சிங்கப்பூரில் ஓமிக்ரான் காரணமாகப் பதிவாகியிருக்கும் முதல் மரணம்

சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை கார­ண­மாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத 92 வயது மூதாட்டி ஒரு­வர் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று மாண்­டார்.

இதுவே ஓமிக்­ரான் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் பதி­வாகி இருக்­கும் முதல் மர­ணம்.

குடும்ப உறுப்­பி­ன­ரி­ட­மி­ருந்து அந்த மூதாட்­டிக்கு ஓமிக்­ரான் கிருமி பர­வி­ய­தாக தெரி­விக்­கப்

பட்­டது.

கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு பத்து நாள்­கள் கழித்து அவர் மாண்­டார்.

மூதாட்டி வேறு நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை என்று சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

மாண்ட மூதாட்­டி­யின் குடும்­பத்­தி­டம் சுகா­தார அமைச்சு தனது ஆழந்த அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டது.

“சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்

களு­டன் இணைந்து நோயாளி

களைப் பரா­ம­ரிக்க எங்­க­ளால் முடிந்த அனைத்­தை­யும் தொடர்ந்து செய்­வோம்,” என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தால் கொவிட்-19 அலை மோச­ம­டை­யக்­கூ­டும் என்று கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று முன்தினம் நடை­பெற்ற செய்தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தது. அன்றாட பாதிப்புகளில் 70 விழுக்காடு ஓமிக்ரான் கிருமியால் ஏற்படுவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!