பள்ளிச் சூழலையும் தாண்டி தாய்மொழியைப் பயன்படுத்துக

தாய்­மொ­ழிப் புழக்­கத்­தைப் பள்­ளி­கள் துடிப்­பு­டன் ஊக்­கு­வித்­தா­லும் இரு­மொ­ழிப் புல­மையை மாண­வர்­கள் பெறு­வ­தற்கு மேலும் பெரி­த­ள­வி­லான மொழிச் சூழல் முக்­கி­யம் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

பெற்­றோர்­கள் தங்­கள் பிள்­ளை­க­ளு­டன் தாய்­மொ­ழி­யில் பேசு­வ­தற்கு முயற்சி எடுக்க வேண்­டும். அப்­போ­து­தான் தாய்­மொ­ழியை ஒரு தேர்­வுப் பாட­மாக மட்­டும் பாரா­மல் அது வாழ்க்­கைக்­கும் நடை­மு­றைக்­கும் ஏற்ற ஒரு மொழி­யாக மாண­வர்­கள் கரு­து­வர் என்று சிங்­கப்­பூர் சீன கலா­சார நிலை­யத்­தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வில் திரு சான் கூறி­னார்.

"பள்­ளிச் சூழ­லை­யும் தாண்டி ஒரு மொழி­யைப் பயன்­ப­டுத்­து­பவரே அந்த மொழி­யில் சிறந்து விளங்­கு­வார்," என்­றார் அவர்.

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல்­ பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (எஸ்­யு­எஸ்­எஸ்) 22வது சீன மொழி மற்­றும் கலா­சார அனைத்­து­லக மாநாட்­டில் திரு சான் இந்தக் ­கருத்­து­க­ளைக் கூறி­யி­ருந்­தார்.

வெவ்­வேறு நக­ரங்­களில் இந்த மாநாடு கடந்த 21 ஆண்­டு­க­ளாக நடந்­து­வந்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரில் நடை­பெ­று­வது இதுவே முதல் முறை­யா­கும்.

எஸ்­யு­எஸ்­எ­ஸ்சின் கல்­வித்­துறை ஆலோ­ச­க­ரான பேரா­சி­ரி­யர் எடி குவோ, 82, "நமது பன்­மொ­ழித்­தன்­மையை சிங்­கப்­பூ­ரர்­கள் சாதா­ரண ஒன்­றாக எடுத்­துக்­கொள்­கி­றார்­கள். அது நம் அடை­யா­ளத்­தின் ஓர் அங்­கம். அது சிங்­கப்­பூ­ருக்கே உரிய ஒன்று," என்­றார்.

"இருப்­பி­னும் இங்­குள்ள நம் தாய்­மொ­ழி­க­ளின் தரத்தை இன்­னும் மேம்­ப­டுத்த முடி­யும். நமது இரு­மொ­ழிக் கல்­விக் கொள்கை என்­பது முடி­வு­றாத ஒரு பய­ணம்," என்­றார் பேரா­சி­ரி­யர் குவோ.

கொரிய, ஸ்பா­னிய மொழி­களைத் தம்­மு­டைய பிள்­ளை­கள் கற்­றுக்­கொண்ட விதம் குறித்து திரு சான் பகிர்ந்­து­கொண்­டார். இணை­யம், யூடி­யூப் தளம் போன்­ற­வற்­றைக் கொண்டு ஒரு மொழி­யைக் கரைத்­துக் குடித்­து­வி­ட­லாம் என்ற நிலை தற்­போது உள்­ளது.

மொழி­யில் நல்ல அடித்­த­ள­மிட்டு நம்­பிக்­கையை வளர்த்­துக்­கொள்­வது முக்­கி­யம் என்று அவர் சுட்­டி­னார்.

