காமன்வெல்த் போட்டிகள்: கலப்பு இரட்டையர் பேட்மிண்டனில் சிங்கப்பூர் தங்கம் வென்று வரலாறு படைத்தது

காமன்வெல்த் போட்டிகளின் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் தனது முதல் தங்கப்பதக்கத்தை வரலாறு படைத்தது சிங்கப்பூர்.

சிங்கப்பூரின் டெர்ரி ஹே, ஜெஸ்ஸிக்கா டான் ஜோடி இங்கிலாந்தைச் சேர்ந்த மார்கஸ் எல்லிஸ், லாரன் ஸ்மித் ஜோடியை இறுதிப் போட்டியில் 21-16, 21-15 என்று வீழ்த்தியது.

உலகத் தரவரிசையில் 10ஆம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை 35ஆவது இடத்தில் இருக்கும் சிங்கப்பூர் ஜோடி இதற்கு முன்னர் கலப்பு குழு ஆட்டம் ஒன்றில் வீழ்த்தியிருந்தது. எனினும் சிங்கப்பூர் அணி இவ்வாட்டத்தை லேசாக எடுத்துக்கொள்ளவில்லை.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 5,000 இங்கிலாந்து ரசிகர்களின் முன்னிலையில் சிங்கப்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டிகளில் சிங்கப்பூரின் லி லி பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

சிங்கப்பூர் இவ்வாண்டின் போட்டிகளில் பேட்மிண்டனில் பெற்றுள்ள மூன்றாவது பதக்கம் இது. கலப்பு குழு பிரிவிலும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கங்களைச் சிங்கப்பூர் பெற்றுள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!