இந்தியாவின் 15,000 டன் உதவிப் பொருள்கள் இலங்கையில் இறங்கின

இலங்­கை­யில் எரி­பொ­ருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக நீண்ட தூரம் வரி­சை­பி­டித்து காத்­துக் கிடக்­கி­றார்­கள் வாக­ன­மோட்­டி­கள். அவர்­க­ளின் கவ­லையை அதி­க­ரிக்­கும் செய்­தியை இலங்கை எரி­சக்தி அமைச்­சர் கஞ்­சனா விஜே­சே­கர தெரி­வித்­தார்.

எரி­பொ­ரு­ளு­டன் வியா­ழக்­கி­ழமை இலங்கை வந்­து­சேர வேண்­டிய கப்­பல்­கள் குறித்த நாளில் வர­வில்லை என்­றும் இந்த தாம­தம் எரி­பொ­ருள் விநி­யோ­கத்­தில் சிக்­கலை அதி­கப்­

ப­டுத்­தும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

அத­னால் வியா­ழன், வெள்ளி இரு­நாள்­க­ளுக்கு மட்­டுமே விற்­பனை நிலை­யங்­க­ளுக்கு எரி­பொ­ருள் விநி­யோ­கிக்­கப்­படும் என்­றும் அது­வும் குறைந்த அள­வி­லேயே தரப்­படும் என்­றும் அவர் கொழும்பு நக­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

எரி­பொ­ருள் தட்­டுப்­பாட்­டைச் சமா­ளிக்­கும் பொருட்டு, ஏற்­

கெ­னவே திட்­ட­மிட்­ட­படி புதன்­கி­ழ­மை­யு­டன் நாடா­ளு­மன்­றக் கூட்­டம் முடித்­துக்கொள்­ளப்­பட்­டது. அந்­தக் கூட்­டம் நேற்று வரை நடப்­ப­தாக இருந்­தது.

நாடா­ளு­மன்­றக் கூட்­டம் நடப்­ப­தற்கு இலங்­கை­யின் முக்­கிய எதிர்க்­கட்­சி­யான சமாகி ஜன பல­வே­க­யா­வின் தலை­வர் சஜித் பிரே­ம­தாச எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருந்­தார்.

மோச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்கி நாடு திண்­டாடி வரும் வேளை­யில் நாடாளு­ மன்­றத்­தில் நேரத்­தைச் செல­வி­டு­வது வீண்செயல் என்று கூறிய அவர், தமது கட்சி

நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் பங்­கேற்­காது என்றார்.

அண்டை நாடான இந்­தியா இலங்­கைக்­குப் பல்­வேறு உத­வி ­க­ளைச் செய்து ஆத­ரித்து வரு­கிறது.

அதன் ஒரு பகு­தி­யாக நேற்று முன்­தி­னம் நிபு­ணர் குழு ஒன்றை இலங்­கைக்கு இந்­தியா அனுப்பி வைத்­தது.

இலங்கைப் பொருளியல் மீட்சியடைந்து நிலைபெறும் வரை இந்தியா அளிக்கவேண்டிய உதவிகள் குறித்து இந்திய, இலங்கை அதிகாரிகள் ஆலோ சித்ததாக அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் அலுவலகம் தனது அறிக்கையில் தெரி வித்தது.

இச்சந்திப்பைத் தொடர்ந்து இந்தியா அனுப்பிய 3 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பிலான மனிதாபிமான உதவிப்பொருள் கள் நேற்று இலங்கை வந்து சேர்ந்ததாக அங்குள்ள ஊடகம் ஒன்று தெரிவித்தது.

அரிசி, பால் மாவு, மருந்­துப் பொருள்­கள் உட்­பட 15,000 டன் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் கொழும்பு வந்­தி­றங்­கின.

இவற்­றில் அரிசி மட்­டும் 14,700 டன். பால் மாவு 250 டன், மருந்­துப் பொருள்­கள் 38 டன். இவை யாவும் இந்­திய மக்­கள் நன்­கொ­டை­யாக வழங்­கி­யவை என்று அந்த ஊட­கம் குறிப்­பிட்­டது.

இலங்­கைக்கு US$1.5 பில்­லி­யன் கட­னு­தவி செய்­யப்­படும் என்று இந்­தியா ஏற்­கெ­னவே அறி­வித்­தி­ருந்­தது.

மின்­சா­ரம் இன்­றி­யும் விண்ணை முட்­டி­விட்ட விலை­வா­சி­யைத் தாங்க இய­லா­ம­லும் 22 மில்­லி­யன் இலங்கை மக்­கள் தவித்து வரு­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!