ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா பற்றி அமெரிக்கா

'எந்தப் பக்கம் என்பது பற்றி சிந்திக்கவேண்டும்'

உக்­ரே­னுக்கு எதி­ரா­கப் போர் தொடுத்­தி­ருக்­கும் ரஷ்யா, இந்­தி­யா­வின் நெருக்­கத்தை அதி­க­ரிக்­கும் வித­மாக மிகக் குறைந்த விலை­யில் கச்சா எண்­ணெய்யை அந்நாட்டுக்கு விநி­யோ­கிக்க முன்­வந்­துள்­ளது.

20 நாள்­க­ளைக் கடந்து போர் நீடித்து வரும் நிலை­யில் ரஷ்யா அறி­வித்த சலு­கை­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­யில் இந்­திய அர­சாங்­கம் இறங்கி இருப்­ப­தாக அது­கு­றித்து அறிந்­த­வர்­களை மேற்­கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இந்­தியா செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்­திய அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து இது­கு­றித்து அதி­கா­ர­பூர்வ தகவல் எது­வும் வெளி­வ­ராத நிலை­யில், ஊட­கங்­க­ளுக்கு இந்த விவ­கா­ரம் கசிந்­துள்­ளது.

இந்­தியா தனது தேவைக்கு 3.5 மில்­லி­யன் பீப்­பாய் கச்சா எண்­ணெய்யை அதி­க­மான விலைத் தள்­ளு­ப­டி­யில் ரஷ்­யா­வி­ட­மி­ருந்து பெறு­வ­தற்கு முயற்சி எடுத்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

எண்­ணெய் விநி­யோ­கத்­திற்­கும் அதற்­கான காப்­பீட்­டுக்­கும் தான் பொறுப்­பேற்­றுக்­கொள்­வ­தாக ரஷ்யா அறி­வித்­துள்­ளது.

ரஷ்ய கச்சா எண்­ணெய் விநி­யோ­கம் மூலம் இந்தியாவின் எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­கள் சந்­தித்து வரும் திண்­டாட்­டம் ஓர­ளவு தணி­யும் என்று கூறப்­ப­டு­கிறது.

ரஷ்யா இந்­தி­யா­வின் பழைய நட்பு நாடு. அர­ச­தந்­திர, தற்­காப்பு உற­வு­கள் இரு­நா­டு­க­ளுக்­கும் இடை­யில் நீடிக்­கின்­றன. ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் கடந்த ஆண்டு இந்­தியா சென்­றது நட்பை ஆழப்

படுத்­தி­யது.

உக்­ரே­னுக்கு எதி­ரான போர் கார­ண­மாக உல­கச் சந்­தை­யில் எண்­ணெய் விலை இரு­ம­டங்கு ஏறி­யது. அது பல நாடு­களில் விலை­வாசி ஏறும் அபா­யத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

ரஷ்யா அளிக்க முன்­வந்­தி­ருக்­கும் கச்சா எண்ெணய்­யின் விலை எவ்­வ­ளவு, தள்­ளு­படி எவ்­வ­ளவு என்ற விவ­ரங்­கள் இன்­னும் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

கடந்த வாரம் ரஷ்ய எரி­சக்தி அமைச்­ச­ரு­டன் தொலை­பேசி வாயி­லாக இந்­திய அமைச்­சர் ஹர்­தீப் பூரி பேச்சு நடத்­தி­ய­தைத் தொடர்ந்து எண்­ணெய் வாங்­கு­வ­தற்­கான முயற்­சி­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

இந்­தியா தனது எண்­ணெய் தேவை­யில் 85 விழுக்­காடு, இறக்கு­ ம­தியை நம்­பியே உள்­ளது.

2021 ஏப்­ரல் முதல் இவ்­வாண்டு ஜன­வரி வரை, அதாவது போர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு வரை ரஷ்­யா­வி­ட­மி­ருந்து 3.6 மில்­லி­யன் டன் பீப்­பாய் கச்சா எண்­ணெய்யை இந்­தியா வாங்­கி­யுள்­ளது.

போர் நடந்­து­வ­ரும் வேளை­யில் எண்­ணெய் அடிப்­ப­டை­யி­லான ரஷ்ய-இந்­திய நேசத்­தை உற்றுக் கவ­னித்து வரும் அமெ­ரிக்கா, வெளிப்­ப­டை­யா­கக் கருத்­துத் தெரி­வித்­துள்­ளது.

ரஷ்­யா­வின் எண்­ணெய்யை இறக்­கு­மதி செய்ய அமெ­ரிக்கா தடை விதித்­துள்­ளது. இவ்­வே­ளை­யில், ரஷ்ய எண்­ணெய்யை இறக்­கு­மதி செய்ய இந்­தியா முயற்சி எடுத்து வரு­கிறது.

"ரஷ்­யா­வுக்கு எதி­ரான பொருளி யல் தடையை இந்­தியா மீறு­வ­தா­கக் கரு­த­வில்லை.

"ஆயி­னும் தற்­போ­தைய அதன் போக்கு வர­லாற்­றின் தவ­றான பக்­கத்­தில் இடம்­பெற்­று­வி­டும்," என்று வெள்ளை மாளிகை பத்­தி­ரி­கைச் செய­லா­ளர் ஜென் சாகி தெரி­வித்­தார்.

"வர­லாறு எழு­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கிறது. இத்­த­கைய சூழ­லில் எந்தப் பக்கத்தில் நிற்கவேண்டும் என இந்தியா சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரஷ்ய தலை­மையை நாம் ஆத­ரித்­தால் அது உக்­ரேன் மீதான படை­யெ­டுப்பை ஆத­ரிப்­ப­தா­கவே கரு­தப்­படும்," என்­றார் அவர்.

உக்­ரேன் நில­வ­ரம் - பக்­கம் 8

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!