கொவிட்-19 காரணமாக 2021ல் அதிகரித்த மரண விகிதம்

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக நாட்­டுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­களை சிங்­கப்­பூர் தொடர்ந்து ஆராய்ந்து வரு­கிறது. கடந்த ஆண்டு­ அந்­நோ­யின் விளை­வாக ஏற்­பட்ட மர­ணங்­க­ளின்

எண்­ணிக்கை உச்­சம் தொட்­டன.

2020ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் கடந்த ஆண்டு பதி­வான கொவிட்-19 மர­ணங்­கள் 10.1 விழுக்­காடு கூடி­ய­தாக கடந்த மாதம் 30ஆம் தேதி வெளி­யி­டப்­பட்ட அதி­கா­ர­பூர்­வப் புள்­ளி­வி­வ­ரங்­கள்

காட்­டு­கின்­றன.

மாறாக, குழந்­தை பிறப்பு விகி­தம் கடந்த ஆண்டு 0.2 விழுக்­காடு மட்­டுமே உயர்ந்­தது.

கடந்த ஆண்டு மொத்­த­ம் 24,292 பேர் மாண்­ட­னர். 2020ஆம்

ஆண்­டில் பதி­வான மரண எண்­ணிக்­கை­யை­விட இது 2,238

அதி­கம்.

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரில் எதிர்­பார்த்­

த­தை­விட அதிக உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

இதற்­குப் பல கார­ணங்­கள் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மூப்­ப­டை­யும் மக்­கள்­

தொ­கை­யும் அதில் அடங்­கும். கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் நாட்­டின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்ட நெருக்­கு­த­லும் கூடு­தல் மரண எண்­ணிக்­கைக்­குக் கார­ண­மாக இருந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று சுகா­தா­ரப் பரா­

ம­ரிப்பு நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

2017ஆம் ஆண்­டி­லி­ருந்து சீரான முறை­யில் குறைந்து வந்த வயது அடிப்­ப­டை­யி­லான மரண விகி­தம், கடந்த ஆண்டு 100,000 பேருக்கு 557 பேர் என ஏற்­றம் கண்­டது. 2020ஆம் ஆண்­டில் 100,000 பேருக்கு 519 பேராக அது இருந்­தது. இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­களை சுகா­தார அமைச்சு கடந்த மார்ச் மாதம் வெளி­யிட்­டது.

மரண எண்­ணிக்கை தொடர்­பான பொது­வான பதி­வைக் காட்­டி­லும் வயது அடிப்­ப­டை­யி­லான மரண விகி­தம் அர்த்­த­முள்ள ஒப்­பீட்­டைக் காட்­டு­வ­தாக நிபு­ணர்­கள் தெரி­வித்­த­னர். வயது அடிப்­ப­டை­யி­லான மரண விகி­தம் மக்­கள்­தொ­கை­யின் சரா­சரி வய­தைக் கருத்­தில் கொள்­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக உல­க­ளா­விய நிலை­யில் மில்­லி­யன்கணக்­கா­னோர் மர­ண­ம­டைந்­த­னர். எனவே, சிங்­கப்­பூ­ரில் வயது அடிப்­ப­டை­யி­லான மரண எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தில் ஆச்­ச­ரி­யம் இல்லை என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

இருப்­பி­னும், குறை­வான கொவிட்-19 இறப்பு விகி­தம் கொண்ட நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று என்று அமைச்சு தெரி­வித்­தது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் மருத்­து­வப் பரி­சோ­த­னை­கள், உட­ன­டி­யா­கச் செய்­யத் தேவை­யில்­லாத அறுவை சிகிச்­சை­கள் ஆகி­ய­வற்றைத் தள்­ளிப்­போ­டும் நிலை­யும் ஏற்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!