உக்ரேன், உணவுப்பொருள் நெருக்கடி பற்றி ஐநா விவாதிக்கும்

அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் இந்த வாரம் ஐநா கூட்­டம் நடக்­கிறது. உக்­ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த விவ­கா­ரம், அத­னால் உல­க­ள­வில் ஏற்­பட்ட உணவு நெருக்­கடி பற்றி அந்­தக் கூட்­டத்தில் உல­கத் தலை­வர்­கள் விவா­திக்­கி­றார்­கள்.

என்­றா­லும் அந்த ஐநா கூட்­டத்­தின் மூலம் உக்­ரேன் பிரச்­சினைக்குத் தீர்வு ஏற்­படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரி­ய­வில்லை. மொத்­தம் 193 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட ஐநா பொதுப் பேர­வை­யின் கூட்­டம் செவ்­வாய்க்­கி­ழமை தொடங்­கு­கிறது. அந்­தக் கூட்­டத்­தின்­ மூ­லம் உக்ரேன் பிரச்­சி­னைக்கு அமைதித் தீர்வு ஏற்­படும் என்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் இல்லை என ஐநா தலை­மைச் செய­லா­ளர் அந்­தோ­னியோ குட்­ட­ரஸ் கூறி­னார்.

அந்­தப் பிரச்­சினை கார­ண­மாக புவி­சார் அர­சி­யல் சூழலில் கெடு­பி­டிப் போருக்­குப் பிறகு ஒரு­போதும் இல்­லாத அள­வுக்கு இப்­போது பிரச்சினைகள் அதி­கரித்துள்ளதாக திரு குட்­ட­ரஸ் கூறி­னார்.

உல­கம் போர், பரு­வ­நிலை, ஏழ்மை, பசி, ஏற்­றத்­தாழ்வு முத­லான இதர பல பிரச்­சி­னை­க­ளை­யும் எதிர்­நோக்­கு­கிறது. ஆனால், உக்­ரேன் பிரச்­சினையால் இதரப் பிரச்சி­னை­களில் கவ­னம் செலுத்த முடிய வில்லை என்று அவர் எச்­ச­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!