சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு தாய்லாந்துக்குச் சென்றார் கோத்தபாய

இலங்­கை­யின் முன்­னாள் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே, 73, சிங்­கப்­பூ­ரில் இருந்து தாய்­லாந்­துக்­குச் சென்­று உள்­ளார். இங்கு அவ­ரது குறு­கி­ய­கால வருகை அனு­மதி நேற்று காலா­வ­தி­யா­ன­தைத் தொடர்ந்து அவர் சிங்­கப்­பூ­ரை­விட்டுப் புறப்­பட்­டார். நேற்­று கோத்தபாய சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து தாய்­லாந்துத் தலை­ந­கர் பேங்­காக்­கிற்கு தனி விமா­னத்­தில் புறப்­பட்­டார். உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8 மணியளவில் அவர் பேங்காக் சென்றிருங்கினார்.

அர­ச­தந்­திர கட­வுச்­சீட்­டு­டன் தாய்­லாந்­துக்­குள் நுழைந்த கோத்­த­பாய, அங்கு 90 நாள்­கள் தங்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­ச­ம­யம் அவர் வேறெந்த நாட்­டி­லும் அடைக்­க­லம் நாடியுள்ளதாகத் தக­வல் எது­வும் இல்லை.

மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் தாய்­லாந்­துக்­குள் நுழைய கோத்­த­பா­ய­வுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்டுள்­ள­தாக தாய்­லாந்­துப் பிர­த­மர் பிர­யுத் சான் ஓ சா நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­யி­ருந்­தார். கோத்­த­பாய தாய்­லாந்­தில் தங்­கு­வது தற்­கா­லி­க­மா­னதே என்று தாய்­லாந்து அர­சாங்­கத்­தி­டம் உறுதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் சொன்­னார். கோத்­த­பாய தாய்­லாந்­தில் தற்­கா­லி­க­மாக தங்க அனு­ம­திக்­கு­மாறு அவ­ரது சார்­பில் இலங்கை அர­சாங்­கம் தாய்­லாந்து அர­சாங்­கத்­தி­டம் கோரி­யி­ருந்­தது.

இந்­நி­லை­யில், கோத்­த­பாய தாய்­லாந்­தில் தங்­கு­வ­தற்­கான விசா காலா­வ­தி­யா­ன­வு­டன், நவம்­ப­ரில் அவர் இலங்­கைக்கு திரும்­பக்­கூடும் என்று டெய்லி மிரர் செய்தி நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. வேறொரு நாட்­டில் அவர் தற்­காலி­க­மா­கத் தங்கத் தேர்வு செய்யக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளதே இதற்­குக் கார­ணம்.

கோத்­த­பாய, கடந்த மாதம் இலங்­கை­யில் இருந்து மாலத்­தீவுக்குப் புறப்­பட்­ட­தில் இருந்து மாலத்­தீவு, சிங்­கப்­பூர் அர­சாங்­கங்­களு­ட­னும் இப்­போது தாய்­லாந்து அர­சாங்­கத்­து­ட­னும் இலங்கை அர­சாங்­கம் தொடர்­பில் இருந்து வரு­கிறது. இந்த நாடு­களில் அவர் தற்­கா­லி­க­மா­கத் தங்­கு­வ­தற்கு இலங்கை அர­சாங்­கம் ஏற்­பாடு செய்­தது. எனி­னும், தாய்­லாந்தில் தங்கிவிட்டு கோத்­த­பாய இலங்­கைக்குத் திரும்­பு­வார் என்று அர­சி­யல் வட்டாரங்கள் கூறு­கின்­றன.

இலங்கை குடி­ம­க­னான கோத்­த­பா­ய­வுக்கு இலங்­கை­யில் தங்­கு­வ­தற்கு சட்ட ரீதி­யாக அனைத்து உரி­மை­களும் இருப்­ப­தாக அர­சி­யல் வட்டாரங்கள் குறிப்­பி­டு­கின்­றன.

கோத்­த­பா­ய­வும் அவ­ரு­டைய மனை­வி­யும் இலங்­கை­யி­லி­ருந்து மற்ற நாடு­க­ளுக்­குச் செல்­வ­தற்­கான செல­வு­களை கோத்­த­பா­ய­வும் அவ­ரு­டைய மகன் மனோஜ் ராஜ­பக்­சே­வும் ஏற்­றுக்­கொண்­ட­தாக டெய்லி மிரர் அறி­கிறது. கடந்த மாதம் இலங்­கைத் தலை­ந­கர் கொழும்­பில் இருந்து மாலத்­தீவு தலை­ந­கர் மாலே­வுக்கு கோத்­த­பாய செல்­வ­தற்கு ஆகா­யப் படை விமா­னம் பயன்­படுத்­தப்­பட்­டது. அதைத் தவிர்த்து, வேறெந்த கார­ணத்­திற்­கும் அர­சாங்க நிதி பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என அறி­யப்­ப­டு­கிறது.

ராஜ­பக்சே குடும்­பத்­துக்கு வலு­வான வெளி­நாட்­டுத் தொடர்புகள் உள்ளன. அக்­கு­டும்­பத்­துக்கு தெரிந்த செல்­வந்­தர்­கள் சிலர், வெளி­நா­டு­களில் கோத்­த­பா­ய­வின் தங்­கு­மி­டச் செல­வு­களை ஏற்­றுக்­கொண்­ட­தா­கத் தெரி­கிறது. எனி­னும், தாய்­லாந்­தில் தங்­கு­மிட வசதி­க­ளைப் பொறுத்­த­மட்­டில், கோத்­த­பா­ய­வுக்­கும் அவ­ரு­டைய மனை­விக்­கும் எவ்­வாறு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன என்­பது பற்­றித் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

மத்­திய கிழக்­கில் அடைக்­க­லம் நாட கோத்­த­பாய தரப்­பில் பல­முறை முயற்சி செய்­யப்­பட்­டது. எனி­னும், அதற்­குச் சாத­க­மான பதில் கிடைக்­கா­த­தால் நவம்­ப­ரில் அவர் இலங்­கைக்­குத் திரும்ப முடிவு எடுக்­கப்­ப­ட­லாம் எனத் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!