பொங்கோல் குடியிருப்பாளர்களுக்கு அதிநவீன வசதிகள்

பொங்­கோல் வட்­டா­ரத்­தில் உள்ள புதிய அக்­கம்­பக்க நிலை­யத்­துக்­குச் செல்­ப­வர்­கள் தங்­கள் திறன்­பே­சி­

க­ளைப் பயன்­ப­டுத்தி அங்­குள்ள சில்­லறை வர்த்­த­கக் கடை­கள் என்­னென்ன பொருள்­களை விற்­கின்­றன என்­ப­தைப் பார்த்­துத் தெரிந்­து­கொள்­ள­லாம். அதே­நே­ரம், புதிய பொருள்­களை விநி­யோ­கிப்­பா­ளர்­கள் இறக்­கி­வி­டும் இடங்­க­ளி­லி­ருந்து அவற்றை இயந்­திர மனி­தர்­

க­ளைக் கொண்டு கடைக்­கா­ரர்­கள் பெற்­றுக்­கொள்­வர். இதன்மூ­லம் பொருள்­களைக் கடைக்­கா­ரர்­கள் விரை­வா­கப் பெற்­றுக்­கொள்­ள­லாம். இது­தொ­டர்­பான சோத­னை­முறை நடத்­தப்­ப­டு­கிறது.

பொங்­கோல் நார்த்­ஷோர் வட்­டார அக்­கம்­பக்க நிலை­யத்­தில் (நார்த்­ஷோர் பிளாசா) பயன்­ப­டுத்­தப்­படும் புதிய தொழில்­நுட்­பங்­களில் இவை அடங்­கும். புதிய நிலை­யத்தை தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று காலை அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்­து­வைத்­தார்.

"அக்­கம்­பக்க நிலை­யம் என்­கிற முறை­யில், பொங்­கோல் வட்­டா­ரத்­தின் மற்ற பகு­தி­க­ளு­டன் நார்த்­ஷோர் பிளா­சா­வுக்கு நல்­ல­தோர் இணைப்பு இருக்க வேண்­டும் என விரும்­பு­கி­றோம். பொங்­கோல் வட்­டா­ரக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் புதிய நிலை­யத்­தில் ஒன்­று­கூ­ட­லாம்," என்று திரு லீ தெரி­வித்­தார்.

பொங்­கோல் வட்­டா­ரத்­தில் ஏற்­கெ­னவே கடைத்­தொ­கு­தி­கள், கடை­கள் போன்ற வச­தி­கள் இருப்­ப­தா­க­வும் அந்த வரி­சை­யில் இந்­தப் புதிய நிலை­ய­மும் இணைந்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

"ஒன் பொங்­கோல் சமூக மையம் அடுத்த மாதத்­தி­லி­ருந்து படிப்­ப­டி­யா­கத் திறக்­கப்­படும். அதில் உணவு அங்­காடி நிலை­யம், குழந்­தை

பரா­ம­ரிப்பு நிலை­யம், மூத்­தோர் பரா­ம­ரிப்பு மையம் ஆகி­யவை இடம்­பெ­றும்," என்று பொங்­கோல் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் திரு லீ பகிர்ந்­து­கொண்­டார்.

புதிய பொங்­கோல் சமூக மையத்­தில் நூல­கம், 700 பேர் அமர்ந்து சாப்­பி­டக்­கூ­டிய உணவு அங்­காடி நிலை­யம் உட்­பட பல்­வேறு வசதிகள் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நார்த்­ஷோர் பிளா­சா­வில் உள்ள கடை­க­ளுக்கு மட்­டும் தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மின்­தூக்­கி­கள், மின்­ப­டி­கள் ஆகி­ய­வற்­றி­லும் உணர்­க­ரு­வி­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. அவை எவ்­வாறு இயங்­கு­கின்­றன என்­ப­தைக் கண்­கா­ணிக்­க­வும் பழு­த­டைந்­தால் உட­னடி நட­வ­டிக்கை எடுக்­க­வும் இது உத­வும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, நார்­த்ஷோர் பிளா­சா­வில் தடை­யற்ற விவேக வாகன நிறுத்­து­மி­ட­மும் உள்­ளது. அதற்கு பார்க்­கிங்@எச்­டிபி எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. வாக­னங்­க­ளின் எண் பலகை கேம­ராக்­கள் மூலம் பதிவு செய்­யப்­படும். வாகன நிறுத்­து­மி­டத்­துக்­கான கட்­ட­ணங்­கள் தானி­யக்க முறை­யில் கணக்­கி­டப்­படும். பார்க்­கிங்@எச்­டிபி கைபேசி செயலி மூலம் வாக­ன ஓட்­டு­நர்­கள் கட்­ட­ணத்­தைச் செலுத்­த­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!