ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் மரணம்; பலர் காயம்

தோக்கியோ: ஜப்பானின் தென் மேற்குப் பகுதியை நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதில் 9 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்த தாகவும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். நிலநடுக்கத்தின்போது இடிந்து விழுந்த பல கட்டடங்களின் இடி பாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றுவதில் மீட்புக் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலை யில் பலி எண்ணிக்கை அதிகரிக் கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் கியூ‌ஷு தீவுப் பகுதியை வியாழக்கிழமை இரவு 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளி யில் ஓடிவந்ததாக தகவல்கள் கூறுகின்றன. வீடுகளைவிட்டு வெளியேறிய சுமார் 44,000 பேர் 500 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜப்பானை உலுக்கிய 6.5 ரிக்டர் நிலநடுக்கத்தின்போது இடிந்து விழுந்த ஒரு வீட்டிலிருந்து ஒரு மாதினை மீட்புக் குழுவினர் காப்பாற்றுகின்றனர். ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள மா‌ஷிகி நகரில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. வியாழக்கிழமை இரவு உலுக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வீடுகளைவிட்டு வெளியேறிய 44,000 பேர் 500 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றுவதில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!