பைடன்: சீனாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைப்பிடிக்காது

சீனா­வு­டன் மோதல் போக்கை தவிர்த்­துக்கொள்­ளும் வகை­யில் அந்த நாட்­டு­டன் கூடிய தக­வல் தொடர்­புக்­கான வழி­கள் எப்­போதுமே திறந்­தி­ருக்­கும் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் ஆசி­யத் தலை­வர்­க­ளி­டம் நேற்று உறுதி கூறி­னார்.

உல­கத் தலை­வர்­க­ளின் மூன்று உச்­ச­நிலை மாநா­டு­களில் ஒன்று நேற்று முடி­வ­டைந்த நிலை­யில், அதி­பர் பைடன் அந்த உறு­தி­மொழியை அளித்­தார்.

கம்­போ­டி­யா­வில் கிழக்கு ஆசிய உச்­ச­நிலை மாநாட்­டில் பேசிய அதிபர், சீனா­வு­டன் அமெ­ரிக்கா போட்­டி­யி­டும்; சீனா­வின் மனி­த­உரிமை விவ­கா­ரங்­கள் பற்றி வெளிப்­ப­டை­யா­க அமெரிக்கா பேசும் என்று தெரி­வித்­தார்.

அதே­வே­ளை­யில், தைவான் நீரிணை­யில் அமைதி முக்­கி­ய­மான ஒன்று என்­பதை அவர் வலி­யு­றுத்­திக் கூறி­னார். தென்­சீ­னக் கட­லில் போக்­கு­வ­ரத்­துச் சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­ய­தும் முக்­கி­யம் என்­றார் அவர்.

உக்­ரேனை ரஷ்யா ஆக்­கி­ர­மித்த காரி­யம் நியா­ய­மற்­றது, கொடூ­ர­மா­னது என்று அவர் வர்­ணித்­தார்.

அதே­போல, வட­கொ­ரி­யா­வின் ஏவு­கணை சோத­னை­களை அதி­பர் பைடன் குறை­கூ­றி­னார்.

ஆசி­யான் அமைப்­பு­டன் ஒப்­புக்­கொள்­ளப்­பட்டு இருக்­கும் அமைதித் திட்­டத்தை மியன்­மார் ராணு­வத் தலை­வர்­கள் நிறை­வேற்ற வேண்டும் என்­றும் அமெ­ரிக்க அதி­பர் கேட்டுக்­கொண்­ட­தாக வெள்ளை மாளிகை குறிப்­பிட்­டது.

சீனா பற்றி கருத்து கூறிய அதிபர், அமெ­ரிக்கா சீனா­வு­டன் முழு­மூச்­சா­கப் போட்­டி­யி­டும் என்றார். அதே­நே­ரத்­தில் தக­வல் தொடர்­புக்­கான வழி­க­ளை அது திறந்து வைத்­தி­ருக்­கும்.

இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான போட்டி மோத­லில் முடிந்­து­வி­டாது என்­பதை அமெ­ரிக்கா உறு­திப்­படுத்­தும் என்று அதி­பர் அந்த மாநாட்­டில் கூறி­ய­தாக அறிக்கை ஒன்­றில் வெள்ளை மாளிகை தெரி­வித்­தது.

தென்­கி­ழக்கு ஆசியா இந்த வாரம் இந்­தோ­னீ­சி­யா­வின் பாலி தீவில் ஜி20 உச்­ச­நிலை சந்­திப்பை நடத்­து­கிறது. அதற்கு முன்­ன­தாக அதி­பர் பைடன் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்கை சந்­திக்­கி­றார்.

இந்­தச் சந்­திப்பு பற்றி கருத்து கூறிய அமெ­ரிக்க அதி­பர், முன்பை­விட வலு­வான நிலை­யில் தான் சீன அதி­ப­ரைச் சந்­தித்­துப் பேசப்­போ­வ­தா­கத் தெரி­வித்­தார்.

அமெ­ரிக்­கா­வில் நடந்த இடைக்­கா­லத் தேர்­த­லில் அதி­பர் பைடனின் ஜன­நா­ய­கக் கட்சி மேல­வையைத் தன் கட்­டுப்­பாட்­டின்­கீழ் கொண்டு வந்து இருக்­கிறது.

இந்த வெற்­றி­யின் பின்­ன­ணியில் தான் முன்­பை­விட பலத்து­டன் சீன அதி­ப­ரு­டன் பேச்சு நடத்­தப் போவ­தா­க அதிபர் பைடன் தெரி­வித்­தார்.

அதி­பர் பைடன், கம்­போ­டி­யாவில் ஆசிய தலை­வர்­க­ளுடன் உச்சநிலை மாநாட்­டில் கலந்­து­கொண்­டார்.

அமெ­ரிக்க அதி­ப­ராக திரு பைடன் பதவி ஏற்­ற­தற்­குப் பிறகு முதன் முறை­யாக இந்­தோ­னீ­சி­யா­வில் ஜி20 உச்­ச­நிலை மாநாட்­டை­யொட்டி சீன அதி­பரை நேருக்கு நேரா­க இன்று சந்­திக்­கி­றார்.

அதி­பர் பைடன் பதவி ஏற்­றது முதல் இரு நாட்டு உறவு சீர்­கெட்டு வந்­தி­ருக்­கிறது.

பொரு­ளி­யல் போட்டி, மனித உரிமை விவா­ரங்­கள், சீனா­வுக்­கும் தைவா­னுக்­கும் இடை­யிலான பதற்­றம் ஆகி­யவை அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடைப்­பட்ட உற­வில் பிரச்­சி­னை­யைக் கிளப்பியுள்ளது.

இத­னி­டையே, பாலி மாநாட்­டில் உக்­ரேன் விவ­கா­ரம் பெரி­தும் விவா­திக்­கப்­படும் அம்­ச­மாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தொடர்ந்து பேங்­காக்­கில் நடக்கும் ஏபெக் மாநாட்­டி­லும் அந்த விவ­கா­ரம் சூடு­பி­டிக்­கும் என்று தெரி­கிறது.

உலக பரு­வ­நிலை கடப்­பா­டு­கள், உண­வுப் பொருள்­கள் கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்­தும் விவகாரம், தைவான் நீரிணை பதற்­றம், தென்­சீ­னக் கடல் நில­வ­ரங்­கள், வட­கொரிய ஏவு­கணை மிரட்­டல் ஆகி­யவை­யும் அந்த மாநா­டு­களில் முக்கிய கவ­னம் செலுத்­தப்­படும் அம்­சங்­க­ளாக இருக்­கும் என்று தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!