்.

"எடுத்­துக்­காட்­டாக, இணை­யப் பாது­காப்­புத் துறை­யில் ஏற்­கெ­னவே ஒரு­வர் சில ஆண்­டு­க­ளாக வேலை­செய்து வந்­துள்­ளார் எனில், குறிப்­பிட்ட இயங்­கு­த­ளங்­களில், குறிப்­பான தேர்ச்­சி­க­ளைப் பெறும் பாடப்­பி­ரி­வு­களை அவர் தேர்­வு­செய்து படிக்க வேண்டி இருக்­க­லாம்," என்று திரு சான் விளக்­கி­னார்.

"முழு­வீச்­சில் கல்­வி­யைத் தொட­ரும்­போது, 17,000 அல்­லது அதற்கு மேற்­பட்ட பல்­க­லைக்­க­ழக இடங்­க­ளுக்கு மட்­டும் அர­சாங்­கம் திட்­ட­மி­டக்­கூ­டாது.

"மாறாக, ஓராண்­டில் 300,000 முதல் 400,000 ஊழி­யர்­க­ளுக்கென, அனைத்துவிதமான 'தொடர்­கல்வி நிலை­யங்­க­ளுக்­கும்' திட்­ட­மிட வேண்­டும். அத­னால், பல்­க­லைக்­க­ழ­கங்­களும் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களும் தொடர்­கல்­விக்­கான இடங்­க­ளா­கத் திகழ வேண்­டும் என விரும்­பு­கி­றேன்," என்­றும் அவர் சொன்­னார்.

சென்ற ஆண்டு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் சேர்ந்த ஐந்­தில் இரு சிங்­கப்­பூ­ரர்­கள் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களில் பட்­ட­யம் பெற்­ற­வர்­கள் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

தொடக்­கப் புள்ளி அல்­லது பின்­னணி எது­வாக இருந்­தா­லும், ஒவ்­வொரு மாண­வ­ரை­யும் கைதூக்­கி­விட்டு, கல்­வி­யின் மூலம் அவர்­களின் திறமைகளை அடை­யா­ளம் கண்டு, அத­னைச் சிறப்­பா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள ஆத­ர­வ­ளிப்­ப­தில் அரசாங்கம் கடப்­பாடு கொண்­டுள்­ள­தா­க­வும் அமைச்சு கூறி­யது.

சமூக, பொரு­ளி­யல்­நிலை அடிப்­படை­யில் கடைசி 30 விழுக்­காட்­டில் இருக்­கும் மாண­வர்­கள் அர­சாங்க உத­வி­யு­டன் கூடிய பட்­டப் படிப்­பு­களில் சேர்­வது கூடி இருப்­ப­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

2004ல் 13 விழுக்­கா­டாக இருந்த அவ்­வி­கி­தம், 2019ல் 21 விழுக்­காடாக உயர்ந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!