எலிசபெத் டிரஸ்ஸை பிரதமராக நியமித்தார் எலிசபெத் அரசியார்

எலிசபெத் டிரஸ்ஸை பிரிட்­ட­னின் புதிய பிர­த­ம­ராக இங்­கி­லாந்து அரசி எலி­ச­பெத் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாக நிய­மித்­தார். மில்­லி­யன் கணக்­கான குடும்­பங்­கள், வணி­கங்­க­ளின் எதிர்­கா­லத்தை அச்­சு­றுத்­தும் பொரு­ளி­யல் மந்­த­நிலை, எரி­சக்தி நெருக்­க­டி­யி­லி­ருந்து நாட்டை மீட்டு வழி­ந­டத்­தும் பணி­யில் அவர் டிரஸ்ஸை அமர்த்­தி­னார்.

ஆறு ஆண்­டு­களில் நான்­கா­வது கன்சர்வேட்டிவ் பிர­த­ம­ரான திரு­வாட்டி டிரஸ், 96 வய­தான அர­சி­யா­ரால் அர­சாங்­கத்தை அமைக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டார். கொந்­த­ளிப்­பான மூன்­றாண்­டு­கா­லத்­துக்­குப் பிறகு பதவி விலக வேண்­டிய கட்­டா­யத்­திற்­குத் தள்­ளப்­பட்ட திரு போரிஸ் ஜான்­ச­னுக்­குப் பதி­லாக அவர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

எரி­சக்தி செல­வி­னங்­களை சமா­ளிக்க ஏறக்­கு­றைய 100 பில்­லி­யன் பவுண்­டு­கள் (S$163 பில்­லி­யன்) வழங்­கும் அதே­வே­ளை­யில், வரிக்­கு­றைப்பு மூலம் பொரு­ளா­தா­ரத்தை உயர்த்­து­வ­தற்­கான அவ­ரது திட்­டம் ஏற்­கெ­னவே நிதிச் சந்­தையை ஆட்­டம் காண­வைத்­துள்­ளது.

கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்­பி­னர்­க­ளின் வாக்­கு­களில் எதிர்­பார்த்­த­தை­விட குறைந்த அள­வி­லான வாக்கு வித்­தி­யா­சத்­தில் போட்­டி­யா­ள­ரான இந்­திய வம்சா வழி­யைச்­சேர்ந்த ரிஷி சுனக்கை தோற்­க­டித்த பின்­னர், தனது முன்­னோ­டி­க­ளை­விட பல­வீ­ன­மான நிலை­யில் பிரிட்­ட­னின் நெருக்­க­டியை சமா­ளிக்­கும் முயற்சியில் இறங்கியுள்ளார் டிரஸ்.

திரு­மதி மார்­க­ரெட் தாட்­சர், திரு­மதி தெரசா மே ஆகி­யோ­ருக்­குப் பிறகு பிரிட்­ட­னின் மூன்­றா­வது பெண் பிர­த­ம­ரா­கி­யுள்­ளார் 47 வய­தான திரு­வாட்டி ட்ரஸ்.

'யுகவ்' எனும் செயலி நேற்று முன்­தி­னம் நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பின்­படி, ஜான்­ச­னை­விட லிஸ் டிரஸ் சிறந்த பிரத­ம­ராக இருப்­பார் என்று பிரிட்­டிஷ் மக்­களில் எழு­வ­ரில் ஒரு­வரே கூறி­யுள்­ளார். கிட்­டத்­தட்ட கால்­வாசி மக்­கள் அவர் மோச­மாக செயல்­ப­டு­வார் என்று நினைக்­கி­றார்­கள்.

10, டவு­னிங் ஸ்தி­ரீட் அதி­கா­ர­பூர்வ பிர­த­மர் இல்­லத்­தில் நேற்­றுக் காலை­யில் கூடிய செய்­தி­யா­ளர்­கள், அர­சி­யல்­வா­தி­க­ளி­டம் பிரி­யா­விடை உரை­யாற்றிய திரு ஜான்­சன், நாடு ஒன்­று­பட வேண்­டிய நேரம் வந்­து­விட்­டது என்­றார். பின்­னர் தமது பதவி வில­கல் கடிதத்தை அர­சி­யா­ரி­டம் கொடுக்க ஸ்காட்­லாந்­து சென்றார்.

பிர­த­மர் லீ சியன் லூங், பிரிட்­ட­னின் பிர­த­ம­ரா­கப் பதவி ஏற்­றிக்­கும் லிஸ் டிர­ஸுக்கு தமது வாழ்த்து­க­ளைத் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!