பங்ளாதேஷ் மருத்துவமனையில் தீ; ஐந்து கொவிட்-19 நோயாளிகள் உயிரிழப்பு

பங்ளாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீப்பற்றியதையடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த ஐந்து கொவிட்-19 நோயாளிகள் உயிரிழந்தனர்.

நேற்று (மே 27) நிகழ்த்த அந்த தீச்சம்பவத்துக்கான காரணம் தெரியவில்லை.

தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்ததாக தீயணைப்பு சேவைகளின் இயக்குநர் ஸில்லூர் ரஹ்மான் தெரிவித்தார்.

யுனைட்டெட் மருத்துவமனையின் தற்காலிக தனிமைப்படுத்தல் கூடாரங்களில் தங்கியிருந்த ஐவர் உயிரிழந்ததாகவும் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த 45 முதல் 75 வயதுக்குட்பட்டவர்களில் ஒருவர் பெண்.

அதிகரித்து வரும் கிருமித்தொற்று பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் பங்ளாதேஷ் அரசு திணறி வருகிறது. இதுவரை அங்கு 38,292 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 544 பேர் உயிரிழந்தனர்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online