தொழிலாளர் சீர்திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் ஆர்ப்பாட்டம்

பாரிஸ்: பிரான்ஸில் க‌ட‌ந்த‌ ஒரு வார‌ கால‌மாக‌ வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்து வரு கின்றன. அரசாங்கம் உத்தேசித் துள்ள தொழிலாளர் சீர்திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. சுத்திகரிப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பொதுப் போக்குவரத்துத் துறை ஊழியர்களும் நேற்று வேலை நிறுத்தப் போராட்டங்களில் தீவிர மாக ஈடுபட்டனர். பிரான்சின் எட்டு சுத்திகரிப்பு நிலையங்களில் 6 சுத்திகரிப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்சின் முக்கிய நெடுஞ் சாலைக‌ளில் நேற்று சாலை ம‌றிய‌ல் போராட்ட‌ம் ந‌ட‌ந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகன டயர்களை தீ வைத்துக் கொளுததினர். ர‌யில்வே துறை ஊழிய‌ர்க‌ளும் அஞ்சல்துறை ஊழிய‌ர்க‌ளும் வேலை நிறுத்த‌ம் செய்தனர்.

மின்னியல் துறை ஊழியர் களையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுமாறு ஒரு தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. விமான‌ நிலைய‌ ஊழிய‌ர்க‌ளும் வேலை நிறுத்த‌ம் செய்ய‌ப்போவ‌தாக‌ அறிவித்துள் ளனர். பிரான்ஸின் ப‌ல‌ ந‌க‌ர‌ங் க‌ளில் க‌ல‌வ‌ர‌ங்க‌ள் மூண்டன‌. தொழிலாளர் சீர்திருத்த சட்டத்தில் அரசாங்கம் சில மாற்றங்களை நடப்புக்கு கொண்டு வரவுள்ளது. அந்த மாற்றங்கள் தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் என்பதால் அதற்கு எதிர்ப்பு பிரான்சில் ஆர்ப் பாட்டங்கள் நடந்து வருகின்றன. இத்தகைய ஆர்ப்பாட்டங்களால் நாட்டின் பொருளியல் பாதிக் கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் எச்சரித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரான்சில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்: படம்: ஏஎஃப்பி