மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் பங்கெடுத்து நிதி திரட்டிய துணைப் பிரதமர்

புற்­று­நோ­யால் அவ­தி­யு­றும் சிறா­ருக்­குக் கைகொ­டுக்­கும் அற­நி­று­வ­னத்­துக்கு நிதி திரட்­டும் வகை­யில் நேற்று நடை­பெற்ற மோட்­டார் சைக்­கிள் ஊர்­வ­லத்­தில் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கலந்­து­கொண்­டார்.

நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங், ராயல் என்­ஃபீல்ட் கிளா­சிக் 500 ரக மோட்­டார் சைக்­கிளை ஓட்­டி­னார். இந்த மோட்­டார் சைக்­கிள் ஊர்­வ­லம் மூலம் நடத்­தப்­பட்ட நிதி திரட்­ட­லுக்கு ‘ரைடர்ஸ் எய்ட் சிங்­கப்­பூர்’ அமைப்பு ஏற்­பாடு செய்­தது. நேற்று பிற்­ப­கல் 1 மணி அள­வில் தெம்­ப­னிஸ் கன­ரக வாகன நிறுத்­து­மி­டத்­தி

­லி­ருந்து பல மோட்­டார் சைக்­கிள்­கள் ஒன்­றா­கப் புறப்­பட்­டுச் சென்­றன.

இது­வரை $30,000 திரட்­டப்­பட்­டுள்­ள­தாக அமைப்­பின் தலை­வர் திரு சூரிய குமார் தெரி­வித்­தார். பிற்­ப­கல் 1.45 மணி அள­வில் மோட்­டார் சைக்­கிள்­கள் பாசிர் ரிஸ் வட்­டா­ரத்­தில் உள்ள அல் இஸ்­திக்­ஃபர் பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து ஒரு கிலோ­மீட்­டர் தூரத்­தில் உள்ள லோயாங் துவா பெக் கோங் கோயி­லுக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது துணைப் பிர­த­மர் வோங் மோட்­டார் சைக்­கி­ளில் வந்து ஊர்­வ­லத்­தில் சேர்ந்­து­கொண்­டார். கோயி­லைச் சென்­ற­டைந்­த­தும் அங்கு கூடி­யி­ருந்­தோ­ரி­டம் அவர் பேசி­னார். தாம் மோட்­டார் சைக்­கிள் ஓட்டி 20 ஆண்­டு­

க­ளுக்கு மேல் ஆகி­விட்­ட­தா­க­வும் மீண்­டும் அதை ஓட்டி மல­ரும் நினை­வு­க­ளைக் கொண்டு வந்­த­தற்கு நிகழ்ச்­சி­யின் ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். ஆகக் கடை­சி­யாக தாம் அமெ­ரிக்­கா­வில் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது மோட்­டார் சைக்­கிள்

ஓட்­டி­ய­தாக அவர் நினை­வு­கூர்ந்­தார்.

பிரிவு 2, 2ஏ, 2பி என மோட்­டார் சைக்­கிள்­

க­ளுக்­கான அனைத்து ஓட்­டு­நர் உரி­மங்­க­ளை­யும் திரு வோங் வைத்­தி­ருக்­கி­றார்.

அமெ­ரிக்­கா­வில் மாண­வ­ராக இருந்­த­போது மோட்­டார் சைக்­கிள் ஓட்ட அவர் கற்­றுக்­கொண்­டார். விஸ்­கோன்­சின் மாநி­லத்­தின் மேடி­சன் நக­ரில் சொந்­தப் போக்­கு­வ­ரத்­துக்­காக அவர் சுசுகி மோட்­டார் சைக்­கிள் ஒன்றை வைத்­தி­ருந்­தார்.

“சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்பி வேலை செய்­யத் தொடங்­கி­ய­போது குறிப்பிட்ட காலகட்டத்துக்கு ஸ்கூட்­டர் ஒன்றை வைத்­தி­ருந்­தேன்,” என்­றார் திரு வோங்.

நே்றறைய மோட்­டார் சைக்கிள் ஊர்­வ­லத்­துக்­காக தமக்கு வழங்­கப்­பட்ட மோட்­டார் சைக்­கி­ளில் திரு வோங் கையெ­ழுத்­திட்­டார். அந்த மோட்­டார் சைக்­கிள் உபி வட்­டா­ரத்­தில் உள்ள மோட்­டார் சைக்­கிள் விற்­ப­னை­யா­ள­ரின் கடை­யில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கும். திரு வோங்கிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் மோட்டார் சைக்கிளுடன் இருப்பது போன்று தீட்டப்பட்ட ஓவியத்தை அவருக்கு நினைவுப் பரிசாக திரு குமார் வழங்கினார்.

நிதி திரட்­ட­லில் இறங்­கிய அனை­வ­ருக்­கும் இவ்­வாண்டு 30 ஆண்­டு­கள் நிறை­வைக் கொண்­டா­டும் சிறார் புற்­று­நோய் அற­நி­று­வ­னத்­தின் சமூ­கப் பங்­கா­ளித்­து­வப் பிரி­வின் உதவி இயக்­கு­நர் திரு­வாட்டி இங் சியாவ் சீ நன்றி தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!