பிலிப்பீன்ஸ்- அமெரிக்கா ராணுவப் பயிற்சி

மணிலா: அமெரிக்காவும் பிலிப்பீன்சும் சேர்ந்து மிகப் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. மொத்தம் 12 நாட்களுக்கு நீடிக்கும் இப்பயிற்சியில் இரு நாடுகளையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான வீரர்கள் பங்கு கொள்கின்றனர். தென்சீனக் கடல் பகுதி தொடர்பில் பதற்றம் நீடிக்கும் வேளையில் அமெரிக்காவும் பிலிப்பீன்சும் இப்பயிற்சியைத் தொடங்கியுள்ளன. இப்பயிற்சியில் சுமார் 5,000 அமெரிக்க வீரர்களும் கிட்டத் தட்ட 4,000 பிலிப்பீன்ஸ் வீரர் களும் பங்கு கொள்கின்றனர்.

தென்சீனக் கடல் பகுதி எல்லைத் தகராற்றில் மற்ற நாடுகள் தலையிட வேண்டாம் என சீன அரசாங்க ஊடகங்கள் எச்சரித்துள்ள வேளையில் பிலிப்பீன்சுடன் சேர்ந்து அமெரிக்கா இப்பயிற்சியை மேற் கொள்கிறது. பயிற்சியின்போது உண்மையான பீரங்கிக் குண்டு கள் பயன்படுத்தப்படவிருக்கின் றன. அப்பயிற்சியை நேரில் பார்க்க அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஆஷ் கார்ட்டர் அடுத்த வாரம் பிலிப்பீன்ஸ் வரவிருப்பதாகவும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க கடற்படை கப்பல் களையும் அவர் பார்வையிடுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தென்சீனக் கடல் பகுதியில் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதன் கோரிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் அந்தக் கடல் பகுதியில் சீனா பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வியட்னாம், தைவான், மலேசியா, பிலிப்பீன்ஸ், புருணை ஆகிய நாடுகளும் தென்சீனக் கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!