சிறந்த சிங்கப்பூரர் சக்திபாலன்: தன்னலமற்ற சேவைக்கு விருது

‘ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் 2021ஆம் ஆண்­டுக்­கான சிறந்த சிங்­கப்­பூ­ரர்’ விருது சக்­தி­பா­லன் பால­தண்­டா­யு­தம், 28, என்­ப­வ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த விருதை அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று திரு சக்­தி­பா­ல­னுக்கு வழங்­கிக் கௌர­வித்­தார். தமது கல்­லீ­ர­லின் ஒரு பகு­தி­யைத் தான­மாக வழங்கி ஒரு வய­துக் குழந்­தைக்கு மறு­வாழ்வு அளித்த சக்­தி­பா­ல­னின் தன்­ன­ல­மற்ற செய­லுக்­கா­க­வும் மற்­ற­வர்­

க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மா­கத் திகழ்ந்­த­தற்­கா­க­வும் அவர் இந்த விரு­துக்­குத் தேர்ந்து எடுக்­கப்­பட்­டார்.

2020 ஜூலை­யில் தங்­க­ளு­டைய ஒரு வயது குழந்தை ரேயா­வுக்கு கல்­லீ­ர­லைத் தானம் செய்ய யாரா­வது முன்­வர முடி­யுமா என்று அதன் பெற்­றோர் சமூக ஊட­கம் ஒன்­றில் வேண்­டு­கோள் விடுத்­தி­ருந்­ததை சக்­தி­பா­லன் கவ­னித்­தார். அன்­றைய தினம் பின்­னி­ரவு 1 மணி­ய­ள­வில் குழந்­தை­யின் பெற்­றோ­ரைத் தொடர்­பு­கொண்ட அவர், தம்­மு­டைய கல்­லீ­ர­லின் ஒரு பகு­தியை தாம் முன்பின் அறிந்­தி­ராத அந்­தக் குழந்­தைக்குத் தானமாக வழங்க அப்போதே முடி­வு­செய்­தார்.

பல்­வேறு சுற்று மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளுக்­குப் பிறகு, தம்­மு­டைய கல்­லீ­ர­லின் 23 விழுக்­காட்டை குழந்தை ரேயா­வுக்கு அதே ஆண்டு செப்­டம்­பர் 30ஆம் தேதி தானமாக வழங்­கி­னார் இவர். யுபி­எஸ் பல்­

க­லைக்­க­ழக வளா­கத்­தில் நடந்த விருது விழங்­கும் நிகழ்­வின் சிறப்பு விருந்­தி­ன­ராக அதி­பர் ஹலிமா பங்­கேற்­றார்.

இறு­திச்­சுற்­றுக்­குத் தேர்­வான அனை­வ­ரும், பெரி­ய­தொரு நோக்­கத்­திற்­காக சிங்­கப்­பூ­ரர்­கள் சேவை­யாற்­றக்கூடி­ய­வர்­கள் என்­பதை உணர்த்தி இருப்பதாக அதி­பர் குறிப்­பிட்­டார். மனி­தா­பி­மா­னத்­துக்கு ஈடு இணை ஏது­மில்லை என்­பதை அவர்­கள் நிரூ­பித்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!