அரையாண்டுத் தேர்வு 2023 முதல் இராது

கல்வி அமைச்சர் அறிவிப்பு: எல்லா தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளும் தேர்வை நடத்தாது

சிங்­கப்­பூ­ரில் உயர்­நிலை, தொடக்­க­நிலை பள்­ளிக்­கூ­டங்­கள் அனைத் தும் அடுத்த ஆண்டு முதல் அரை­யாண்­டுத் தேர்வை அகற்­றி­வி­டும்.

மாண­வர்­க­ளின் கல்வித் தரம், தேர்­வு­களில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும் நடை­மு­றை­யில் இருந்து வில­கிச் செல்­லும் அணுகு­மு­றையையொட்டி அந்­தத் தேர்வை இனி பள்­ளிக்­கூ­டங்­கள் நடத்­தாது.

கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இந்த விவ­ரங்­களை அறி­வித்­தார்.

மாண­வர்­கள் தங்களுக்கு விருப்பம் உள்ள படிப்பை மேம்­படுத்­திக்கொள்­வ­தற்கு ஏற்­கெனவே வழங்­கப்­பட்டு வரும் வாய்ப்­பு­களை மேலும் பலப்­ப­டுத்­தும் வகை­யில் இந்த ஏற்­பாடு இடம்­பெ­று­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

மதிப்­பெண்­களில் முக்­கிய கவனம் செலுத்­தா­மல் மாண­வர்கள் பல­வற்­றை­யும் கற்­றுக்­கொள்­வ­தில் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்த இந்­தப் புதிய அணு­கு­முறை உதவும் என்­றார் அவர்.

தொடக்­கப்­பள்ளி 3 மற்­றும் 5, உயர்­நிலை 1 மற்­றும் 3 ஆகிய வகுப்பு மாண­வர்­க­ளுக்குக் கடந்த மூன்­றாண்­டு­களில் அரை­யாண்­டுத் தேர்­வு­கள் ரத்து செய்­யப்­பட்­டன.

கடந்த 2019 முதல் தொடக்­கப்­பள்ளி 1, மற்­றும் 2 ஆம் வகுப்பு மாண­வர்­கள் தேர்வு, பொதுத்­தேர்வு எதை­யும் எழு­த­வில்லை. அவர்­களுக்­குத் தரச் சான்­றி­த­ழும் கொடுக்­கப்­ப­ட­வில்லை.

இத்­த­கைய மாற்­றங்­கள் ஆக்க ­க­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தாக அமைச்­சர் திரு சான் மன்­றத்­தில் தமது அமைச்­சுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தின்­போது தெரி­வித்­தார்.

இந்த ஏற்­பா­டு­க­ளின் மூலம் பள்­ளிக்­கூ­டங்­களும் ஆசி­ரியர் களும் மாண­வர்­க­ளின் கற்­றல் திறனை வலுப்­ப­டுத்தலாம். அவர் களுக்கு அதிக வாய்ப்­பு­களை வழங்கலாம் என்றார் அமைச்­சர்.

எந்­தெந்த படிப்பில் மாண­வர்­கள் ஆற்­ற­லு­டன் இருக்­கி­றார்­கள், எவை எவை அவர்­க­ளுக்­குச் சிர­ம­மாக இருக்­கின்­றன என்­பதைக் கண்­டு­பி­டிக்க ஆசி­ரி­யர்­களும் பள்­ளிக்­கூ­டங்­களும் இப்­போ­தைய மதிப்­பீட்டு முறை­க­ளைப் பயன்­படுத்­து­கிறார்கள்.

மாண­வர்­களும், மதிப்­பெண்­களில் அவ்­வ­ள­வாக கவ­னம் செலுத்­தா­மல் பல­வற்­றை­யும் கற்றுக்­கொள்­வ­தில் ஒரு­மித்த கவனத்தைச் செலுத்­து­கி­றார்­கள் என்று திரு சான் விளக்­கி­னார்.

அரை­யாண்­டுத் தேர்வை ரத்து செய்­வதால் மாண­வர்­க­ளுக்கு வாழ்க்கை தேர்ச்­சி­களை மேம்­படுத்­திக்கொள்ள அதிக வாய்ப்பு கிடைப்­ப­தாக மன்­றத்­தில் உறுப்­பினர்­க­ளுக்கு அளித்த பதி­லில் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, பள்­ளிக்­கூ­டங்­கள், அவை தயா­ராக இருக்­கும்­பட்­சத்­தில், எஞ்­சிய வகுப்பு மாண­வர்­க­ளுக்­கும் அரை­யாண்­டுத் தேர்வை இந்த ஆண்டில் ரத்து செய்­ய­லாம் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

பள்­ளிக்­கூ­டங்­கள் பல­வ­கைப்­பட்ட மதிப்­பீ­டு­க­ளை­யும் நடை­முறை­க­ளை­யும் தொடர்ந்து பயன்­படுத்தி மாண­வர்­க­ளின் கற்­றல் திறனை மதிப்­பீடு செய்­யும்.

காலக்­கி­ரம முறைப்­ப­டி­யான செய்­முறை பயிற்­சி­க­ளின் வழி­யாக தக­வல்­களை வழங்­கு­வ­தோடு வழி­காட்­டி­யும் மாண­வர்­க­ளுக்கு அவை உத­வும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

மாண­வர்­கள் தங்­க­ளுக்கு நாட்­ட­மான படிப்­பு­களை ஆராய்ந்து கண்­டு­பி­டிக்க ஏது­வாக அதிக வாய்ப்­பு­களை கல்வி அமைச்சு ஏற்­ப­டுத்­தித்­ த­ரும்.

இத­னை­யொட்டி அது பாடத்­திட்ட உள்­ள­டக்­கங்­களை மறு­பரிசீலனை செய்­யும் என்­றும் திரு சான் விளக்­கி­னார்.

பல வாய்ப்­பு­களில் இருந்து பொருத்­த­மா­ன­வற்­றைத் தேர்ந்­தெடுத்து அவற்றை மாண­வர்களின் பல­த­ரப்­பட்ட தேவை­களுக்குத் தோதாக மாற்றி அமைக்கும் ஆற்­றலை ஆசிரியர்கள் கொண்­டி­ருக்க வேண்­டும் என்றார் அமைச்­சர்.

மாண­வர்­கள் பல­வற்­றை­யும் கற்­றுக்­கொள்­ள­வும் மற்­ற­வர்­க­ளு­டன் தங்­களை ஒப்­பிட்டுப் பார்த்து கவ­லைப்­ப­டு­வ­தைத் தவிர்த்­துக்­கொள்­ள­வும் வழிவகுக்கும் கலாசார மாற்­றம் ஏற்­பட இவை உத­வும்.

வழக்­க­மான வீட்டு அடிப்­ப­டை­யி­லான கற்­றல் ஏற்­பா­டு இந்த ஆண்டு முடி­வில் அனைத்து தொடக்­கப்­பள்ளி, புகு­முக வகுப்பு மாண­வர்­க­ளுக்கு அமல்­ப­டுத்­தப்­படும். இது கற்­ற­லில் மாண­வர்­கள் பொறுப்­பேற்­றுக்­கொள்ள வழி­வகுக்கும் என்றார் திரு சான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!