டிரம்ப் கடும் தாக்கு: சீனாவின் வர்த்தகக் கொள்கை நியாயமற்றது

வா‌ஷிங்டன்: குடியரசுக் கட்சியில் அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள டோனால்ட் டிரம்ப், சீனாவின் வர்த்தகக் கொள்கையை கடுமையாகச் சாடி யிருக்கிறார். இண்டியானாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், "உலக வரலாற்றின் ஆகப்பெரிய திருட்டுக்கு சீனாவே பொறுப்பு," என்றார். "சீனா அதன் ஏற்றுமதிகள் உலகளவில் போட்டித் திறன் மிக்கதாக இருக்க வேண்டும் என் பதற்காகவே நாணய மதிப்பில் மாற்றம் செய்கிறது," என்று பில் லியனர் தொழிலதிபரான டிரம்ப் குறைகூறினார். "இந்த வகையில், இது, அமெரிக்காவின் வர்த்தகங்களை யும் ஊழியர்களையும் கடுமையாக பாதிக்கிறது.

"எங்களுடைய நாட்டை சூறை யாட இனியும் சீனாவை அனு மதிக்க மாட்டோம்," என்று ஞாயிறு பேரணியில் டிரம்ப் முழங்கினார். "இதை மாற்றிக் காட்டுவோம். மறந்துவிட வேண்டாம்," என்றார் அவர். திரு டிரம்ப் தனது தேர்தல் அறிக்கையில், அமெரிக்காவின் வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக் கும் உதவும் வகையில் சீனா வுடனான உடன்பாடுகள் இருக் கும் என்று உறுதியளித்திருந்தார்.

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மே தினப் பேரணியில் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளரான டோனால்ட் டிரம்பின் உருவப்பொம்மையுடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!