எகிறும் கோழி விலை; விழிபிதுங்கும் வணிகர்கள், பொதுமக்கள்

மலே­சியா அடுத்த வாரத்­தி­லி­ருந்து கோழி ஏற்­று­ம­தியைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்போவ­தாக அறி­வித்­த­தைத் தொடர்ந்து, போதி­ய அ­ளவு கோழி கிடைக்­குமா, விலை எந்­த­ள­வுக்கு உய­ரும் என வணி­கர்­களும் கோழி உண்­ப­வர்­களும் கவ­லைப்­படத் தொடங்­கி­யுள்­ள­னர்.

உள்­நாட்டு விலை­யும் உற்­பத்­தி­யும் நிலைப்­படும் வரை­யில் மாதம் 3.6 மில்­லி­யன் கோழி­கள் ஏற்­று­மதியை ஜூன் 1 முதல் மலே­சியா நிறுத்­தும் என்று மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நேற்று முன்­தி­னம் அறி­வித்­தார்.

இத­னால் சிங்­கப்­பூ­ரில் கோழி இறைச்­சி­யின் விலை 10லிருந்து 30 விழுக்­காடு வரை அதி­க­ரிக்­க­லாம் என்று சில கடைக்­கா­ரர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

தேக்கா நிலைய ஈரச்­சந்­தை­யில் கோழி இறைச்சி விற்­பனை செய்­யும் 42 வயது அபு பக்­கர் ஜன்­னத்து கனி, "என்­னி­டம் கோழி வாங்­கு­ப­வர்­களில் பெரும்­பா­லா­னோர் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் என்­ப­தால், விலை ஏற்­றத்­தி­னால் வாடிக்­கை­யா­ளர்­கள் குறைந்­து­விட்­டார்­கள்," என்­றார். இவர் கடை­யில் இரு மாதங்­க­ளுக்கு முன்­னர் $6.50 ஆக இருந்த முழுக் கோழி­யின் விலை 50 காசு உயர்ந்து தற்­போது $7.00 ஆக உள்­ளது.

மலே­சி­யா­வி­லி­ருந்தே மொத்த கோழி­யை­யும் இறக்­கு­மதி செய்­யும் இவர், இனி­மேல் வேறு இடங்­க­ளில் ­இருந்து கோழி வாங்க வேண்­டும் என்­றும் கோழி விலையை மேலும் உயர்த்த வேண்டி இருக்­கும் என்­றும் கூறி­னார்.

கோழி விற்­ப­னை­யா­ளர்­களும் கோழி விற்­கும் உண­வகங்­களும் வேறு இடங்­க­ளி­லி­ருந்து புதிய கோழி­யைப் பெறு­வ­தற்கு விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளு­டன் இணைந்து செயல்­பட்டு வரு­கின்­றன.

எனி­னும், மலே­சி­யா­வின் இந்த முடிவு தங்­கள் வணி­கத்தை கடு­மை­யா­கப் பாதிக்­கும் என பல உண வகங்­கள் கவலை தெரி­வித்­தன.

உணவு பானத் தொழில் ஏற்­கெ­னவே கொவிட்-19 சூழ­லால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், உண­வுப் பொருள் விலை­யேற்­றம் கூடு­தல் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அடி மேல் அடி­யாக கோழித் தடை மேலும் சிர­மத்­தைத் தரும் என்று பல­ரும் கருத்­துத் தெரி­வித்­த­னர்.

நேற்­றைய நில­வ­ரப்­படி ஒரு கிலோ­வுக்கு $1.20 வரை கோழி விலை உய­ரும் என்று விநி­யோ­கிப்­பா­ளர்­கள் கூறி­னர். தடை நடப்­புக்கு வந்­த­தும் (ஜூன் 1) மூன்று மடங்­காக உய­ரும் என்று எதிர்­பார்ப்­ப­தாக சிலர் கூறி­னர்.

"எங்­கள் வீட்­டில் வாரம் ஒரு முறை­யா­வது கோழி சமைப்­போம். கடந்த இரு மாதங்­களில் ஒரு கோழி­யின் விலை $8 லி­ருந்து $12 ஆக உயர்ந்­து­விட்­டது. மலே­சி­யா­வி­லி­ருந்து கோழி வராது என்­ப­தால் விலை மேலும் கூடும். செல­வைக் கட்­டுப்­ப­டுத்த காய்­க­றி­களை உண்­பதை அதி­க­ரித்து கோழி சாப்­பி­டு­வதைக் குறைக்­க­வேண்­டும்," என்­றார் முகம்­மது ஜுபைர், 40.

மற்ற இறைச்சி வகை­க­ளையோ வேறு நாடு­க­ளி­லி­ருந்து வரும் உறை­ய­வைக்­கப்­பட்ட கோழி இறைச்­சி­யையோ வாங்­கப்­போ­வ­தாக வேறு சிலர் கூறி­னர்.

அதே­நே­ரத்­தில் புதிய கோழி­யைப் பெறு­வது பிரச்­சி­னை­யாக இருக்­கும், ஆனால், உறைந்த கோழி தொடர்ந்து கிடைக்­க வேண்­டும் என்று உண­வ­கங்­களும் கோழி வியா­பாரம் செய்­ப­வர்­களும் குறிப்­பிட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரின் கோழி விநி­யோ­கத்­தில் மூன்­றில் ஒரு பங்கு மலே­சி­யா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கிறது. கோழி இறக்­கு­மதி செய்­யப்­படும் ஏனைய முக்­கிய நாடு­களில் பிரே­சில், அமெ­ரிக்கா ஆகி­யவை அடங்­கும் என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு கூறி­யது.

உறைந்த கோழி­க­ளின் இறக்­கு­ம­தியை அதி­க­ரிப்­பது, சேமிப்­பி­லி­ருந்து கோழியை விநி­யோ­கிப்­பது என மாற்று வழி­மு­றை­க­ளைச் செயல்­ப­டுத்த பங்­கு­தா­ரர்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தா­க­வும் அமைப்பு திங்­க­ளன்று கூறி­யது.

கடந்த சில மாதங்­க­ளாக மலே­சி­யா­வில் கோழி இறைச்சி விநியோகத்­தில் ஏற்­பட்­டுள்ள பிரச்சினை களால் கோழி விலை கூடி­யுள்­ளது. ஒரு சில நிறு­வ­னங்­கள் கோழி விநி­யோ­கத்­தை­யும் கோழி இறைச்­சி­யின் விலை­யை­யும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தா­க­வும் அது குறித்து விசா­ரணை நடப்­பதா­க­வும் மலே­சிய அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த 2020ல் மலே­சி­யா 49 மில்­லி­யன் உயிர் கோழி­கள், 42.3 டன் கோழி, வாத்து இறைச்சியை ஏற்றுமதி செய்தது. சிங்­கப்­பூர் சென்­றாண்டு சுமார் 73,000 டன் கோழியை மலே­சி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­தது. இது மொத்த இறக்­கு­ம­தி­யில் சுமார் 34% ஆகும்.

கூடு­தல் செய்தி: ஹர்­ஷிதா பாலாஜி, விஷ்ணு வர்தினி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!