பராமரிப்பு வசதிகள் நிரந்தரமாக்கப்படும்

கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் சிங்­கப்­பூ­ரி­லுள்ள மருத்­து­வ­மனை­கள் நெருக்­கு­த­லுக்கு உள்­ளா­கா­மல் இருக்க ‘இடை­நிலை பரா­ம­ரிப்பு வச­தி­கள்’ (டிசி­எஃப்) செய்து தரப்­பட்­டன. இருப்­பி­னும் இந்த ‘டிசி­எஃப்’ பெரும்­பங்­காற்­றி­யதை அடுத்து சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அமைப்­பு­மு­றை­யின் முக்­கிய அங்­க­மாக அதைத் தக்­க­வைத்­திட அர­சாங்­கம் முடி­வெ­டுத்­துள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று நாடாளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

பொது மருத்­து­வ­ம­னை­களில் மருத்­துவ ரீதி­யாக நிலை­யாக உள்ள நோயா­ளி­கள், தாதிமை இல்­லம் அல்­லது தாதிமை இல்­லப் பரா­ம­ரிப்பு போன்ற நீண்­ட­கா­லப் பரா­ம­ரிப்பு ஏற்­பா­டு­க­ளுக்­காக காத்­தி­ருக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் இந்த ‘டிசி­எஃப்’ கைகொ­டுக்­கும்.

அத்­து­டன் மேற்­குப் பகு­தி­யில் இத்­த­கைய ‘டிசி­எஃப்’ தற்­போது இல்­லாத கார­ணத்­தால் இங் டெங் ஃபோங் பொது மருத்­து­வ­ம­னைக்கு அரு­கில் புதி­தாக ஒரு ‘டிசி­எஃப்’ வரும் மாதங்­களில் அமைக்­கப்­படும் என்­றார் அமைச்­சர் ஓங்.

கொவிட்-19 தொடர்­பில் சிங்­கப்­பூ­ரின் செயல்­பா­டு­கள் குறித்து இம்­மா­தம் 8ஆம் தேதி அன்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட வெள்ளை அறிக்­கையை ஒட்டி நடந்த விவா­தத்­தில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அடுத்த கொள்­ளை­நோய்க்கு சிங்­கப்­பூரை மேம்­பட்ட தயார்­நிலை­யில் வைத்­திட அர­சாங்­கம் அதன் ஏற்­பா­டு­களை ஆராய்­வதே இதன் நோக்­க­மா­கும்.

நாட்­டின் மருத்­து­வ­மனை ஆற்­றலை வலுப்­ப­டுத்­து­வது முக்­கி­ய­மான ஒரு திட்­ட­மா­கும். அத­னால் ‘டிசி­எஃப்’ நம் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அமைப்­பு­மு­றை­யின் இடை­நிலை அல்­லது நீண்­ட­கால அம்­ச­மா­க­வும் ஆக­லாம் என்று திரு ஓங் சுட்­டி­னார்.

“நெருக்­கடி காலத்­தில் நாம் கற்­றுக்­கொண்ட பாடங்­க­ளின் மூலம் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அமைப்­பு­மு­றை­யின் பல்­வேறு அம்­சங்­களை மேம்­ப­டுத்தி மீள்­திறனை மேம்­ப­டுத்­து­வ­தில் சிங்­கப்­பூர் உறு­தி­யாக உள்­ளது,” என்­றார் திரு ஓங்.

அத்­து­டன் சமூக மருத்­து­வ­மனை­கள் மற்­றும் தாதிமை இல்­லங்­கள் போன்ற அதன் சமூ­கம் சார்ந்த பரா­ம­ரிப்­புப் பிரிவை சிங்­கப்­பூர் தொடர்ந்து விரி­வு­ப­டுத்­தும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இத­னால் மருத்­து­வ­ம­னைப் படுக்­கை­க­ளுக்­கான அதி­க­ரிக்­கும் தேவையை நிறைவு செய்ய முடி­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மருத்­து­வச் சிக்­கல்­கள் உள்ள முதிய நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தால் இந்­தத் தேவை எழுந்­துள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே சுகா­தார அமைச்­சின்­கீழ் நிரந்­த­ர­மாக ‘நெருக்­கடி உத்­தி­பூர்வ, செயல்­பாட்­டுக் குழு­மம்’ அல்­லது ‘சிஎஸ்­ஓஜி’ இயங்­கும் என்­றும் அது நடுத்­தர நிலை தொற்­று­நோய்­களுக்­கும் இதர மருத்­துவ நெருக்­க­டி­க­ளுக்­கும் தயார்­நி­லை­யில் செயல்­படும் என்­றும் திரு ஓங் கூறி­னார்.

மேலும், சிங்­கப்­பூ­ருக்­குக் கிடைத்த தடுப்­பூசி மருந்­தில் சுமார் 15% அளவு, காலா­வ­தி­யாகி­விட்­டது என்­றும் அவற்­றின் மொத்த மதிப்பு ஏறத்­தாழ $140 மில்­லி­யன் என்­றும் அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

மேலும் நாடா­ளு­மன்­றச்

செய்திகள் - பக்கம் 2

பெயர் மாற்றம்: ‘சுகாதாரத் தலைமை இயக்குநர்’

சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகளின் இயக்குநர் என முன்னதாக அறியப்பட்டவர், இனி ‘சுகாதாரத் தலைமை இயக்குநர்’ என அழைக்கப்படுவார் என்று அமைச்சர் ஓங் அறிவித்துள்ளார். இவ்வாண்டின் பிற்பாதியில் சுகாதாரப் பாரமரிப்புச் சேவைகள் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்போது பேராசிரியர் கென்னத் மாக் இவ்வாறு அழைக்கப்படுவார் என்றார் திரு ஓங். இந்த மாற்றங்களுக்கு இடையே மருத்துவச் சேவைகள், பொதுச் சுகாதாரம் ஆகியவற்றில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!