மாணவர்களுக்கு மின்னிலக்க ‘தமிழ் முரசு’ இலவசம்

மாதங்கி இளங்­கோ­வன்

 

இளம் வய­தி­லேயே தாய்­மொ­ழிக் கற்­றலை வாழ்­நாள் பய­ண­மாக ஊக்­கு­விக்­கும் வகை­யில் சிங்­கப்­பூ­ரின் அனைத்து உயர்­நி­லைப்­பள்­ளித் தமிழ் மாண­வர்­க­ளுக்­கும் தமிழ் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் இனி தமிழ் முர­சின் மின்-நாளி­தழ் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் அனைத்து உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளுக்­கும் தமிழ் முரசு, லியன்ஹ சாவ்­பாவ், பெரித்தா ஹரி­யான் ஆகிய நாளி­தழ்­க­ளின் மின் வடி­வம், அடுத்த ஆறு ஆண்­டு­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 'உங்­கள் விரல்­நுனி­யில் செய்­தி­கள்' திட்­டம் மூலம் 136 உயர்­நி­லைப் பள்­ளி­க­ளைச் சேர்ந்த சுமார் 143,000 மாண­வர்­கள் பய­ன­டை­வர்.

அக­மது இப்­ரா­ஹிம் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் கல்வி அமைச்சு, நீ ஆன் கொங்ஸி, எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் (எஸ்­எம்டி) ஆகி­யவை, தாய்­மொழிக் கல்­வியை ஆத­ரிக்­கும் முத்­த­ரப்­புப் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ஒன்­றில் நேற்று கையெ­ழுத்­திட்­டன.

ஒப்­பந்­தப்­படி அடுத்த ஆறு ஆண்­டு­க­ளுக்கு நீ ஆன் கொங்ஸி மொத்­தம் 15 மில்­லி­யன் வெள்­ளியை இத்­திட்­டத்­திற்கு நன்­கொ­டை­யாக அளிக்­கும்.

"தமிழ் முர­சின் மூலம் மாண­வர்­கள் அதி­கம் அறிந்­தி­ராத சுற்­றுச்­சூ­ழல் பிரச்­சி­னை­கள், நவீன கண்­டு­பி­டிப்­பு­கள் ஆகி­ய­வற்­றைப் பற்றி தெரிந்­து­கொள்ள வாய்ப்பு கிடைக்­கிறது," என்று தமிழ் முரசு இத­ழின் தனித்­து­வ­மான தக­வல்­களை உத­ரா­ணம் காட்­டிப் பேசி­னார் நிகழ்­வுக்­குச் சிறப்பு விருந்­தி­ன­ராக வருகை தந்த கல்வி அமைச்­சர் திரு சான் சுன் சிங்.

ஆங்­கில மொழிக்­கும் தமிழ்­மொழிக்­கும் சரி­ச­ம­மான முக்­கி­யத்­து­வம் அளித்து அவற்­றைப் பயன்­படுத்­து­வது சிங்­கப்­பூ­ரின் பல்­லின சமு­தா­யத்­தைக் கட்­டிக்­காக்க முக்­கி­யப் பங்­க­ளிப்­ப­தாக திரு சான் குறிப்­பிட்­டார். மாண­வர்­கள் தங்­கள் தேர்­வு­களில் நல்ல மதிப்­பெண்­கள் வாங்க மட்­டும் தாய்­மொ­ழி­யைப் படிக்­கா­மல் உலக விவ­கா­ரங்­க­ளைப் புரிந்­து­கொள்­ள­வும் ஆரா­ய­வும் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என அறி­வு­றுத்­தி­னார்.

தாய்­மொ­ழிப் புழக்­கத்தை மாண­வர்­க­ளி­டையே ஊக்­கு­விக்க ஏற்­பாடு செய்­யப்­பட்ட 'உங்­கள் விரல்­நு­னி­யில் செய்­தி­கள்' திட்­டத்­தின் கீழ், தமிழ் முர­சின் திங்­கட்­கி­ழமை பதிப்­பின் மின்­னி­லக்க வடி­வத்தை மாண­வர்­கள் பெறு­வர். திங்­க­ளன்று பொது­வாக தமிழ் முரசு செய்­தித்­தா­ளு­டன் இளை­யர் முரசு, மாண­வர் முரசு ஆகி­யவை வெளி­யி­டப்­படு­கின்­றன.

தமிழ் முர­சின் இன்ஸ்­ட­கி­ராம் (@tamil_murasu), டிக்-டாக்(tamilmurasu_sg), யூடி­யூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊட­கத் தளங்கள் இளை­யர்­க­ளுக்­கா­கவே பிரத்­தி­யே­க­மான படைப்­பு­களை வழங்­கு­கின்­றன.

எஸ்­பி­எச்­சு­டன் கல்வி அமைச்சு மேற்­கொள்­ள­வி­ருக்­கும் புதிய முயற்சி­களில் ஊட­கம் தொடர்­பான திட்­டங்­களும் அடங்­கி­யுள்­ளன. உதா­ர­ணத்­திற்கு, பள்­ளி­க­ளு­டன் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் இணைந்து மாண­வர்­க­ளுக்­குத் செய்­தித்­து­றை­யில் உள்ள நிபு­ணர்­க­ளைச் சந்­திக்­கும் வாய்ப்பை வழங்­க­லாம்.

ஆசி­ரி­யர்­களும் வேலை அனு­பவங்­களை எஸ்­பி­எச்­சில் பெற்­றுக்­கொண்டு தாங்­கள் கற்­றுக்­கொண்­ட­தைப் பள்­ளி­யில் பகிர்ந்­து­கொள்­ள­லாம். தின­மும் செய்­தி­களைப் படித்து நாட்டு நடப்­பைத் தெரிந்து­கொள்­வ­தன் அவ­சி­யத்தை மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் எஸ்­பி­எச் உத­வி­யு­டன் அறிந்­து­கொள்­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!