பிரித்தம் சிங்கிடம் மேலும் விசாரணை; ரயீசா கானுக்கு $35,000 அபராதம்

நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த விவகாரம் தொடர்பில் சிறப்புரிமைகள் குழு பரிந்துரை

பாட்டாளிக் கட்சியின் முன்­னாள் எம்.பி. ரயீசா கான் நாடா­ளு­மன்­றத்­தில் பொய்­யு­ரைத்த விவ­கா­ரத்­தில் அவ­ருக்கு $35,000 அப­ரா­தம் விதிக்­க­வும் அதன் தொடர்­பில் எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங்­கி­டம் அர­சாங்க வழக்­க­றி­ஞர் விசா­ரணை நடத்­த­வும் நாடா­ளு­மன்­றச் சிறப்புரிமைகள் குழு பரிந்­துரைத்­துள்­ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட், அக்­டோ­பர் மாதங்­களில் நாடா­ளு­மன்­றத்­தில் திரு­வாட்டி ரயீசா கான் பொய்­யு­ரைத்­தார். அதன் தொடர்­பில் நாடா­ளு­மன்­றச் சிறப்­பு­ரி­மை­கள் குழு கடந்த டிசம்­பர் மாதம் விசா­ரணை நடத்­தி­யது.

இந்­நி­லை­யில், அக்­குழு ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது. அதில், எட்டு உறுப்­பி­னர்­கள் அடங்­கிய குழு­முன் திரு சிங் நடந்­து­கொண்ட விதம் தொடர்­பில் குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டுமா என்­ப­தைப் பரி­சீ­லிக்­கும் பொருட்டு அவ­ரி­டம் அர­சாங்க வழக்­க­றி­ஞர் விசா­ரணை நடத்த வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­துள்­ள­தாக அக்­குழு குறிப்­பிட்­டுள்­ளது.

நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின் தலை­மை­யி­லான அந்த எண்­மர் குழு­வில் மேலும் ஆறு மக்­கள் செயல் கட்சி எம்.பி.க்களும் ஹவ்­காங் தொகு­தி­யின் பாட்­டா­ளிக் கட்சி எம்.பி. டெனிஸ் டானும் இடம்­பெற்­றுள்­ள­னர்.

பாலி­யல் துன்­பு­றுத்­த­லால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரு­டன் காவல் நிலை­யத்­திற்கு நேரில் சென்­ற­தா­க­வும் அப்­போது அவ்­வி­வ­கா­ரத்­தைக் காவல்­துறை அதி­கா­ரி­கள் கரு­ணை­யற்ற முறை­யில் கையாண்­ட­தாகவும் அதனால் அப்பெண் அழுது­விட்­டார் என்­றும் திரு­வாட்டி ரயீசா கான் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி பொய் சொன்­னார். அதற்­காக அவ­ருக்கு $25,000 அப­ரா­தம் விதிக்­கு­மாறு குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.

அதன்­பின் 2021 அக்­டோ­பர் 4ஆம் தேதி அவர் அதே பொய்யை மீண்­டும் கூறி­ய­தால் அவ­ருக்­கு மேலும் $10,000 அப­ரா­தம் விதிக்­க­வும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

பின்­னர் நவம்­ப­ரில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் காவல்துறையிடம் சென்றது குறித்து தாம் அங்­கத்­தி­ன­ராக உள்ள ஒரு குழு மூல­மாக அறிந்து­கொண்­ட­தை­யும் பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் ஒப்­பு­த­லின்றி அதைப் பகிர்ந்­து­கொண்­ட­தை­யும் திரு­வாட்டி கான் நாடா­ளு­மன்­றத்­தில் ஒப்புக்­கொண்­டார்.

அத­னைத் தொடர்ந்து, நவம்­பர் 30ஆம் தேதி பாட்­டா­ளிக் கட்­சி­யில் இருந்து வில­கி­னார் 29 வய­தான திரு­வாட்டி கான். அத்­து­டன், செங்­காங் குழுத்­தொ­குதி எம்.பி. பத­வி­யை­யும் அவர் துறந்­தார்.

