ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர்-மலேசியா இடையே தாராள தரைவழிப் பயணம்

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் ஏப்­ரல் 1 முதல் சிங்­கப்­பூர், மலே­சி­யா­வுக்கு இடை­யி­லான தரை­வ­ழிப் பய­ணத்தை கட்­டுப்­பா­டின்றி தாரா­ள­மாக மேற்­கொள்­ள­லாம். கொவிட்-19 பரி­சோ­தனை அல்­லது தனிமை உத்­த­ரவு ஆகி­ய­வற்­றுக்கு அவர்­கள் உட்­ப­ட­வேண்டி இருக்­காது.

வாக­னத்தை ஓட்­டிச் செல்­வோ­ருக்­கும் இது பொருந்­தும். அண்டை நாடு­

க­ளுக்கு இடை­யில் சிறிய அள­வி­லான பய­ணத்தை மேற்­கொள்ள, பெரி­தும் எதிர்­பாக்­கப்­பட்ட இந்த நட­வ­டிக்கை கைகொ­டுக்­கும்.

பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்கு முன் னரும் வந்­தி­றங்­கிய பின்­ன­ரும் பய­ணி­கள் பரி­சோ­த­னை­யைச் செய்ய வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்று சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் நேற்று கூட்­டாக அறி­வித்­தன.

மேலும், இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் தினந்­தோ­றும் பய­ணம் ெசய்வோரின் எண்­ணிக்­கை­யில் விதிக்­கப்­பட்­டி­ருக்­கும் கட்­டுப்­பா­டு­கள் விலக்­கிக்கொள்­ளப்­படும்.

விடி­எல் பேருந்­து­களில் நாள் ஒன்­றுக்கு 4,000 பேர் மட்­டுமே பய­ணம் செய்யமுடி­யும் என்­பது தற்­போ­தைய ஏற்­பாடு.

தரை வழி­யாக மேற்­கொள்­ளப்­படும் எல்­லா­வி­த­மான போக்­கு­வ­ரத்­திற்­கும் இந்­தப் புதிய ஏற்­பாடு பொருந்­தும்.

இது குறித்து பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பதி­வில், "இன்­றைய அறி­விப்பு கொவிட்-19 சூழ­லு­டன் வாழ்­வதை நோக்­கிய உரு­மாற்­றத்­தில் முக்­கிய திருப்­பு­முனை," என்று குறிப்­பிட்­டார்.

"கொள்­ளை­நோய் காலம் முழு­வ­தும் இரு­த­ரப்­பும் வலு­வான ஒத்­து­ழைப்­பைப் பின்­பற்றி வந்ததை இது பிர­தி­ப­லிக்­கிறது. மேலும், இரு­நா­டு­களும் நெருக்­க­டி­யி­லி­ருந்து வலு­வு­டன் மீண்­டெழ இந்த நட­

வ­டிக்கை உத­வும்," என்­றும் திரு லீ தெரி­வித்­தார். முன்­ன­தாக, நேற்­றுக் காலை மலே­சியப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பு­டன் தாம் தொலை­பேசி வழி உரை­யா­டி­ய­தா­க­வும் அவர் தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, இந்­தப் புதிய அறி விப்பை மலே­சி­யப் பிர­த­ம­ரும் வெளி யிட்­டுள்­ளார். இது, ஏப்­ரல் 1 முதல் தனது அனைத்­து­லக எல்­லை­க­ளைத் திறக்­கும் மலே­சிய நட­வ­டிக்­கை­யு­டன் இணைந்து உள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர்-மலே­சியா எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­ப­டு­வ­தால், கிட்­டத்­தட்ட கொவிட்-19க்கு முந்­தைய நிலைக்­குப் போக்­கு­வ­ரத்து திரும்­பும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 தொற்று ஏற்படுவ­தற்கு முன்­னர் உட்­லண்ட்ஸ் கடற்பாலம் வழி­யா­க­வும் துவாஸ் இரண்­டாம் பாலம் வழி­யா­க­வும் நாள் ஒன்­றுக்கு கிட்­டத்­தட்ட 415,000 பேர் சென்று வந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!