4ஆம் தலைமுறை தலைவராக லாரன்ஸ் வோங்; அடுத்த பிரதமராக வழிவகுப்பு

மக்­கள் செயல் கட்­சி­யின் நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­கள் குழு­வின் தலை­வ­ராக நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் (படம்) தேர்­வு­ செய்­யப்­பட்­டுள்­ளார். இத­னை­ அடுத்து, திரு லாரன்ஸ் வோங் சிங்­கப்­பூ­ரின் அடுத்த பிர­த­ம­ரா­கப் பொறுப்­பேற்க வழி­வ­குக்­கப்­பட்­டு இருக்கிறது.

நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­கள் குழு­வின் தலை­வ­ராக திரு லாரன்ஸ் வோங்­கைத் தேர்­வு­செய்­துள்­ளதை அமைச்­சர்­கள் நேற்று உறு­திப்­ப­டுத்­தி­னர் என்று பிர­த­மர் லீ சியன் லூங் ஓர் அறிக்­கை­யின் வழி­யா­கத் தெரி­வித்­தார்.

"ஆலோ­ச­னைக்­குப் பிறகு, நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­கள் குழு­வின் தலை­வர் பத­விக்­குத் தங்­க­ளின் தெரிவு அமைச்­சர் லாரன்ஸ் வோங் என்­பதை அமைச்­சர்­கள் இன்று (நேற்று) உறு­திப்­படுத்­தி­னர். இன்று (நேற்று) மாலை இடம்­பெற்ற கட்­சிக் கூட்­டத்­தில், மசெக நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அனைவரும் இந்த முடிவை ஏற்­றுக்­கொண்­ட­னர்," என்று பிர­தமர் லீ தமது அறிக்­கை­யில் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

கடந்த ஆண்டு ஏப்­ர­லில் மசெ­க­வின் 4ஆம் தலை­முறைத் தலை­வர்­கள் குழு­வின் தலை­வர் பத­வி­யில் இருந்து துணைப் பிர­தமர் ஹெங் சுவீ கியட் விலகினார்.

இத­னை­ய­டுத்து, தங்­க­ளது குழு­வின் அடுத்த தலை­வர் தொடர்­பில் கருத்­தி­ணக்­கத்தை எட்ட நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­கள் குழு கால அவ­காசம் கேட்­டது என்­றும் அப்­போது அவர்­கள் கொவிட்-19 பர­வலை எதிர்­கொள்­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டி­யி­ருந்­தது என்­றும் திரு லீ விளக்­கி­னார்.

அமைச்­சர்­க­ளு­டன் ஆலோ­சனை செய்த பிறகு, மசெக 4ஆம் தலை­மு­றைக் குழு­வின் தலை­வரைத் தேர்­வு­செய்­வது தொடர்­பில் அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின், என்­டி­யுசி தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் ஆகி­யோரை உள்­ள­டக்­கிய ஒரு செயல்­மு­றை­யைத் தொடங்­கும்­படி முன்­னாள் அமைச்­ச­ரும் மசெக தலை­வ­ரு­மான கோ பூன் வானி­டம் பிர­த­மர் லீ கேட்­டுக்­கொண்­டார்.

அத­னைத் தொடர்ந்து அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் தனித்­தனி­யா­கச் சந்­தித்த திரு கோ, அவர்­க­ளின் தனிப்­பட்ட கருத்­தைக் கேட்­ட­றிந்து, அவற்­றின் ரக­சி­யம் காத்து, 4ஆம் தலை­மு­றைக் குழு­வின் தலை­வர் தொடர்­பில் கருத்­தி­ணக்­கத்தை எட்ட வழி­வ­குத்­தார். இவ்­வி­வ­கா­ரத்­தில், பிர­த­மர் மற்­றும் இரு மூத்த அமைச்­சர்­க­ளி­டம் கருத்து கேட்­கப்­ப­ட­வில்லை.

தாம் ஆலோ­சித்­த­வர்­களில் பெரும்­பா­லோர், 4ஆம் தலை­முறைக் குழு­வின் அடுத்த தலை­வராக அமைச்­சர் வோங்­கிற்கு ஆத­ரவு அளிப்­பதை திரு கோ கண்­ட­றிந்­தார்.

தமது முடிவு­களை அமைச்­சர்­கள், மன்ற நாய­கர், என்­டி­யுசி தலை­மைச் செய­லா­ளர் ஆகி­யோ­ரி­டம் திரு கோ முன்­ன­தாக நேற்று விளக்­கி­னார். அத­னையடுத்து, 4ஆம் தலை­மு­றைக் குழு­வின் தலை­வ­ராக அமைச்­சர் வோங் தேர்­வு­செய்­யப்­படும் முடி­விற்கு அவர்­கள் அனை­வ­ரும் உடன்­பட்­ட­னர். பின்­னர் நேற்று மாலை­யில் இடம்­பெற்ற மசெக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கூட்­டத்­தில் அம்­மு­டிவு அறி­விக்­கப்­பட்டு, ஒப்­பு­தல் பெறப்­பட்­டது.

