நியூசிலாந்துடன் அணுக்க ஒத்துழைப்பு

பிரதமர் லீ: பருவநிலை மாற்றம், பசுமைப் பொருளியல் அம்சங்களில் இணைந்து பணியாற்றுவோம்

பசு­மைப் பொரு­ளி­யலிலும் பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு எதி­ரான போரிலும் சிங்­கப்­பூ­ரும் நியூ­சி­லாந்­தும் அணுக்­க­மாக ஒத்­து­ழைக்­கும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் அறி­வித்­துள்­ளார்.

இஸ்­தா­னா­வில் நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­ட­னு­டன் இணைந்து செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த பிர­த­மர் லீ, பரு­வ­நிலை மாற்­றம் தொடர்­பில் இரு நாடு­களும் ஒத்த கண்­ணோட்­டத்­தைக் கொண்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

"நாம் வாழும் புவி­யில் மிக எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய மக்­களை­யும் இடங்­க­ளை­யும் பாது­காக்க நாடு­க­ளுக்கு இடையே வலு­வான ஒத்­து­ழைப்பு தேவை," என்று திரு லீ வலி­யு­றுத்­தி­னார்.

திரு­வாட்டி ஆர்­டன் மூன்று நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ண­மாக சிங்­கப்­பூர் வந்­துள்­ளார். கொவிட்-19 பெருந்­தொற்­றுக் கால­கட்­டத்­தில் இரு­நாட்­டுத் தலை­வர்­களும் பேணிய தொடர்­புக்­காக பிர­த­மர் லீக்கு அவர் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

"கடி­ன­மான காலங்­க­ளில்­தான் ஒரு­வ­ரது நண்­பர்­கள் யார் என்­பது நினை­வூட்­டப்­படும். அந்த வகை­யில், சிங்­கப்­பூர், நியூ­சி­லாந்­தின் மிக நெருக்­க­மான நட்பு நாடா­கத் திகழ்­கிறது," என்­றார் திரு­வாட்டி ஆர்­டன்.

கொவிட்-19 பர­வ­லுக்­குப்­பின் சிங்­கப்­பூ­ருக்கு அவர் மேற்­கொண்­டுள்ள முதல் பய­ணம் இது.

ஆற்­றல் மாற்­றத் தொழில்­நுட்­பம், கரி­மச் சந்­தை­கள், நீடித்து நிலைக்­கத்­தக்க போக்­கு­வ­ரத்து, கழிவு மேலாண்மை ஆகிய துறை­களில் சிங்­கப்­பூ­ரும் நியூ­சி­லாந்­தும் இணைந்து பணி­யாற்­றும் என்று பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

கடந்த 2019ல் திரு­வாட்டி ஆர்டன் முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூர் வந்­தி­ருந்­த­போது, இரு நாடு­களும் மேம்­ப­டுத்­தப்­பட்ட பங்­கா­ளித்­து­வத்­தில் கையெ­ழுத்­திட்­டன. இந்­நி­லை­யில், அப்­பங்­கா­ளித்­துவத்­தின் புதிய, ஐந்­தா­வது தூணாக பரு­வ­நிலை மாற்­ற­மும் பசு­மைப் பொரு­ளி­ய­லும் விளங்­கும்.

வர்த்­த­கம் மற்­றும் பொரு­ளி­யல், பாது­காப்பு மற்­றும் தற்­காப்பு, அறி­வி­யல், தொழில்­நுட்­பம் மற்­றும் புத்­தாக்­கம், மக்­க­ளுக்கு இடை­யிலான தொடர்­பு­கள் ஆகி­யவை மற்ற நான்கு தூண்­கள்.

செய்­தி­யா­ளர் சந்­திப்­பிற்­கு­முன், திரு­வாட்டி ஆர்­ட­னுக்கு இஸ்­தானா­வில் வர­வேற்பு அளிக்­கப்­பட்டது.

பிர­த­மர் லீயைச் சந்­திக்­கு­முன் அதி­பர் ஹலிமா யாக்­கோபை அவர் சந்­தித்­துப் பேசி­னார்.

வட்­டார, அனைத்­து­லக நில­வரங்­கள் குறித்து தாங்­கள் இரு­வரும் கலந்­தா­லோ­சித்­த­தாக பிர­தமர் லீ தெரி­வித்­தார்.

தாங்­கள் இரு­வ­ரும் அனைத்­து­ல­கச் சட்­டம் மற்­றும் ஐநா சாசனத்­தில் இடம்­பெற்­றுள்ள கொள்­கை­க­ளின் தீவிர ஆத­ர­வாளர்­கள் எனக் குறிப்­பிட்ட திரு லீ, "அத­னால்­தான் உக்­ரேன் மீதான ரஷ்யப் படை­யெ­டுப்­பிற்­குச் சிங்­கப்­பூரும் நியூ­சி­லாந்­தும் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன," என்­றும் சொன்­னார்.

செய்­தி­யா­ளர் சந்­திப்­பிற்­குப்­பின் பிர­த­மர் லீ, திரு­வாட்டி ஆர்­ட­னுக்கு நண்­ப­கல் விருந்­த­ளித்­தார்.

முன்­ன­தாக, திரு­வாட்டி ஆர்­டனைச் சிறப்­பிக்­கும்­வி­த­மாக, நேற்­றுக் காலை­யில் புதிய வகை ஆர்க்­கிட் மல­ருக்கு டெண்­டி­ரோ­பி­யம் ஜெசிந்தா ஆர்­டன் எனப் பெயர் சூட்­டப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!