இணையத்தில் பாதகம்: கையாள 2023ல் விதிகள்

சிங்­கப்­பூ­ரில் இணை­யத்­தில் இடம்­பெறக்­கூ­டிய பாத­க­மான அம்­சங்­க­ளைச் சமா­ளிக்­கத் தோதாக அடுத்த ஆண்டு புதிய விதி­கள் நடப்­புக்கு வரக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­படுகிறது.

பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூடிய இணை­யத் தக­வல்­களை உள்ளூர் மக்­களை எட்­டு­ம் வழி­க­ளைக் கூடு­மா­ன­வரை குறைப்­பது விதி­க­ளின் நோக்கம். இணை­யத் தக­வல்­களை வடி­கட்டு­வது, பய­னீட்­டா­ளர்­கள் புகார் தெரி­விக்க வசதி முத­லா­னவை அவற்றில் அடங்­கும்.

இணை­யப் பாது­காப்­புக்­கான நடை­முறை நியதி, சமூக ஊட­கச் சேவை­களுக்­கான உள்­ள­டக்க நிய­தி­கள் ஆகி­ய­வற்­றின்கீழ் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள அந்தப் புதிய விதிகளுக்­குப் பொது­மக்­களின் ஆத­ரவு கிடைத்து உள்­ளது.

தொடர்பு, தக­வல் அமைச்­சு­டன் ஒருமாத காலம் நடந்த கலந்­து­ரை­யா­டல்­கள் மூலம் பொது­மக்­க­ளின் ஆத­ரவு தெரி­ய­வந்­தது. புதிய நிய­தி­கள் நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­படும். பிறகு அவை அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் அமலாகும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

அமைச்­சு­டன் கூடிய கலந்­துரையாடல்­கள் ஆகஸ்­டில் முடி­ந்­தன. பெற்­றோர், இளை­யர், கல்­வித்துறையினர், சமூக, தொழில்­து­றை­யி­னர் உள்­ளிட்ட 600 பேருக்கும் மேற்­பட்­டோர் அவற்­றில் கலந்து கொண்­ட­னர்.

பொது­வாக புதிய விதி­களை அவர்­கள் ஆத­ரித்­த­னர் என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, நேற்று ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார்.

சமூக ஊட­கங்­களில் இடம்­பெ­றக்­கூடிய ஆறு­ வகை தக­வல்­க­ளுக்குப் பாது­காப்புத் தரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதை பொது­வாக பொது­மக்­கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

பாலி­யல் தக­வல்­கள்; வன்­செ­யல் தக­வல்­கள்; சுய பாதிப்­புத் தக­வல்­கள்; இணை­யச் சட்­டாம்­பிள்­ளைத் தக­வல்­கள்; பொது மக்­கள் நல­னுக்கு ஆபத்து ஏற்­ப­டுத்­தும் தக­வல்­கள்; பாலி­யல் மற்­றும் திட்­ட­மிட்டு செய்­யப்­படும் குற்­றச்செயல்­க­ளுக்­குத் தோதான தக­வல்­கள் ஆகி­யவை அந்த ஆறு வகை தக­வல்­கள் ஆகும்.

சிங்­கப்­பூர் கையா­ளும் அணுகுமுறை, விளை­வு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண் டது என்­பதை தொழில்­துறையின­ருக்கு அமைச்சு விளக்­கி­யது.

குறிப்­பிட்ட சமூக ஊட­கச் சேவை­களை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளின் செயல்­முறை மாதி­ரி­களைக் கவ­னத்­தில்­கொண்டு, அத்­த­கைய நிறு­வ­னங்­க­ளின் சேவை­களில் இடம்­பெ­றக்­கூ­டிய பாத­க­மான அம்­சங்­களைச் சமா­ளிக்க மிக­வும் பொருத்­த­மான தீர்­வு­களை உரு­வாக்கி, அவற்றை அமல்­ப­டுத்­து­வ­தற்குத் தோதாக கொஞ்சம் நீக்­குப்­போக்கை அத்­த­கைய நிறு­வ­னங்­களுக்கு அமைச்சு வழங்­கும் என்­று தெரி­விக்­கப்­பட்­டது.

இணை­யத்­தில் இடம்­பெ­றக்­கூ­டிய பாத­க தக­வல்­கள் பற்றி பய­னீட்­டா­ளர்­கள் புகார் தெரி­விக்­கும்­போது அத்­த­கைய தகவல்­களை எட்­டு­வ­தற்­கான வழி­களை இணை­யத்­த­ளங்­கள் அடைத்­து­விட வேண்டிய சூழல் வர­லாம். அல்­லது வாடிக்­கை­யா­ளரின் ஈடு­பாட்டை மட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய நிலை வர­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!