டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலில் மேலும் 44 பேருக்குப் பாதிப்பு

தோக்கியோ: கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஜப்பானின் யொக்கோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலில் மேலும் 44 பேருக்கு அக்கிருமி தொற்றியிருப்பதாக ஜப்பான் சுகாதார அமைச்சர் கட்சுனோபு காட்டோ தெரிவித்துள்ளார். புதிதாக நடத்தப்பட்ட 221 மருத்துவப் பரிசோதனைகளில் இது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலில் கொரோனா கிருமித்தொற்றால் மொத்தம் 218 பேர் பாதிப்பட்டுள்ளனர். கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளில் ஒருவருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
பயணிகள், சிப்பந்திகள் என மொத்தம் 3,711 பேருடன் டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பல் கடந்த வாரம் ஜப்பானை அடைந்தது. கடந்த மாதம் அந்தக் கப்பல் ஹாங்காங்கில் இருந்தபோது அதிலிருந்து இறங்கிய பயணிக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருப்போர் அக்கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கப்பலில் பணிபுரியும் இரு இந்திய சிப்பந்திகளுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏறபட்டிருப்பதாக ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று கூறியது.
பயணிகள், சிப்பந்திகள் என இந்தியாவைச் சேர்ந்த மொத்தம் 138 பேர் டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலில் இருக்கின்றனர். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் ஜப்பானிய சுகாதார விதிமுறையின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலில் பணிபுரியும் மதுரை மாவட்டம், நாக
மலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்பழகன் பல்வேறு தகவல்களை வாட்ஸ்ஆப் காணொளி மூலம் வெளியிட்டுள்ளார்.
அவர் அனுப்பிய காணொளிகள் இந்திய அரசாங்கத்தின் கவனத் துக்கும் சென்றது.
சொகுசு கப்பலின் நிர்வாகம் பயணிகளையும் சிப்பந்திகளையும் நன்றாக கவனித்து வருவதாக அன்பழகன் தெரிவித்துள்ளார்.
“தற்போது முன்னெச்சரிக்கைக்காக முகக்கவசங்கள், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள கிருமி நாசினி, உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க வெப்பமானி ஆகியவற்றை கப்பலின் நிர்வாகம் எங்களுக்குத் தந்துள்ளது. அடிக்கடி தண்ணீர் குடிக்க, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,” என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிருமித்தொற்றால் பாதிக்கப்படாத முதியவர்களைக் கப்பலிலிருந்து வெளியேற்றி வேறோர் இடத்தில் அவர்களைத் தனிமைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் காட்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!