‘தாய்மொழி: புதிய, அதிக புத்தாக்க வழிகள் தேவை’

அனுஷா செல்வமணி

தாய்­மொழி கற்­ப­தில் இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு நாட்­டத்தை ஏற்­ப­டுத்த புதிய, அதிக புத்­தாக்க வழி­கள் தேவை என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார்.

கல்­வித் துறை­யி­னர், பெற்­றோர், சமூ­கத்­தி­னர் இதைச் சாதிக்க வேண்­டும் என்று அவர் அறை­கூ­வல் விடுத்­தார்.

புதிது புதி­தாக தலை­தூக்­கும் போக்கு­களைக்கொண்டு தாய்­மொ­ழி­யில் நாம் பிள்­ளை­க­ளி­டம் நாட்­டத்தை உரு­வாக்க முடி­யும் என்­றார் அவர். வகுப்­ப­றைக்கு அப்­பா­லும் தாய்­மொ­ழி­யைக் கற்­பதை மேம்­படுத்த நாம் அனை­வ­ருமே பங்­காற்­ற­லாம் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

தாய்­மொழி புழங்­கு­வ­தற்­கான சூழல் மேம்­பட வேண்டுமானால் அதற்கு வீட்­டுச் சூழ­லும் சமூ­கச் சூழ­லும் முக்கியமானவை என்­றார் அமைச்­சர்.

தாய்­மொழி பாடத்­திட்­டத்தைக் கல்வி அமைச்சு தொடர்ந்து பலப்­ப­டுத்தி வரு­கிறது. தாய்­மொழி அழ­கை­யும் கலா­சாரத்தையும் பிள்­ளை­கள் போற்றி கற்று மேம்­பட அமைச்சு தொடர்ந்து உத­வும் என்­றும் அமைச்­சர் சான் கூறி­னார்.

கல்வி அமைச்­சும் மூன்று தாய்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழுக்­களும் இணைந்து ஏற்­பாடு செய்த தாய்­மொ­ழிக் கருத்­த­ரங்கு 2022 நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்கேற்று அமைச்­சர் உரை­யாற்­றி­னார்.

'களிப்­பூட்­டும் கண்­டு­பி­டிப்­புக்­கான பூந்­தோட்­டம்' என்ற கருப்­பொ­ரு­ளில் கருத்­த­ரங்கு நடந்­தது.

நம் பிள்­ளை­கள், வாழ்­வின் முதல் 15 ஆண்­டு­களில் தாய்­மொ­ழி­யில் எப்­படி தேர்ச்சி ­பெ­று­கி­றார்­கள் என்­றில்­லா­மல் பள்ளி காலத்­தைத் தாண்டி அடுத்த 50 ஆண்­டு­க­ளுக்கு எப்­படி தாய்­மொ­ழி­யைப் புழங்கி புல­மை­யு­டன் உள்­ள­னர் என்­பதே அள­வு­கோ­லாக இருக்­க­வேண்­டும்.

வாழ்­நாள் கற்­றல் பய­ணத்­தில் தாய்­மொழி­யைக் கற்று புல­மை பெற மண­வர்­களி­டத்­தில் தொடக்­க காலத்­தி­லேயே நம்­பிக்­கையை வித்­தி­ட­வேண்­டும் என்று திரு சான் வேண்­டு­கோள் விடுத்­தார்.

மொழித் திறன் குறித்து பிள்­ளை­களை மட்­டம்­ தட்­டிக்­கொண்டே இருந்­தால் அவர்­களால் முடி­யாது என்ற எதிர்­மறை எண்ணம் ஏற்­படும் என்­றும் அதற்­குப் பதிலாக அவர்­களின் முன்­னேற்­றத்­தைச் சுட்­டிக்­காட்­டி­னால் அவர்­கள் தொடர்ந்து முன்­னேற்­றம் அடை­வ­தில் நம்­பிக்­கை பெற்று முயற்சியைத் தொடர்­வார்­கள் என்றும் அறி­வு­றுத்­தி­னார்.

தாய்­மொ­ழிக் கற்­றலை ஊக்­கு­விப்­ப­தில் பெற்­றோர்­க­ளின் பங்கு முக்­கி­ய­மா­னது என்ற அமைச்­சர் சான், இல்­லம்தோறும் இரு­மொழி வாசிப்­புப் பழக்­கத்தை உரு­வாக்க பெற்­றோர்­களை வலி­யு­றுத்­தி­னார்.

கருத்­த­ரங்­கில் பேசிய செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு தலை­வரு­மான திரு விக்­ரம் நாயர், பிள்­ளை­கள் விரும்பிப் பார்க்­கும் நகைச்­சுவை கேலிச்­சித்­தி­ரங்­களை தங்­கள் தாய்­மொ­ழி­யில் பார்க்க வைக்­க­லாம் என்­றும் கைப்­பேசி பயன்­பா­டு­களில் தாய்­மொழி சார்ந்த விளை­யாட்­டு­களைப் பிள்­ளை­கள் விளை யாட பெற்­றோர்­கள் ஊக்­கு­விக்­க­லாம்.

சிறுவர்களிடம் தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேலும் தூண்ட தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஏற்பாடு செய்யும் பல்வேறு நடவடிக்கைகளில் பெற்றோர் பிள்ளைகளுடன் பங்கேற்றால் அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக திகழ்வார்கள் என்று திரு விக்ரம் கூறினார்.

நிகழ்ச்­சி­யில் பார்­வை­யா­ள­ரா­கக் கலந்து கொண்ட எவர்­கி­ரீன் தொடக்­கப்­பள்ளியின் தாய்­மொழிப் பிரி­வின் தலை­வரான திரு­மதி சரஸ்­வதி, தமிழ் மாண­வர்­கள் முத­லில் தமி­ழில் பேசு­வ­தற்கு அச்­சப்­ப­டக்­கூ­டாது என்­றும் பெற்­றோரோடு ஆசி­ரி­யர்­கள் என்­றும் தொடர்­பில் இருப்­பார்­கள் என்­றும் கூறினார்.

தமிழ்­மொ­ழியைக் கற்­பிப்­ப­தற்குத் தயங்கும் பெற்­றோர்­கள், முத­லில் தங்­கள் பயத்தைப் போக்கி ஆசி­ரி­யர்­கள் கற்­பிக்கும் உத்­தி­களைத் தெரிந்­து­கொள்ள வேண்டும்.

அதோடு, ஆசி­ரி­யர்­கள் வழங்கும் வளங்­களைப் பயன்­ப­டுத்தி தங்­கள் பிள்ளை­களை ஊக்­கு­விக்க வேண்டு­மென்­றார் திரு­மதி சரஸ்­வதி.

மேலும் செய்தி பக்­கம்-2ல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!