இந்தோ-பசிபிக் பொருளியல் திட்டம்: சிங்கப்பூர் வரவேற்பு

அமெரிக்காவின் உத்தேச திட்டத்தில் ஆசியான் அதிக ஈடுபாடு தேவை என்றார் பிரதமர்

இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­திற்­காக அமெ­ரிக்கா உத்­தே­சித்து உள்ள பொரு­ளி­யல் திட்­டத்தை சிங்­கப்­பூர் வர­வேற்று உள்­ளது.

அந்­தத் திட்­டத்­தில் ஆசி­யான் அதி­க­ளவு ஈடு­பட வேண்­டும் என்றும் சிங்­கப்­பூர் ஊக்­க­மூட்­டு­கிறது. வாஷிங்­ட­னில் வியா­ழக்­கி­ழமை அமெ­ரிக்க அதி­கா­ரி­கள், தொழில்­துறைத் தலை­வர்­க­ளி­டம் இவ்­வாறு பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தார்.

"அந்­தத் திட்­டம் எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­க­வேண்டும். பரந்த ஈடு­பாட்டை ஊக்­கு­விக்­கும் வகை­யில் கண்­கூ­டான நன்­மை­களை அது ஏற்­படுத்­தித் தர வேண்­டும்.

"மின்­னி­லக்­கம், பசு­மைப் பொரு­ளி­யல், உள்­கட்­ட­மைப்பு வசதி­கள் போன்ற துறை­களில் ஒத்­து­ழைப்பை அந்­தத் திட்­டம் உள்­ள­டக்கி இருக்க வேண்­டும்," என்று 'இந்தோ-பசி­பிக் பொரு­ளி­யல் ஏற்­பாடு' என்ற அமெ­ரிக்­கா­வின் அந்த யோசனை பற்றி கருத்து தெரி­வித்­த­போது திரு லீ இவ்வாறு குறிப்­பிட்­டார்.

"அந்த ஏற்­பாட்­டில் ஆசி­யான் அதி­க­ளவு ஈடு­பாடு கொள்ள நாங்­கள் ஊக்­க­மூட்­டு­கி­றோம்.

"அந்­தத் திட்­டத்­தில் கலந்­து­கொள்­ளும்­படி ஆசி­யான் உறுப்பு நாடு­களை அமெ­ரிக்கா நேர­டி­யாக அழைக்­கும் என்­றும் நாங்­கள் நம்­பு­கி­றோம்," என்­றார் திரு லீ.

அமெ­ரிக்­கா­வின் அந்­தத் திட்டம் இன்­ன­மும் முறை­யா­கத் தொடங்­கப்­ப­ட­வில்லை.

அமெ­ரிக்க அதி­பர் பைடன் இந்த மாத முடி­வில் ஜப்­பான், தென்­கொ­ரியா நாடு­க­ளுக்கு வருகை அளிக்க இருக்­கி­றார்.

அப்­போது அந்­தத் திட்­டம் வெளி­யி­டப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அமெ­ரிக்­கா­வுக்­கான ஜப்­பா­னிய தூதர் அண்­மை­யில் தெரி­வித்­தார்.

இந்தோ-பசி­பிக் வட்­டார உத்­தேச பொரு­ளி­யல் திட்­டம் பற்றி இது­வரை ஒரு சில விவ­ரங்­களே வெளி­யி­டப்­பட்டு இருக்­கின்­றன.

அந்த ஏற்­பாடு வழி­வ­ழி­யான வர்த்­தக உடன்­பா­டாக இருக்­காது. அதிக சந்தை வாய்ப்­பு­க­ளை­யும் அது உள்­ள­டக்­காது என்று பைடன் நிர்­வா­கம் கோடி­காட்டி இருக்­கிறது. மாறாக, அந்­தத் திட்­டம் நான்கு தூண்­க­ளைச் சிறப்­பம்­சங்­க­ளா­கக் கொண்­டி­ருக்­கும்.

சுற்­றுப்­பு­றத்­திற்­குப் பாத­கம் விளை­விக்­காத எரி­சக்தி, சேவை, பொருள் விநி­யோ­கக் கட்­ட­மைப்­பு­கள், ஊழல் ஒழிப்பு, நியா­ய­மான, மீள்­தி­றன்­மிக்க வர்த்­த­கம் ஆகி­யவை அந்­தத் தூண்­கள் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

மின்­னி­லக்க ஆற்­ற­லை­யும் வட்­டார இணைப்­பை­யும் தள­வா­டப் போக்­கு­வ­ரத்து உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளை­யும் பலப்­ப­டுத்­து­வ­தில் அமெ­ரிக்­கா­வுக்­கும் ஆசி­யா­னுக்­கும் இடை­யில் ஒத்­து­ழைப்பு இடம்­பெ­று­வதை சிங்­கப்­பூர் வர­வேற்­ப­தா­க­வும் திரு லீ குறிப்­பிட்­டார். வட்­டார மனி­த­வள மேம்­பாட்­டுக்­கும் சிங்­கப்­பூர் ஆத­ரவு அளிக்­கிறது என்­றார் அவர்.

முன்­ன­தாக திரு லீக்­கும் இதர ஆசி­யான் தலை­வர்­க­ளுக்­கும் அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் விருந்­த­ளித்­துச் சிறப்­பித்­தார்.

இத­னி­டையே, ஆசி­யான்-அமெ­ரிக்கா இரு தரப்­பு­களும் வட்­டார, உலகப் பிரச்­சி­னை­கள் பற்­றி­யும் ஆசி­யான், அமெ­ரிக்க எதிர்­கால ஒத்­து­ழைப்பு பற்­றி­யும் தங்­க­ள் கருத்­து­க­ளைப் பரஸ்­ப­ரம் பரி­மா­றிக்கொண்­ட­தாக பிர­த­ம­ரின் செய்தி துறைச் செய­லா­ளர் சாங் லி லின் கூறி­னார்.

ஆசி­யான்-அமெ­ரிக்கா திட்­டங்­களை குறிப்­பாக, இந்த வட்­டா­ரத்­தில் வர்த்­த­கம், முத­லீட்டை தொடர்ந்து ஆத­ரிக்­கும்­படி அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பிர­த­மர் திரு லீ கேட்­டுக் கொண்­டார்.

பரஸ்­ப­ரம் பல­ன­ளிக்­கக்­கூ­டிய புதிய துறை­களில் அமெ­ரிக்­கா­வும் ஆசி­யா­னும் தொடர்ந்து ஒத்­து­ழைப்­புக்­கான வழி­க­ளைக் காண்­ப­தற்கு ஆத­ரவு அளிக்கும் படியும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!