தாம் தொடக்­க­நிலை ஒன்­றில் பயின்ற காலத்­தில் ஆசி­ரி­யர் ஒரு­வர் தம்­மைப் பாராட்­டி­ய­தால் கணி­தப் பாடத்­தில் தமக்கு இருந்த தன்­னம்­பிக்கை கூடி­ய­தா­க­வும் அந்­தப் பாடத்­தில் பின்­னர் சிறந்து விளங்­கி­ய­தா­க­வும் திரு சான் குறிப்­பிட்­டார்.

"துரு­வங்­க­ளா­கப் பிள­வு­பட்­டுள்ள இந்த உல­கில், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் பன்­மொழித்­தன்­மையே அவர்­க­ளுக்­குச் சாதக நிலை­யைத் தரும். வெவ்­வேறு நாடு­க­ளுக்­கி­டையே மற்­றும் அந்­நா­டு­களை இணைக்க அந்த நிலை அவர்­களுக்குக் கைகொ­டுக்­கும்," என்­றார் அவர்.

நேற்­றைய நிகழ்­வில் 276 பக்­கங்­க­ளு­டைய நூல் ஒன்­றும் வெளி­யி­டப்­பட்­டது. இதனை எழு­தி­ய­வர்­களுள் பேரா­சி­ரி­யர் குவோ­வும் ஒரு­வர். சிங்­கப்­பூ­ரின் மொழித் திட்­ட­மி­டல், இரு­மொ­ழிக் கல்­விக் கொள்கை போன்ற விவ­கா­ரங்­கள் இந்­நூ­லில் இடம்­பெற்­றுள்­ளன.

நூலா­சி­ரி­யர்­களில் மற்­றொ­ரு­வர் எஸ்­யு­எஸ்­எ­ஸ்சின் சீனத்­து­றைத் தலை­வ­ரான லுவோ ஃபுட்டெங்.

"சிங்­கப்­பூர் போன்ற ஒரு சிறிய நாட்­டில் நான்கு அதி­கா­ரத்­துவ மொழி­கள் இருப்­பதே, அனைத்து இனங்­கள், கலா­சா­ரங்­க­ளுக்கு அது அளிக்­கும் மதிப்­பைப் புலப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. இரு­மொ­ழிக் கல்­விக் கொள்­கை­யி­லி­ருந்து ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரும் பல­ன­டைந்­துள்­ள­னர். இத­னால் உல­கில் எங்­குச் சென்­றா­லும், எங்கு வேலை செய்­தா­லும் சாத­க­மான ஒரு போட்­டித்­தன்மை நிலை அவர்­களுக்கு அதி­க­மா­கவே உள்­ளது," என்­றார் 62 வயது பேரா­சி­ரி­யர் லுவோ.

இதற்­கி­டையே திட்­ட­மி­டப்­பட்ட, முழு­மை­யான முறை­யில் சிங்­கப்­பூ­ரின் மொழிக் கொள்­கை­கள் அமைந்­தி­ருத்­தல் அவ­சி­யம் என்று எஸ்­யு­எஸ்­எஸ்சின் தலை­வ­ரான பேரா­சி­ரி­யர் சியோங் ஹீ கியட் தெரி­வித்­தார். எளி­தில் பிறர் உணர்ச்­சி­களை பாதிக்­கும் விவ­கா­ரங்­கள் தலைதூக்கும்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு விளக்­க­ம­ளிப்­ப­தா­க­வும் அந்­தக் கொள்­கை­கள் இருக்க வேண்­டும் என்­றார் அவர்.

"வெவ்­வேறு நாட்­டி­ன­ரி­டையே, வெவ்­வேறு மொழி பேசு­வோ­ரி­டையே, நிலை­யற்­றத்­தன்­மை­ இருப்பதை இன்­றைய உல­கில் காண்­கி­றோம். அத­னால் பொருத்­த­மான கல்­விக் கொள்­கை­களை வகுக்க வேண்­டிய சூழ­லும் தூண்­டு­த­லும் ஏற்­பட்­டுள்­ளது," என்­றார் பேரா­சி­ரி­யர் சியோங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!