40% உடற்குறையுள்ளோரை வேலையில் சேர்க்க இலக்கு

சிங்­கப்­பூர் அர­சாங்­கம், வரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் வேலை செய்­யும் வய­தில் இருக்­கும் 40% உடற்­கு­றை­யுள்­ளோரை வேலை­யில் சேர்க்க உறுதி பூண்­டுள்­ளது.

2020-2021க்கும் இடையே இந்த விகி­தம் 30 விழுக்­கா­டாக இருந்­தது. நான்­கா­வது மற்­றும் அண்­மைய வழி­காட்­டித் திட்­டத்­தின் கீழ் இந்த இலக்கு நிர்­ண­யிக்­கப் பட்­டுள்­ளது.

உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்கு ஆத­ரவு வழங்கி அவர்­களும் சமூ­கத்­திற்கு பங்­காற்­று­வதை உறு­திப் படுத்­தும் வகை­யில் நேற்று பெருந் திட்ட அறிக்கை வெளி­யானது.

'இஎம்பி 2030' எனும் அந்த பெருந்­திட்­டத்­தில் அடுத்த எட்டு ஆண்­டு­களில் இலக்கை அடை வதற்­காக முத­லா­ளி­கள் மேற்­கொள்ள வேண்­டிய பரிந்­து­ரை­கள் இடம்­பெற்­றுள்­ளன.

உடற்­கு­றை­யுள்­ளோர் அதி­க­மா­னோர் வேலை செய்­வதை ஊக்­கு­விக்­கும் வகை­யில் வேலை­களை மாற்­றி­ய­மைப்­பது பரிந் துரை­களில் ஒன்று. குறு­கிய நேர வேலை, தற் காலி­கப் பணி­கள் போன்­றவை அவற்­றில் சில.

நாற்­பது விழுக்­காட்­டி­ன­ருக்கு வேலை வாய்ப்பு வழங்­கும் இலக்­கால் ஏறக்­கு­றைய 10,000 உடற்­கு­றை­யுள்­ளோர் பய­ன­டை­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பெருந்­திட்­டத்­துக்­காக பணி­யாற்­றிய 27 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான சிங்­கப்­பூர் தொழில் சம்­மே­ள­னத்­தின் உதவி தலை­வர் கான் சியாவ் கீ, வேலை வாய்ப்­பு­களை வழங்­கு­வது வெறும் பொரு­ளி­யல் விவ­கா­ர­மல்ல என்­றார்.

சமூ­கப் பங்­க­ளிப்­பை­யும் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமூ­கத்­தை­யும் இது பிர­தி­ப­லிக்­கிறது என்று அவர் குறிப்­பிட் டார். பணிக்­கு­ழு­வின் மற்­றொரு இணைத் தலை­வ­ரான சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா­வும் திரு கானும் பாசிர் ரிஸில் நடந்த சமூக நிகழ்ச்சி ஒன்­றில் அறிக்­கையை வெளி­யிட்­ட­னர்.

கடந்த 2021 ஜூலை­யில் கூடிய பணிக்­குழு 300க்கும் மேற்­பட்ட உடற்­கு­றை­யுள்­ளோர், அவர்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­கள், பரா­ம­ரிப்­பா­ளர்­கள் ஆகி­யோ­ரு­டன் ஆலோ­சனை நடத்­தி­யது. இதன் முடி­வில் 29 பரிந்­து­ரை­க­ளு­டன் பெருந் திட்­டம் வெளி­யி­டப்­பட்­டது.

அனைத்து பரிந்­து­ரை­க­ளை­யும் அர­சாங்­கம் ஏற்­றுக்­கொண்­ட­தாக அர­சாங்­கத்­தின் சார்­பில் அறிக்­கையை பெற்­றுக்­கொண்ட சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் சூல்­கி­ஃலி தெரி­வித்­தார்.

கல்வி, வேலை வாய்ப்பு, பரா­ம­ரிப்பு ஆத­ரவு அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமூ­கம், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் பரிந்­து­ரை­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. இது, குறிப்­பி­டத்­தக்க அறிக்­கை­யா­கும். 2030ஆம் ஆண்­டு­வாக்­கில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமூ­கம் எப்­படி இருக்­கும் என்­பதை இது விவ­ரிக்­கிறது.

"இலக்கை நோக்கி முன்­னோக்­கிச் செல்­வ­தற்­கான வழி­யைக் காட்­டு­கிறது," என்று புதன்­கி­ழமை அறிக்­கை­யில் அமைச்­சர் மச­கோஸ் தெரி­வித்து இருந்­தார்.

8 சிறப்பு அம்­சங்­கள்

உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்­கும், சமூ­கத்­திற்கு அவர்­கள் பங்­க­ளிப்பை வழங்கு வதற்­கும் நேற்று வெளி­யி­டப்­பட்ட 2030ஆம் ஆண்டு பெருந்­திட்­டத்­தில் 29 பரிந்­து­ரை­கள் இடம்­பெற்­றுள்­ளன.

அறிக்­கை­யின் எட்டு சிறப்பு அம்­சங்­கள்:

1. உடற்­கு­றை­யுள்­ளோ­ரில் 40% வேலை வாய்ப்பு வழங்­கு­வது. 2020 முதல் 2021 வரை 15 முதல் 64 வய­து­டைய உடற்­கு­றை­யுள்­ளோ­ரின் வேலை வாய்ப்பு விகி­தம் 30.1% ஆக அதி­க­ரித்­தது. பெருந்­திட்­டம், 2030க்குள் இதை 40% ஆக உயர்த்த இலக்­குக் கொண்டு உள்­ளது.

2. மாற்று வேலை வாய்ப்பு களை உரு­வாக்­கு­வது.

3. ஏற்கெனவே உள்ள 22 சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளுடன் மேலும் ஐந்து புதிய சிறப்புப் பள்ளிகளை அமைப்பது. அத்­து­டன் இரண்டு முன்­கூட்­டியே தலை­யிட்டு உத­வும் மையங்­கள்.

4.உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான புதிய ஆத­ரவு மையங்­கள்.

5. உடற்­கு­றை­யுள்­ளோர், சமூ­கத்­தில் மற்­ற­வர் உதவி இல்­லா­மல் சுதந்­தி­ர­மாக வாழ உத­வும் பணிக்­குழு.

6. பாத­சா­ரி­கள் சாலை கடக்­கும் இடங்­களில் எந்­நே­ர­மும் ஒலிக்­கக்­கூ­டிய போக்­கு­வ­ரத்து சமிக்­ஞை­கள்.

7. உடற்­கு­றை­யுள்­ளோ­ரி­டையே மின்­னி­லக்­கப் பயன்­பாட்டை அதி­க­ரித்­தல்.

8. உடற்­கு­றை­யுள்­ளோ­ரி­டையே அறி­வுக்­கு­றை­பாடு உள்­ள­வர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் பொது மருத்­து­வர்­க­ளுக்­குப் பயிற்சி அளித்­தல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!