கஞ்சாவை அனுமதிக்கும் தாய்லாந்து: உள்நாட்டில் குழப்பம், உலக நாடுகள் கடும் எச்சரிக்கை

தடை செய்­யப்­பட்ட போதைப்­

பொ­ருள் பட்­டி­ய­லிலிருந்து கஞ்­சா­வை­யும் கஞ்சா செடி­க­ளை­யும் தாய்­லாந்து நீக்­கி­ய­தைத் தொடர்ந்து உலக நாடு­கள் பல­வும் அந்­தப் போக்கு குறித்து எச்­ச­ரித்து வரு­கின்­றன.

இந்­தோ­னீ­சியா, தென்­கொ­ரியா மற்­றும் ஜப்­பான் போன்ற நாடு­களில் உள்ள தாய்­லாந்து தூத­ர­கங்­கள் கஞ்சா மற்­றும் அது தொடர்­பான பொருள்­களை கொண்டு வந்­து­விட வேண்­டாம் என்று தங்­கள் நாட்­டி­ன­ருக்கு அறி­வு­றுத்தி உள்­ளன.

சிங்­கப்­பூர், சீனா போன்ற நாடு­களும் வெளி­நா­டு­களில் இருக்­கும் தங்­க­ளது குடி­மக்கள் கஞ்­சா­வைப் பயன்­ப­டுத்த வேண்­டாம் என்று நினை­வூட்டி உள்­ளன.

“தடை செய்­யப்­பட்ட போதைப்­பொ­ருள்­களை சிங்­கப்­பூர் குடி­மக்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் சிங்­கப்­பூ­ருக்கு வெளியே பயன்­ப­டுத்­தியது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டா­லும் போதைப்­பொ­ருள் புழக்கக் குற்­றத்­தின்­கீழ் அவர்­கள் தண்­டிக்­கப்­ப­டு­வர்,” என்று சிங்­கப்­பூ­ரின் மத்­திய போதைப்

­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு (சிஎன்பி) கூறி­யது.

போதைப்பொருள் புழக்கக் குற்றத்துக்கு 10 ஆண்­டு­கள் வரை­யி­லான சிறைத் தண்டனை, $20,000 வரை­யி­லான அப­ரா­தம் போன்றவை சிங்­கப்­பூ­ரில் விதிக்­கப்­ப­ட­லாம்.

மருத்­துவ பலனை உள்­ள­டக்­கிய மென்­மை­யான போதைப்­பொ­ருள் கஞ்சா என்று வெளி­யா­கும் கருத்து­ களை சிஎன்பி மறுக்­கிறது. மன­

நி­லை­யைப் பாதிக்­கிற அள­வுக்கு கடு­மை­யான தீங்கு விளை­விக்­கக்­கூ­டி­யது கஞ்சா என அறி­வி­யல்­பூர்­வ­மாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனைத்­து­லக போதைப்­பொ­ருள் கட்­டுப்­பாட்டு அமைப்­பும் ஆய்­வு­களும் தெரி­வித்­தி­ருப்­பதை சிஎன்பி நினை­வூட்­டி­யது.

கஞ்சா வைத்­தி­ருப்­ப­தற்­கும் கஞ்சா செடி வளர்ப்­ப­தற்­கும் இருந்த தடையை ஜூன் 9ஆம் தேதி தாய்­லாந்து நீக்­கி­யது. மருத்­து­வத்­திற்கு கஞ்­சாவை அதி­க­மா­கப் பயன்­ப­டுத்­தும் நோக்­கு­டன் தடை விலக்­கப்­

ப­டு­வ­தாக அப்­போது அது தெரி­வித்­தது.

ஆனால், உள்­நாட்­டி­லும் உலக அள­வி­லும் அதற்கு எதிர்ப்பு நீடித்து வரு­கிறது. கஞ்சா தொடர்­பி­லான சட்­டப் பாது­காப்பு வழி­காட்டுதல்கள் தெளி­வாக இல்­லா­த­தால் தாய்­லாந்­துக்­குள் குழப்­பம் நீடிக்­கிறது. சட்­ட­வி­தி­கள் தெளி­வின்­மை­யால் அங்கு கஞ்சா இலை­கள், மொட்­டு­க­ளின் விற்­பனை வேக­மாக அதி­க­ரித்து வரு­கிறது.

அதே­நே­ரம் கஞ்­சா­வைப் பயன்­

ப­டுத்­தி­ய­தால் மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­ப­டு­வோ­ரைப் பற்­றிய விவ­ரம் வெளி­யா­ன­தும் பல­த­ரப்­பி­ல் இருந்தும் கண்­ட­னம் எழுந்­துள்­ளது.

இளை­யர்­களை இந்­தப் பழக்­கம் அதி­கம் பாதிக்­கும் என்­ப­தால் வயது குறைந்­தோர் கஞ்­சா­வைப் பயன்

­ப­டுத்­தா­மல் இருக்க சட்­டத்­தைக் கடு­மை­யாக்­கு­மாறு பொது­ந­லக் குழுக்­கள் தாய்­லாந்து அர­சாங்­கத்தை நெருக்கி வரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!