இலங்கையின் நிதி அமைச்சர் பொறுப்பையும் ஏற்றார் ரணில்

அண்­மை­யில் இலங்­கை­யில் புதிய பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட ரணில் விக்­ர­ம­சிங்கே நேற்று அந்­நாட்­டின் நிதி அமைச்­ச­ரா­க­வும் பதவி ஏற்­றார்.

நாடு வர­லாறு காணாத நிதி நெருக்­க­டி­யைச் சந்­தித்து வரும் நிலை­யில் சிக்­கல்­க­ளுக்­குத் தீர்வு காண ரணில் தகு­தி­யா­ன­வர் என்ற அடிப்­ப­டை­யில் அவ­ரி­டம் நிதி அமைச்­சர் பொறுப்பு வழங்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்கு முன்­னர் ஐந்து முறை பிர­த­மர் பத­வியை வகித்த ரணில், முதன்­மு­றை­யாக நிதி அமைச்­சர் பொறுப்பை ஏற்­றுள்­ளார்.

கொழும்பு அதி­பர் மாளி­கை­யில் நேற்­றுக் காலை அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே முன்­னி­லை­யில் நிதி அமைச்­ச­ராக திரு ரணில் பதவி ஏற்­றுக்­கொண்­டார்.

மகிந்த ராஜ­பக்சே பதவி துறந்த பின்­னர் ஐக்­கிய அர­சாங்­கம் அமைக்­கும் நோக்­கு­டன் இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் திரு ரணில் அழைக்­கப்­பட்டார். உடனடியாக பிர­த­மர் பதவி அவ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

கூட்­ட­ணிக் கட்­சி­யி­ன­ரில் ஒரு­வர் நிதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­

ப­டு­வார் என்று கூறப்­பட்டு வந்­தது. ஆனால், அந்­தக் கட்­சி­யி­ன­ரி­டம் கருத்­தொற்­றுமை ஏற்­ப­ட­வில்லை என்று இலங்கை ஊட­கங்­கள் கூறின.

திரு ரணில் நிய­ம­னம் மூலம் இரு வாரங்­க­ளாக நீடித்து வந்த இழு­பறி ஒரு முடி­வுக்கு வந்­துள்­ளது.

முன்­ன­தாக, இன்­னும் ஆறு வார காலத்­தில் இடைக்­கால வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கையை நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய இருப்­ப­தாக செவ்வாய்க்கிழமை திரு ரணில் கூறி­னார்.

உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்

­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதியை ஈராண்டு நிவா­ர­ணத் திட்­டங்­

க­ளுக்கு மாற்­றி­விட இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

பொரு­ளி­யல் நிலைத்­தன்­மையை ஏற்­ப­டுத்த செல­வி­னத் திட்­டங்­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்டு மக்­கள் நலத் திட்­டங்­களில் அதிகக் கவ­னம் செலுத்­தப்­படும் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!