இந்தோனீசிய நாடாளுமன்றம் புதிய வரி சட்டத்தை நிறைவேற்றவுள்ளது

ஜகார்த்தா: இதுவரை சொத்து வரி செலுத்தாமல் இருக்கும் பணக்காரர்கள் மற்றும் கோடீஸ்வரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் புதிய சட்டத்தை இந்தோனீசிய நாடாளுமன்றம் அடுத்த வாரம் நிறைவேற்ற இருப்பதாக இந்தோனீசிய அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனீசியாவில் உள்ள செல்வந்தர்கள் வரி செலுத்தாமல், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் சொத்துகளைப் பற்றிய விவரங்களை வரி வசூல் செய்யும் அதிகாரிகளிடம் வெளிப்படையாகத் தெரிவிப்பதை புதிய சட்டம் ஊக்குவிக்கும் என்று அந்த அதிகாரி கூறினார். செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளைப் பற்றிய விவரங்களை விரைவாகத் தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி