தமிழ் வானொலியின் முன்னாள் தலைவர் எம்.கே.நாராயணன் காலமானார்

வினோத் கருப்­பையா

சிங்­கப்­பூ­ரின் மூத்த ஊட­க­வி­ய­லா­ள­ரும் சிங்­கப்­பூர் தமிழ் வானொ­லி­யின் முன்­னாள் தலை­வ­ரு­மான திரு எம்.கே. நாரா­ய­ணன் நேற்று தமது இல்­லத்­தில் கால­மா­னார். அவ­ருக்கு வயது 86.

‘மர்மக் கதை மன்னன்’ என புகழப்படும் திரு நாராயணன் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட நாட­கங்­கள், ஒலி­ப­ரப்­புத் துறை­யில் 30 ஆண்­டு­கால அனு­ப­வம் என சிங்கப்­பூர் தமிழ் ஒலி­ப­ரப்பு வர­லாற்­றில் பெயர் பதித்­த­வர்.

1960களில் வானொ­லிக்­காக இவர் எழு­தித் தயா­ரித்த ‘மர்ம மேடை’ நாட­கங்­கள் பின்­னர் அது புத்­த­க­மா­க­வும் தொலைக்­காட்சி தொட­ரா­க­வும் வெளி­யா­னது.

மகாபாரதம் இவரது மற்றொரு முத்திரைப் படைப்பு. இந்­தியா, இலங்கை, மலே­சியா, சிங்­கப்­பூர் கலை­ஞர்­க­ளு­டன் இணைந்து 1980களில் வானொ­லிக்­காக எழு­தித் தயா­ரித்த மகா­பா­ர­தம் மக்­க­ளி­டையே பெரும் வர­வேற்­பைப் பெற்­றது.

எழுத்­தா­ளர், நாட­கக் கலைஞர், சமூக ஆர்­வ­லர் என பன்­முகம் கொண்ட திரு நாரா­ய­ணன், சிங்கப்­பூர் முன்­னாள் பிர­த­மர் லீ குவான் இயூ பற்­றிய ஒரு வர­லாற்று நூலை­யும் 2000ஆம் ஆண்­டில் வெளி­யிட்­டார். சிங்­கப்­பூர் இந்­திய நுண்­கலைக் கழ­கத்­தின் கலா­ரத்னா விருது உட்­பட பல விரு­து­க­ளைப் பெற்­றி­ருப்­ப­வர்.

சிங்­கப்­பூர் ஒலி­ப­ரப்­புக் கழ­கத்­தின் தமிழ் வானொ­லி­யில் 1962ஆம் ஆண்டு பணி­யில் சேர்ந்த திரு நாரா­ய­ணன், எழுத்து, நடிப்பு, தயா­ரிப்பு என பல பணி­களி­லும் ஈடு­பட்­டார். 1981ல் ஒலி­வழி நான்­கின் (இன்­றைய 96.8) தலை­வ­ரான இவர் 1994ல் ஓய்­வு­பெ­ற்றார். இவர் காலத்­தில் ஒலி­வழி நான்கு ஒலிக்­க­ளஞ்­சி­யம் எனப் பெயர் மாற்­றம் கண்­டது.

“சாங்கி தமிழ்ப் பள்­ளிக்­காக பாடு­பட்­ட­வர் நாரா­ய­ணன். அன்­பான மனி­தர், பழக இனி­மை­யா­ன­வர். சமூ­கத்­திற்­காக நல்ல நாடங்­கள் எழு­தி­யுள்­ளார். இவ­ரின் மறைவு சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் உல­கத்­திற்கு பேரிழப்பு,” என்­றார் அவ­ரு­டன் ஏறக்­கு­றைய 22 ஆண்­டு­கள் பணி­பு­ரிந்த ஊட­க­வி­ய­லா­ளர் செ.ப.பன்­னீர்­செல்­வம்.

தமிழ் முர­சின் இணை ஆசி­ரி­யர் வீ.பழ­னிச்­சாமி ஒலி 96.8 வானொ­லி­யில் பணி­யாற்­றி­ய­போது திரு நாரா­ய­ணன் அப்­பி­ரி­வின் தலை­வ­ராக இருந்­தார்.

“1984ல் மனோன்­ம­ணீ­யம் நாட­கத்தை மேடை­யேற்­றி­னார். பின்­னர் மாபெ­ரும் இரட்­டைக் காப்­பி­யங்­களில் ஒன்­றான மகா­பா­ர­தத்தை அறு­பத்து நான்கு பாகங் ­க­ளாக வானொலி நாட­க­மாக தயா­ரித்து சாதனை படைத்­தார். அவர் தயா­ரித்த மர்ம மேடை எனும் திகில் நாட­கத் தொடர் என்­றென்­றும் அவர் புகழ்­பா­டும்,” என்­றார் திரு பழ­னிச்­சாமி.

சிங்­கப்­பூ­ரின் மூத்த எழுத்­தா­ளர் 91 வயது பி.கிரு­‌ஷ்­ணன், திரு நாரா­ய­ண­னு­டன் ஒரே ஆண்­டில் சிங்­கப்­பூர் வானொ­லி­யில் சேர்ந்­த­வர். “பல புதிய நிகழ்ச்­சி­க­ளைப் படைத்து குறு­கிய காலத்­தில் மக்­கள் மனங்களில் வானொ­லிக்கு இடம்பிடித்­துக் கொடுத்­த­வர். இரவு 7 மணிக்கு ஒலி­ப­ரப்­பா­கும் மணக்­கு­வி­யல் என்­னும் பொது­மக்­கள் கலந்­து­கொள்­ளும் வானொலி நிகழ்ச்சி சிங்­கப்­பூ­ரின் பெரு­மை­யைப் பல நாடு­க­ளுக்கு எடுத்துச் சென்­றது,” என்­றார் மூத்த வானொ­லிக் கலை­ஞ­ரு­மான திரு பி.கிரு­‌ஷ்­ணன்.

மனைவி, மூன்று மகன்­கள், ஒரு மகள், பேரப் பிள்­ளை­களை அவர் விட்­டுச் சென்­றுள்­ளார்.

நாளை வெள்­ளிக்­கி­ழமை பிற்­ப­கல் 3.15 மணிக்கு எண் 21 லெண்­டோர் கிர­சென்ட் வட்­டா­ரத்­தில் திரு நாரா­ய­ண­னின் இறு­திச்­ச­டங்கு இடம்­பெ­றும். மாலை 4.15க்கு மண்­டாய் தக­னச் சாலைக்கு அவ­ரது நல்­லு­டல் எடுத்­துச்­செல்­லப்­பட்டு எரி­யூட்­டப்­படும் என்று அவ­ரது குடும்­பத்­தினர் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!