இம்­மு­டிவை அடுத்து, பிர­த­மர் லீ அமைச்­ச­ர­வை­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்­வார். அம்­மாற்­றங்­கள் குறித்து உரிய நேரத்­தில் அறி­விக்­கப்­படும்.

"அடுத்த தலை­மைத்­து­வம் தொடர்­பி­லான இம்­மு­டிவு சிங்­கப்­பூ­ருக்கு மிக முக்­கி­ய­மா­னது. நமது அரசமைப்­பின் சிறப்­பம்­சங்­க­ளாக விளங்­கும் தலை­மைத்­து­வத் தொடர்ச்­சி­யை­யும் நிலைத்­தன்­மை­யை­யும் இது உறு­திப்­ப­டுத்­தும். வழி­ந­டத்­திச் செல்­லும் உரி­மையை மர­பு­ரி­மை­யா­கப் பெற முடி­யாது என்­பதை அமைச்­சர்­கள் அங்­கீ­கரித்­துள்­ள­னர். தங்­க­ளால் முடிந்த அளவு சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குச் சிறப்­பா­கப் பணி­யாற்­று­வதை திரு லாரன்ஸ் வோங்­கும் அவ­ரது இளம் குழு­வி­ன­ரும் தொடர்ந்து, அவர்­களின் நம்­பிக்­கை­யை­யும் ஆத­ர­வை­யும் நியா­யப்­ப­டுத்­து­வர்," என்று பிர­தமர் லீ தெரி­வித்­துள்­ளார்.

'சிங்கப்பூரர்களுக்கு முழுமனத்துடன் சேவையாற்றுவதைத் தொடர்வேன்'

நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­கள் குழு­வுடன் இணைந்து, சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு முழு­ம­னத்­து­டன் சேவை­யாற்­று­வ­தைத் தொடர்­வேன் என்­றும் சக சிங்­கப்­பூ­ரர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரின் நம்­பிக்­கை­யை­யும் ஆத­ர­வை­யும் பெற கடு­மை­யாக முயல்­வேன் என்­றும் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து இருக்­கி­றார்.

கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான திரு வோங், 2021 மே மாதம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது நிதி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

கடந்த 2011 பொதுத் தேர்­தல் மூலம் அர­சி­ய­லில் அடி­ எடுத்து வைக்­கு­முன் இவர் மூத்த அர­சாங்க அதி­கா­ரி­யாக இருந்­தார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­ன­பின், தற்­காப்பு, கல்வி துணை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டார். அதன்­பின் கலா­சார, சமூக, இளை­யர்­துறை இடைக்­கால அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டு, பின்­னர் 2014 மே மாதம் முழு அமைச்­ச­ரா­கப் பதவி உயர்வு பெற்­றார். 2015ல் தேசிய வளர்ச்சி அமைச்­ச­ரா­க­வும் 2016ல் நிதி 2ஆம் அமைச்­ச­ரா­க­வும் பொறுப்­பேற்ற இவர், 2020 பொதுத் தேர்­த­லுக்­குப்­பின் கல்வி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், சக அமைச்­சர்­கள் தம்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கைக்­கும் சக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­விற்­கும் தாம் தலை­வ­ணங்­கு­வ­தா­க­வும் நன்­றிக்­க­டன்­பட்­டுள்­ள­தா­க­வும் தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யாக அமைச்­சர் வோங் தெரி­வித்­துள்­ளார்.

"1959ஆம் ஆண்­டி­லி­ருந்து, நமது அர­சி­யல் தலை­மைத்­துவ முறை­யா­னது ஒரு­போ­தும் ஒரு­வரை மையப்­ப­டுத்தி இல்­லா­மல், ஒரு குழுவை மையப்­ப­டுத்­தியே இருந்து வரு­கிறது. நம்­மில் ஒவ்­வொ­ரு­வரும் பங்­க­ளித்து, ஒரு­வருக்கு ஒரு­வர் ஈடு­கொடுத்து, சிங்­கப்­பூ­ருக்­கு நம்மால் முடிந்த அள­விற்­குச் சிறப்­பா­கப் பணி­ ஆற்றி வரு­கி­றோம்.

'கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் நான்­காம் தலை­மைத்­ துவக் குழு­வில் இடம்­பெற்­றுள்ள அமைச்­சர்­கள் அனைவரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தோளோடு தோளாக நின்று வரு­கி­றோம். கடந்த ஈராண்டு அனு­ப­வம் எங்­க­ளது பிணைப்பை உறு­திப்­ப­டுத்தி, இந்த நெருக்­கடி­யில் இருந்­தும் அதன்­பின்­னும் சிங்கப்­பூ­ரைப் பாது­காப்­பாக வழி­ந­டத்­திச் செல்­ல­வேண்­டும் எனும் மன­வு­று­தியை வலுப்­படுத்தி­ இருக்கிறது," என்று திரு வோங் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!