2020 பொதுத் தேர்­த­லில் வெற்றி­பெற்று, சிங்­கப்­பூ­ரின் ஆக இளம் எம்.பி.யாக அவர் தேர்­வு­பெற்­றார். ஆனா­லும், 15 மாதங்­களி­லேயே அவர் தமது எம்.பி. பத­வி­யி­லி­ருந்து வில­கி­னார்.

பாட்­டா­ளிக் கட்சி துணைத் தலை­வ­ரும் அல்­ஜு­னிட் குழுத் தொகுதி எம்.பி.யுமான ஃபைசல் மனாப்­பை­யும் அர­சாங்க வழக்­க­றி­ஞர் விசா­ரிக்க வேண்­டும் என்று நாடா­ளு­மன்­றக் குழு பரிந்­து­ரைத்து இருக்­கிறது. குழு முன்­வைத்த கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்க மறுத்­த­தற்­கா­க­வும் அவர்­மீது குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டுமா என்­ப­தைப் பரி­சீ­லிக்­க­வும் இவ்­வாறு பரிந்­து­ரைக்­கப்­பட்டு உள்­ள­தாக குழு குறிப்­பிட்­டது.

அல்ஜுனிட் குழுத்தொகுதி எம்.பி.யுமான திரு சிங்­கிற்கு எதி­ரான புலன்­வி­சா­ரணை அல்­லது குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­கள் ஏதே­னும் இருக்­கும்­ பட்­சத்­தில், அவை முடி­யும்வரை அவருக்கு எதி­ரான ஏற்­பு­டைய தடை­கள் ஒத்­தி­வைக்­கப்­படும் என்று குழு தெரி­வித்துள்­ளது.

அடுத்த வாரம் நாடா­ளு­மன்­றம் கூடும்­போது, குழு­வின் பரிந்­து­ரை­கள்­மீது விவா­தம் நடத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பிரித்தம் சிங்: பணிகள் தொடரும்

இத­னி­டையே, தாம் அர­சாங்க வழக்­க­றி­ஞ­ரால் விசா­ரிக்­கப்­பட வேண்­டும் என்று நாடா­ளு­மன்­றச் சிறப்­பு­ரி­மை­கள் குழு பரிந்­து­ரைத்து இருந்­தா­லும், எப்­போ­தும்­போல் தமது பணி­க­ளைத் தொட­ர­வி­ருப்­ப­தாக திரு பிரித்­தம் சிங் தெரி­வித்­துள்­ளார்.

பாட்­டா­ளிக் கட்­சி­யின் துணைத் தலை­வர் ஃபைசல் மனாப்­பும் அவ்­வாறே செய்­வார் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு வழி­யாக திரு சிங் கூறி­யி­ருக்­கி­றார்.

குழு­வின் பரிந்­து­ரை­களை நாடாளு­மன்­றம் ஏற்­றுக்­கொள்­ளும் எனத் தாம் கரு­து­வ­தா­கக் கூறிய திரு சிங், இன்­னும் பல தெரி­யாத விஷ­யங்­கள் இருப்­ப­தா­க­வும் தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

குழு­வின் அறிக்கை நாடா­ளு­மன்ற விவா­தத்­திற்கு வைக்­கப்­படும்­போது, அது குறித்து தாம் விரி­வா­கப் பேச­வி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, நாடா­ளு­மன்­றச் சிறப்­பு­ரி­மை­கள் குழு­வி­டம் பாட்­டா­ளிக் கட்சித் தலை­வர் சில்­வியா லிம் அளித்த சாட்­சி­யத்­தின் சில பகு­தி­கள் பய­னுள்­ள­தாக இருந்­தன என்றும் ஆனாலும் அவரும் பொய்ச் சாட்சியம் அளித்தார் என்றும் அக்­குழு தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!