புத்துணர்ச்சி அளிக்கும் நல்வாழ்வுச் சுற்றுலா

சுற்றுலாத் துறையின் எல்லைகள் வேகமாக விரிவடைந்து கொண்டே போகின்றன.

சாகசச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, நல்வாழ்வுச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, கலாசார சுற்று லா, ஓய்வுச் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உருவாகி வளர்ந்து வருகின்றன.

இதில் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் நல் வாழ்வுச் சுற்றுலா தற்போது மக் களிடையே பிரபலமாகி வருகிறது.

ஆரோக்கிய வாழ்க்கைமுறை

வாழ்க்கைக்கு மிகவும் முக்கிய மானது உடல்நலம், ஆரோக்கியம். இவை இரண்டுக்கும் அடிப்படை வாழ்க்கைமுறை.

ஆனால் பணம் தேடும் இயந்திர வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட தற்போதைய தலைமுறை யினர் ஆரோக்கிய வாழ்க்கைமுறை யில் இருந்து மெதுவாக விலகிக் கொண்டே செல்கின்றனர்.

எனவேதான் இன்றைய தலை முறையினர் உடலுக்கும் மனதுக் கும் புத்துணர்ச்சி அளிக்கும் நல் வாழ்வுச் சுற்றுலாவைப் பெரிதும் விரும்புகின்றனர்.

இந்த நல்வாழ்வுச் சுற்றுலாவின் மூலம் உடல், மனம், உணர்வு என அனைத்தையும் ஒருங்கிணைத்து சிறந்த வாழ்க்கைமுறையை வாழ முற்படுகின்றனர்.

அதிகரித்து வரும் ஆர்வம்

2015ல் 563 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நல்வாழ்வுச் சுற்றுலாத்துறையின் மதிப்பு 2017ல் 639 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள் ளது என்கிறது நல்வாழ்வு பொரு ளாதார கண்காப்பு அமைப்பு.

சிறந்த வாழ்க்கைமுறை யைப் பின்பற்றவேண்டும் என்ற விருப் பமும் சுற்றுலா மீதுள்ள ஆர் வமும் மக்களிடையே அதிகரித்து உள்ளதே இதற்கு காரணம் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.

2017ஆம் ஆண்டின் கணக் கெடுப்பின்படி நல்வாழ்வுச் சுற்றுலா செல்வதில் 292 மில்லியன் பய ணங்களுடன் ஐரோப்பா முதலிடம் வகிக்கிறது. 258 மில்லியன் பய ணங்களோடு ஆசிய பசிபிக் வட் டாரம் இரண்டாம் இடத்திலும் வட அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

விருப்பத் தேர்வு

சிங்கப்பூரிலும் நல்வாழ்வுச் சுற்றுலா செல்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறார்கள் இதற்காக பிரத்யே கமாக செயல்படும் பயண முகவர் கள்.

பெரும்பாலும் 20 முதல் 40 வயதுடைய பெண்கள் நல்வாழ்வுச் சுற்றுலா செல்ல விரும்புவதாகக் கூறுகிறார் சிங்கப்பூர் பயண முக வர் ஒருவர்.

இவர்களின் உதவியுடனோ சொந்தமாகவோ ஏற்பாடு செய்து உலகின் எந்த நாட்டுக்கு வேண் டுமானாலும் நல்வாழ்வுச் சுற்றுலா செல்லலாம்.

விதவிதமான நடவடிக்கை

பல்கேரியாவில் உள்ள ரோஜா தோட்டங்களுக்கு இடையே வாசனை சிகிச்சை முதல் நம் அண்டைநாடான இந்தோனீசியா வின் பாலித் தீவில் உள்ள ஸ்பா எனப்படும் நல்வாழ்வு மையங்கள் என நம் நேரத்திற்கும் செலவிற்கும் ஏற்ற சுற்றுலாவை அனுபவித்து புத்துணர்ச்சி பெறலாம்.

யோகா, வாசனை சிகிச்சை தவிர மலையேற்ற பயிற்சி, நீர் சறுக்கு, ஆயுர்வேத சிகிச்சை போன்றவை மூலமும் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்.

இந்த நல்வாழ்வு சொகுசு விடுதிகளில் ஆரோக்கிய உணவு பரிமாறப்படுவதால் இது சிறந்த உணவுப் பழக்கத்திற்கு மாற விரும்புபவர்களின் தேர்வாகவும் உள்ளது.

நம் அண்டை நாடான இந்தோனீசியாவின் பாலி தீவில் அயூங் ஆற்றங்கரையோரம் உள்ளது ‘ஃபைவ்எலமென்ட்ஸ்’ நல்வாழ்வு மையம். இங்கு வழங்கப்படும் பிரத்யேக ‘ஸ்பா’, பாரம்பரிய பாலி முறையிலான ஆரோக்கிய சிகிச்சை மூலம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. ஒருநாள் முதல் ஏழு நாட்கள் வரையிலான ஆரோக்கிய தொகுப்புகள் உள்ளன. சில நாட்கள் விடுமுறையில் சிங்கப்பூரில் இருந்து சென்று வருவதற்கு ஏற்ற இடம். பாலி விமான நிலையத்தில் இருந்து ஒரு மணி நேரத்தில் இந்த இடத்தை அடையலாம்.

படங்கள், செய்திகள்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!