இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் பங்களிப்பைப் பறைசாற்றும் நூல்

ஹர்­ஷிதா பாலாஜி

இந்­திய முஸ்­லிம் சமூ­கத்­தின் வர­லாற்­றை­யும் மர­புடைமையையும் அவர்­க­ளின் வெவ்­வேறு பங்­க­ளிப்­பு­க­ளை­யும் ஆவ­ணப்­ப­டுத்­தும் நூல் ஒன்று நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

'சிங்­கப்­பூர் இந்­திய முஸ்­லிம்­கள்: வர­லாறு, மரபு, பங்­க­ளிப்பு' என்ற தலைப்­பி­லான இந்த நூலை 'ஏஎம்பி சிங்­கப்­பூர்' எனப்­படும் முஸ்­லிம் நிபு­ணர்­கள் அமைப்­பின் ஆய்­வுக் கிளை வெளி­யிட்­டுள்­ளது.

முஹம்­மது சாலே யூசுப் அங்கூலியா, கே.எம். ஒலி முஹம்மது, பேரா­சி­ரி­யர் அஹ­மது முஹம்மது இப்­ரா­ஹிம் போன்ற புகழ்­பெற்ற இந்­திய முஸ்­லிம்­க­ளின் வாழ்க்­கை­யை­யும் சாத­னை­க­ளை­யும் இந்த நூல் எடுத்­து­ரைக்­கிறது.

ஏஎம்பி சிங்­கப்­பூர், சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்), தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் ஆகிய அமைப்­பு­க­ளின் ஆத­ர­வோடு வெளி­யி­டப்­படும் இந்­நூலை $60க்கு நிகழ்ச்­சி­யில் பல­ரும் வாங்­கி­னார்­கள். குறிப்­பிட்ட புத்­த­கக் கடை­க­ளி­லும் இந்த நூல் விற்­கப்­படும்.

இந்­திய முஸ்­லிம் சமூ­கத்­துக்கு உதவ $250,000 நிதி திரட்டு முயற்சி­யி­லும் ஏஎம்பி சிங்­கப்­பூர் இறங்­கி­யுள்­ளது.

திரட்­டப்­படும் நிதி ஏஎம்பி சிங்கப்­பூர், சிண்டா, மெண்­டாக்கி நிர்­வ­கிக்­கும் கல்வி அறக்­கட்­டளை நிதிக்­கும் இந்­திய முஸ்­லிம் சமூகத்துக்­குச் சேவை­யாற்­றும் அப்துல் கஃபூர் பள்­ளி­வா­சல், அல் அப்­ரார் பள்­ளி­வா­சல், அங்­கூ­லியா பள்­ளி­வா­சல், பென்­கூ­லன் பள்­ளி­வா­சல், ஜாமிஆ சூலியா பள்­ளி­வா­சல், மல­பார் பள்­ளி­வா­சல், மௌலானா முஹம்­மது அலி பள்­ளி­வா­சல் ஆகி­ய­வற்­றுக்­கும் வழங்­கப்­படும்.

முன்ஷி அப்­துல்லா போன்ற முன்­னோ­டி­க­ளின் பங்­க­ளிப்­பு­கள் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­தைப்­போல மற்ற முன்­னோ­டி­க­ளைப் பற்­றி­யும் ஆய்வு செய்து அவர்­களின் பங்­க­ளிப்­பு­க­ளை­யும் ஆவ­ணப்­ப­டுத்த இந்த நூல் உத­வும் என்­றார் நிகழ்ச்­சிக்கு சிறப்பு விருந்­தி­ன­ராக வரு­கை­ய­ளித்த அதி­பர் ஹலிமா யாக்­கோப்.

இந்­திய முஸ்­லிம் சமூ­கம் தொடர்ந்து தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட்டு, சமூ­கப் பிரச்­சி­னை­களுக்குத் தீர்­வு­காண உத­வி­யதோடு, பெண்­க­ளின் முன்­னேற்­றத்­துக்­காக உழைத்த கதி­ஜுன்­னிசா சிராஜ் போன்ற முன்­னோ­டி­க­ளின் உழைப்­பைப் பற்­றி­யும் புத்­த­கம் விளக்­கு­வ­தைச் சுட்­டி­னார் திரு­வாட்டி ஹலிமா.

"இந்­திய சங்­கத்தை ஆரம்­பித்த புகழ்­பெற்ற வணி­கர் திரு ராஜ­பாலி ஜுமா­பாய், முன்­னோடி மருத்து­வ­ரும் நக­ராட்சி ஆணை­ய­ரு­மான டாக்­டர் சிரா­ஜு­தீன் முன்ஷி, சிங்­கப்­பூ­ரின் முதல் அர­சாங்­கத் தலைமை சட்ட அதி­கா­ரி­யான பேரா­சி­ரி­யர் அஹ­மது இப்­ரா­ஹிம் போன்­ற­வர்­க­ளைப் பற்றி இந்­நூ­லில் படித்­த­பின், வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ரும் சமு­தாயத்­துக்­குத் தொண்­டாற்ற ஊக்­கு­விக்­கப்­படு­வர் என நம்­பு­கி­றேன்," என்­றார் திரு­வாட்டி ஹலிமா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!